மத்யமர் ஆண்டு விழா பிப்ரவரி 3ஆம் தேதி 2019
இன்று நாம் காண இருப்பது ."""மத்யமர் குழு சந்திப்பு"" (முதல் அடியெடுத்துக் கொடுத்தவர் நண்பர் சிங்கப்பூர் வி.வி அவர்கள் அந்த அடியில் இருந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன்).
பிப்ரவரி 3ஆம் தேதி மத்யமர் ஆண்டுவிழா நடப்பதை முன்னிட்டு பல்வேறு தகவல்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன .அதில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்..
1.திரு முகேஷ் அம்பானியின் வலது கையாக விளங்குபவர் திரு சுரேஷ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணர் .ஒரு சிறு துரும்பை எடுத்து அந்தப்பக்கம் போட வேண்டும் என்றாலும் சுரேஷ் ஐ கேட்காமல் முகேஷ் அம்பானி செய்யமாட்டார். அவ்வளவு பெயர் வாங்கியுள்ளார் திரு சுரேஷ் அவர்கள் .நேற்று அவருடன் உரையாடும் பொழுது அனேகமாக மத்யமர் மீட்டிங்கிற்கு 3ஆம் தேதி நானும் வந்தாலும் வருவேன் என்று ஒரு ஆச்சரிய தகவலை கொடுத்தார் . அதைக் கேட்ட நான் புளகாங்கிதம் அடைந்து விட்டேன்.
2.நான் டெல்லியில் விமானப்படையில் இருக்கும்பொழுது எட்டு வருட காலம் டெல்லியிலிருந்தேன். ஆதலால் எனக்கு vigyan சபையிலும் தலைமைச் செயலகத்திலும் எனது பல நண்பர்கள் இருக்கிறார்கள் .இன்றும் அவர்களுடன் தொடர்பு உள்ளது. அத்தகைய தொடர்பின் காரணமாக நேற்று விக்யான் சபாவில் முக்கியமாக அவசரமாக ஒரு மீட்டிங் நடந்தது. அதன் நகலை என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி உள்ளார் .அதை அப்படியே இங்கு பகிர்கிறேன்.
Place ::Capital of India
Location ;:Delhi vignyan Sabha
Purpose of meeting::to maintain law and order.
Occurring place.. Capital of Tamil Nadu.
Exact location:: Chennai t.nagar Infosys Hall.
Date:; February 3rd.
Venue:: Madyamar meeting.
11 1.2019 member of Parliament and Delhi high officials ;under Secretaries joint secretaries and high dignitaries are assembled here to maintain the law and order situation at tamilnadu on 3rd February.
Home secretary informed that a havoc is going to happen on 3rd February at Chennai. Hence tight security should be provided on that day .bus ;train; taxies ;autos ;everything will be planning to charge the rate hiking by minimum of 300% because of all tamilnadu members are assembleing in one place.hence it should be controlled .
Also 5000 soldiers deployed to maintain the law and order and also to control the rush of Tamil Nadu Infosys hall .thousand persons from Assam rifles thousand persons from gorkha rifles thousand personal from border security Force thousand persons from paramilitary force and thousand persons from army Navy and airforce will be deployed to maintain the security and law and order on 3rd February at T nagar Infosys call.
Our Honorable prime Minister thinking to visit Kerala .sometimes en route he may halt at Chennai and maybe visiting to madyamar meeting this is highly confidential and not to inform to anybody .so that only this tight securities arranged.
மேற்கண்ட செய்தி தான் எனக்கு எனது நண்பன் மூலம் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்டது. அதை அப்படியே இங்கு மத்யமர் நண்பர்களுக்காக தருகிறேன். புரிந்து கொள்ளாதவர்கள் அடுத்தவரை கேட்டு தமிழ் மூலம் டிரான்ஸ்லேட் செய்து படித்து புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் அவசரமாக முதல்வரும் துணை முதல்வரும் கலந்து எம்எல்ஏக்களுடன் ஆலோசித்ததாக ஒரு சிறு கொசுறுத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது .அதாவது.
வருகிற பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி மத்யமர் குழுவில்ஒரு மீட்டிங் நடக்க இருப்பதால் அதில் நம்முடைய பங்கு பங்களிப்பு என்ன அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தரலாமா என்பது போன்ற முக்கிய குறிப்புகளுடன் தொடர்ந்து மீட்டிங் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் முற்றுப் பெறாத காரணத்தால் நாளையும் நடைபெறுவதால் அதனுடைய முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கிடையில் தமிழக திமுக தலைவர் உடன்பிறப்புகளே .என் ரத்தத்தின் ரத்தமே மத்யமர் மீட்டிங் நடத்துகிறீர்களா .நீங்கள் அனைவரும் என்னைச் சார்ந்தவர்கள். அன்றே என் தலைவன் உரைத்தான் .அனைவரையும் ஒரு தாய் பெற்றெடுக்க வயிறு தாங்காக் காரணத்தால் தனித்தனி தாய் ஈன்றெடுத்த தம்பியரே என அழைத்து 'நிலவில் குளிரென' "நிலமிசை வளமென"" காற்றினில் ஒலியென" என் தம்பிகள் கூடுகிறார்கள் .அவர்களுக்கு வேண்டியதை நான் செய்வேன் என்று உங்கள் மூலம் நான் உறுதியளிக்கிறேன் உறுதியளிக்கிறேன் உறுதியளிக்கிறேன் என்று திமுக தலைவரும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் தமிழிசை அவர்கள் திமுக தலைவருக்கு உளறுவதே என்றும் வாடிக்கையாகிப் போய்விட்டது. அவர் வேடிக்கையாக கூறுகிறார் .மத்யமர் மக்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என் உடல் உள்ளம் அனைத்தும் அவர்களைச் சார்ந்தே இருக்கும் .அவர்கள் பாஜகவின் பக்கமே இருப்பார்கள் இருப்பார்கள் என்று நானும் கூறிக் கொள்கிறேன் என்று அவரும் உரையாற்றியுள்ளார்.
ஆகையால் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தொழில் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் பிரபல பண்டிதர்களும் மேதைகளும் ஞானிகளும் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியும் உவகையும் அடையும் அதேவேளையில்
நாமோ ஒரு கொசு .ஒரு ஈ .ஒரு எறும்பு. பிரபலமாகவில்லை. யார் கண்ணுக்கும் தெரியவும் மாட்டோம். So எறும்பு என்று மிதித்து விடுவார்களோ!! கொசு என்று அடித்து விடுவார்களோ!! ஈ என்று விரட்டி விடுவார்களோ!! என்ற ஒரு பயம் உள்ளூர இருக்கிறது. வரவேற்பார்களா கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா?? மதிப்பார்களா?? நல்ல பேர் கிடைக்குமா?? கிடைக்காதா ??நாமும் ஒரு மனிதனாக வாழ்வோம் என்ற ஐயப்பாடும் சந்தேகம் மனதில் இருந்து கொண்டே இருந்தாலும் நமது கடமை பணி செய்து கிடப்பதே என்ற ஒரே காரணத்தினால் நமது நண்பர்கள் அனைவருடனும் கலந்து உரையாடி அளவளாவி உண்டு மகிழ்ந்து இருப்போம் என்ற ஒரே குறிக்கோளுடன் நானும் கலந்து கொள்கிறேன் என்று இங்கு கூறக்
கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி நன்றி நன்றி
அன்பன். வாசுதேவன் பொள்ளாச்சி.
நன்றி
(நான் நண்பர் வி.வி.க்கு குடுக்கும் முதல் அடி ""வாருங்கள் மத்யமர் நண்பர்களே வரவேற்கிறோம்)
அதாவது முதல் அடி என்றால் முதல் வரி அதாவது தொடக்க வரி என்பதாகும்.
Comments
Post a Comment