திருவானைக்கா தோன்றிய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் அருகில் உள்ள திருவானைக்காவல் வரலாறு.

திருவானைக்கா என்ற பெயர்  எவ்வாறு ஏற்பட்டது.?? அதன் பெயர் காரணம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.!!???

ஒரு முறை கைலாயத்தில் புஷ்பதந்தன் மாலியவான் என்ற இரு சிவகணங்கள் இருந்தனர் .இவர்களுக்குள் சிவத்தொண்டில் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது . நாளடைவில் இந்தப் போட்டி பொறாமையாக மாறி ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர்.

புஷ்பதந்தன் மாலியவானை  சிலந்தியாக பிறக்கும் படி சபித்தார். மாலியவான் அவனை யானையாக பிறக்கும்படி சபித்தார். இருவருடைய சாபமும் நிறைவேறியது.

இருவரும் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தனர் .அவர்களுக்கு முன் ஜென்ம ஞாபகம் புண்ணியபலன் காரணமாக அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு இருவரும் விடாமல் சிவத்தொண்டு செய்து வந்தனர்.

சிவலிங்கத்தின் மீது தூசு தும்பு சருகுகள் வெயில் படாத வண்ணம் சிலந்தி வலை பின்னியது. யானை சிவலிங்கத்தை வழிபட வரும் போது சிலந்தி வலையை இழுத்து சிதைத்துவிட்டு இறைவனை பூஜித்து சென்றது.

இது பல நாள் நடந்து கொண்டிருந்த காரணத்தினால் ஒரு நாள் சிலந்தி பொறுமை இழந்து யானையைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வேதனை தாங்காமல் துன்புற்ற யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. உடனே சிலந்தி இறந்தது. சிலந்தியின் விஷம் உடலில் தாக்கியதால் யானையும் இறந்து விட்டது.

யானை வேதனை தாங்காமல் துதிக்கையை நிலத்தில் அடித்தது அன்றி சிலந்தியை துன்புறுத்த வேண்டும் என்றோ கொல்ல வேண்டும் என்றோ நினைக்கவில்லை. அதன் காரணமாக யானையை மீண்டும் சிவகணங்களில் ஒன்றாக இறைவன் அருளினார் .ஆனால் அதேவேளையில் சிலந்தி யானையைக் கொல்ல வேண்டும் என்ற துர்குணத்தால்  யானையை கடித்ததால் மறுபிறப்பில்  சோழ பரம்பரையில் கோச்செங்கட் சோழ மன்னனாக பிறக்க அருள்புரிந்தார்.

திரு ஆனைக்கா என்றால் யானையும் சிலந்தியும் என்று அர்த்தம். அதன் காரணமாகவே திரு ஆனைக்கா என்று அந்த ஆலயத்திற்கு பெயர் ஏற்பட்டது.

மறு பிறவியில் கோச்செங்கட் சோழ மன்னனாக பிறந்த சிலந்தி பல சிவாலயங்களை கட்டியது. அதாவது சோழ மன்னன் கட்டினான் ஆனால் முன் பிறப்பின் வாசனை இருந்த காரணத்தினால் கட்டிய சிவன் கோயில் அனைத்திலும் யானை ஏறாதவாறு படிகளை அமைத்தது.(அமைத்தான்).

இதுவே திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் தோன்றிய வரலாறு

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்