மிருகசீரிஷம் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

நாம் இதுவரை தெய்வத்தைப்பற்றி கோயிலைப் பற்றி புராண இதிகாசங்களைப் பற்றி கண்டோம். முதன் முறையாக இன்று ஒரு நட்சத்திரத்தைப் பற்றி காண்போம் .27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தினுடைய மகிமையும் தன்மையும் காண்போம்.

இன்று நாம் காண இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் மிருகசீர்ஷம். இது எவ்வாறு தோன்றியது இதன் வரலாறு என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

சிரகசன்  என்னும் காலபைரவன் ஒருமுறை ஆதிசங்கரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது ஆதிசங்கரர் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க உங்களை நான் நரபலி கொடுக்க வேண்டும் .நீங்கள் யாரும் இல்லாமல் தனியாக என்னுடைய குகைக்கு நாளை மறுநாள் வரவேண்டும் என்று கூற அவ்வண்ணமே செய்கிறேன் என்று கூறி ஆதிசங்கரர் அவனுக்கு உத்தரவாதம் கொடுத்தார்.

கூறியபடியே ஆதிசங்கரர் நள்ளிரவில் அவனுடைய குகைக்கு வந்தார். அப்போது தாங்கள் கூறியபடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று அந்த காலபைரவன் கூற வாக்கு தவறாமல் நடந்த ஒரு மானின் கதையை கூறுகிறேன் கேள் என்று கூறி அவனிடம் கதை கூறலானார்.

ஒரு காட்டில் ஒரு ஆண் மான் ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு முறை ஒரு வேடனிடம் சிக்கிக் கொண்டது .அப்பொழுது அந்த மான் எனக்கு சிறிது அவகாசம் கொடுத்தால் நான் சென்று எனது மனைவியை பார்த்துவிட்டு வருவேன். நான் வாக்குத் தவற மாட்டேன் .சொன்ன சொல் காப்பாற்றுவேன் மனைவியை பார்த்துவிட்டு உடனே வருவேன் என்று மன்றாடியது.

அதன் வேண்டுகோளையும் இரங்கலையும் கண்டு மனம் உருகிய வேடன் அம் மானின் கோரிக்கையை ஏற்றான்.அது சென்று கண்டு மாலை வேடனிடம் வந்தது ஆண் மான் மட்டும் வரும் என்று நினைத்திருந்த வேடன் அம் மானை பிரிய மனமில்லாத அவனுடைய துணையையும் அது ஈன்ற  இரு குட்டிகளையும் அழைத்துக் கொண்டு வந்தது.

அனைத்தும் வேடனிடம் ஒருசேர வேண்டுகோள் விடுத்தது .நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் உயிர் வாழ மாட்டோம். ஆதலால் எங்களது அனைவரின் உயிரையும் ஏற்குமாறு வேடனை வேண்டின .அதுகண்டு வேடன் மனம் பதைபதைத்து விட்டான்.அதுகளுடைய அன்பையும் நேர்மையும் கண்டு அவன் மனம் சஞ்சலம் அடைந்தது.

அப்பொழுது சிவபெருமான் நேரில் தோன்றி மான்களின் நேர்மையும் அன்பையும் கண்டு மனம் நெகிழ்ந்து உங்களது உண்மையையும் நேர்மையையும் கண்டு மனம் நெகிழ்ந்து நான் உங்களுக்கு நட்சத்திர பதவியை வழங்குவேன் நீங்கள் வானில் பிரகாசமாக 27 நட்சத்திரங்களில் ஒன்றாக ஜொலிப்பீர்கள் என்ற வரத்தை அருளினார்.

அவ்வாறு சிவனால் அருளாசி வழங்கப்பட்ட நட்சத்திரமே மிருகசீரிஷம் நட்சத்திரம் ஆகும். மிருகசீரிஷ நட்சத்திரம் என்பது நான்கு நட்சத்திரங்களின் தொகுதியாகும். அந்த நான்கு தொகுதி என்பது இந்த நான்கு மான்களும் சேர்ந்து உண்டான தொகுதியாகும் .உண்மையும் நேர்மையும் அன்பும் மிகுந்த இருந்த காரணத்தினால் அந்த மான்களை சிவபெருமானே ஆசீர்வதித்து நட்சத்திரம் ஆக்கினார் .அவ்வாறு அன்பின் மிகுதியால் நேர்மையால் நியாயத்தால் வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் ஆகும்.

இதுவே மிருகசீரிஷம் நட்சத்திரம் தோன்றியதின் வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

(இதை நான் எழுதுவதற்குக் காரணம் எனது மனைவியும் மிருகசீரிஷ நட்சத்திரம் ஆகும்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்