புஷ்கர் மற்றும் புஷ்கரணி பிரம்மா தவம் செய்த இடம் கஜேந்திர மோட்சம் சரஸ்வதிதேவி பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்த வரலாறு அனைத்தும் அடங்கும்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது நேற்றைய பதிவின் தொடர்ச்சி .அதாவது பிரம்மா தோன்றிய விதம் புஷ்கரம் தோன்றிய விதம் காயத்ரி தேவி தோன்றிய விதம் பிரம்மாவிற்கு பூமியில் கோயில் இல்லாமல் போனதற்கான காரணம். பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்த தற்கான காரணம் கஜேந்திரமோட்சம் அனைத்தும்.

இனி வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்ப்போமா.

1. பிரம்மாவின் தோற்றம்.

திருப்பாற்கடலில் மகாவிஷ்ணு சயணித்துக் கொண்டிருக்கிறார் .அவருடைய நாபிக் கமலத்தில் இருந்து தாமரை புஷ்பம் தோன்ற அதில் பிரம்மா தோன்றினார் .உடனே பிரம்மா மகாவிஷ்ணுவை பார்த்து பிரபுவே என்னை தோற்றுவித்ததற்கான காரணம் என்ன .நான் என்ன செய்யவேண்டும் என்று வினவினார். உடனே மகாவிஷ்ணு தன் நாபிக் கமலத்தில் தோன்றிய  தாமரை கொடியை உடைத்து பிரம்மாவின் கையில் கொடுத்து நீ பிரம்மலோகம் சென்று இந்த தாமரை புஷ்பத்தை பிரம்ம லோகத்தில் இருந்து கீழே விடு. அது எங்கு சென்று விழுகிறதோ அந்த இடத்தில் நீ தவம் செய்யத் தொடங்குவாயாக என்று பணித்தார் .உடனே பிரம்மா பிரம்மலோகம் சென்று தன் கையில் உள்ள தாமரை புஷ்பத்தை  கீழே  விட அது அகில உலகத்தையும் சுற்றி நேராக புஷ்கரம் என்ற இடத்தில் விழுந்தது.அந்த தாமரை புஷ்பம் உடைந்து நீர் பெருக்கெடுத்து தடாகமாக மாறியது .அதுவே புஷ்கரணி .

2. பிரம்மா தோன்றிய விதம் புஷ்கரம் தோன்றிய விதம் பார்த்தோம். அடுத்தபடியாக காயத்ரி தேவி தோன்றிய விதத்தைப் பார்ப்போம்.

பிரம்மா அந்த இடத்தில் யாகம் வளர்த்து தவம் செய்ய விரும்பினார் .உடனே தனது மானசீக புத்திரனான நாரதரை அழைத்து நீ சென்று சாவித்திரி தேவியை அழைத்து வா என்று கூறினார். சாவித்திரி தேவி தான்  பிரம்மாவின் முதல் பத்தினி.ஆனால் நாரதரோ உலகத்திற்கே கலகம் உண்டாக்கும் நான் என் தாய் தந்தையருக்கு கலகம் உண்டாக்காமல் விடுவேனா என்று எண்ணி சரி தந்தையே என்று சொல்லி சாவத்திரி மாதாவிடம் சென்று தந்தை யாகம் செய்ய தங்களை அழைக்கிறார். தாங்கள் நன்கு அலங்கரித்து சீவி முடித்து சிங்காரித்து செல்ல வேண்டாமா. கூப்பிட்ட உடனே செல்லலாமா. நன்கு தங்களை தயார் செய்து கொண்டு வரவும் என்று கூறி நேரடியாக தந்தையிடம் வந்து தந்தையே தாயார் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கு இன்னும் நேரமாகும் என்று கூறிவிட்டார். அன்று சிவராத்திரி .சிவ பூஜையை தகுந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ஆவல் உந்த பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் பிரம்மாவின் படைத்தளபதிகளான குபேரனும் இந்திரனும் இருந்தார்கள். அவர்களில இந்திரனை அழைத்து நீ சென்று கிராமத்தில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் அவளை அழைத்துக் கொண்டு வா. நான் யாகம் செய்கின்றேன் என்று கூறினார் .காரணம் யாகம் ஹோமம் செய்யும் பொழுது பத்தினி அவசியம்.

இந்திரனும் அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு மாடு மேய்க்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான் அந்த பெண்ணை இருத்தி யாகம் செய்யும் பொழுது அங்குள்ள பிராமணர்கள் அனைவரும் பிரம்மாவிடம் தாங்கள் பிரம்மா  லோகத்திற்கே அதிபதி தாங்களே ஒரு பிராமணர் இல்லாத மற்றொரு பெண்ணை வைத்து யாகம் செய்யலாமா .இது தவறல்லவா என்று கூறி அந்தப் பெண்ணை வேத மந்திரங்கள் ஓதி புல்லாக (வைக்கோல்) ஆக மாற்றி தெய்வீகப் பசு தேவலோகப் பசுவான காமதேனுவை அழைத்து அந்த புல்லை காமதேனுவுக்கு மூன்று தடவை கொடுத்து அதன் வயிற்றிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார்கள் (தமிழ்நாட்டில் விசுவாமித்திரர் உடலை (காயம் kha காயத்தை உடலை திரியாக்கி தவம் செய்ததால் காயத்திரி தோன்றியதாக வரலாறு .ஆனால் உண்மையில் காய் gha ghai என்றால் பசு)பசுவில் இருந்து தோன்றி மூன்று முறை அதற்கு ஆகாரம் கொடுத்து அந்தப் பெண் உருவானதால் அதற்கு காயத்திரி என்று பெயர் ஏற்படலாயிற்று. இதுவே வேத மாதா காயத்ரி தோன்றிய வரலாறு.

இவ்வாறு தோன்றிய காயத்ரி மாதாவுடன் பிரம்மா யாகம் செய்து ஓம் பூர் புவ என்ற மந்திரம் ஒலிக்க அந்த மந்திரத்தின் ஒலி எங்கும் பரவ  யாரை வைத்து என் கணவர் யாகம் செய்கிறார் என்று அறிய சாவித்திரி மாதா  வேகமாக புறப்பட்டு வரும் பொழுது காயத்ரி தேவியை வைத்து யாகம் செய்வதை பார்த்து வெகுண்டு நான் இருக்க வேறொருத்தியை வைத்து யாகம் செய்ய முனைந்த பிரம்மாவிடம் அனைவருக்கும் பூலோகத்தில் கோயில் உண்டாகும் .உனக்கு இனி கோயில் என்பதே பூலோகத்தில் உண்டாகாது.உருவ வழிபாடு உனக்கு உண்டாகாது .கோயிலும் உங்களுக்கு பூலோகத்தில் இல்லை என்று கூறி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தின் காரணமாகவே இன்று வரை பூலோகத்தில் பிரம்மாவிற்கு கோயில் என்பது கிடையாது. இதுவே பிரம்மாவிற்கு பூலோகத்தில் கோயில் இல்லை என்பதற்கான வரலாறு.

அடுத்தபடியாக சாவித்திரி தேவிக்கும் பிரம்மாவிற்கும் தோன்றியவர்தான் சரஸ்வதி தேவி. சாவித்திரி தேவி சாபம் கொடுத்து சென்றுவிட்டார் .காயத்திரி தேவியை வைத்து இனி யாகம் செய்ய முடியாது. ஆதலால் தன் முன் அமர்ந்திருப்பவள் மகள் என்று மறந்து அவளை வைத்து யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்து மனைவியாகப் பாவித்து சரஸ்வதி தேவியை வைத்து யாகம் செய்யத் தொடங்கினார் .இதைக் கண்ட சிவபெருமான் வெகுண்டெழுந்து மகளை வைத்து யாகம் செய்கிறாயா என்று கூறி பிரம்மாவிற்கு இயற்கையிலேயே ஐந்து தலைகள் உள்ளது. அந்த ஐந்தாவது தலையை சரஸ்வதிதேவியை வைத்து யாகம் செய்ததன் காரணமாக சிவபெருமான் கிள்ளி எடுத்து விட்டார். இதுவே பிரம்மா ஐந்தாவது தலையை இழந்ததற்கான வரலாறு.

இந்த புஷ்கரணியில் நாரதரால் சாபம் பெற்ற கந்தர்வனும் அகத்தியரால் சாபம் பெற்றவனும் யானையாகவும் முதலை யாகவும் பிறந்து ஒரு நாள் யானை நீரருந்த வரும் பொழுது முதலையால் பிடிக்கப்பட்டு ஆதிமூலமே என்று கதற மகாவிஷ்ணு வந்து முதலையை கொன்று யானையை ரட்சித்து இருவருக்கும் மோட்சம் அளித்தார் .இதுவே கஜேந்திரமோட்சம் இந்த புஷ்கரணியில் தோன்றியதற்கான வரலாறு.

மேற்கூறிய சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை அளித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

இதுவே பிரம்ம தோன்றிய விதம் காயத்ரி தேவி தோன்றிய விதம் கஜேந்திரமோட்சம் சரஸ்வதிதேவி பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தது அனைத்துக்கும் ஆதார சுருதி

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்