ஒட்டகச்சிவிங்கி

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது தாய்மையின் பெருமை. தாய்மையைப் போற்றுவோம். தாய்மையை போற்றுவோம்.

விலங்கு பறவை மனிதர் அனைவருக்கும். தாய்மை உணர்வு ஒன்றே . தாய்மையை தாய்மை உணர்வை புரிந்து கொள்ள  முடியாதவர்கள் இருக்கலாம்  அதனால்  தாயின் அன்பு என்றும் குறைவது இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இன்று நாம் ஒரு சிறுகதையை பார்ப்போம்.

கோழி முட்டையிட்டு அடைகாத்து தன்னுடனேயே வைத்து பராமரித்து குஞ்சு பொரிக்கும் இது ஒருவகை தாய்மை.மீன் முட்டையிட்டு தன் கண்களிலேயே அன்பைப் பெருக்கி தாய்மையின் பாசத்தை காட்டி முட்டையை உற்றுநோக்கி குஞ்சு பொரிக்கும். இது மற்றொரு வகை. ஆமை கடலில் இருந்து வெகுதூரம் வந்து மணலைத்தோணாடி முட்டையிட்டு மூடி விட்டு எங்கோ வெகுதூரம் சென்று விடும்.  ஆனால் நினைவு முழுவதும் முட்டையின் பேரிலேயே இருக்கும் நினைவாலேயே முட்டை பொறிக்கும் . இதெல்லாம் ஒரு வகையான தாய்மை.

இன்று நாம் காண இருப்பது ஒட்டகச்சிவிங்கி குட்டி போடும் முறை.(giraffe).(மன்மதலீலை படத்தில் கமலஹாசன் கடி ஜோக்ஒன்று சொல்லுவார். ஒட்டகசிவிங்கி முட்டை போடாது ஏன் தெரியுமா ???அடுத்தவர் தெரியாதே!!! ஏன்னா அவ்வளவு உயரத்திலிருந்து முட்டை போட்டா உடஞ்சுரம் இல்ல அதான் என்பார்).

ஒட்டகச்சிவிங்கி தாய்மை பேறு காலம் தொடங்கி குட்டி பிறந்த உடனே மாடு யானை போன்ற விலங்குகள் தன் குட்டியை திரையை மூடி இருக்கும் வெள்ளைத் தோலை நீக்க நாக்கால் நக்கி தன் அன்பை காண்பிக்கும்.ஆனால் ஒட்டகச்சிவிங்கி பிரசவ வலியையும் பொறுத்துக்கொண்டு குட்டி பூமியில் விழுந்த உடன் உடலை  மூடி இருக்கும் திரையை கூட நீக்காமல் முன்னங்கால்களை விட பின்னங்கால்களில் வலுஅதிகமிருக்கும் என்பதால் இடது பின்னங்காலால்  குட்டியை ஓங்கி ஒரு எத்து எத்தும். அது16 அடி தூரம் போய் விழும்.

மீண்டும் நடந்து சென்று குட்டியை மீண்டும் ஒரு எத்து ஒத்தும். அது மீண்டும் 16 அடி தூரம் போய் விழும். இதற்குள் மேல் தோல் முழுவதும் நீக்கப்பட்டிருக்கும் .மீண்டும் குட்டியிடம் சென்று காலால் மீண்டுமொரு உதை விடும் .அது மீண்டும் வெகுதூரம் போய்விழும். இதற்குள் மூடியிருந்த  திரை முழுமையாக நீக்கப்பட்டிருக்கும் .மீண்டும் குட்டியிடம் செல்லும்பொழுது குட்டி தூர இருந்து பார்க்கும். ஐயோ அம்மா வரா அடிப்பா  உதைப்பா  என்ன பண்றதுன்னு தட்டுத்தடுமாறி பிஞ்சு கால்களைத் தரையில் ஊன்றி சிரமப்பட்டு தாய் அருகில் வந்தவுடன் ஓட்டமாக ஓடும். உடனே தாய் குட்டியை அரவணைத்து நாக்கால் நக்கி பால் கொடுக்கும். இது ஒருவகையான தாய்மை.

ஒட்டகச்சிவிங்கி இவ்வாறு செய்வதற்கு காரணம் பிறந்தவுடன் அன்பை செலுத்தினால் அது சோம்பேறியாக படுத்தே கிடக்கும். நாம் வசிப்பதோ வனத்தில் காட்டில் இங்கு கொடும் விலங்குகள் சிங்கம் புலி நரி கரடி ஓநாய் முதலியவைகள் உள்ளன .தன் குட்டியோ முடியாமல்  படுத்து இருந்தால் அவைகள் ஒரே நிமிடத்தில் தன் குட்டியை அடித்துக் கொன்று தின்று விடும் .ஆதலால் பிறந்த உடனே ஓடப் பழக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தாய்மையின் அன்பை மறைத்து குட்டியின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு குட்டியை ஓடப் பழகுவதற்கு பிறந்த உடனேயே இவ்வாறு ஒட்டகச்சிவிங்கி செய்கிறது .இது ஒரு வகையான தாய்மை.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தாய் தந்தையர்கள் தன் குழந்தைகளை அடிக்கிறார்கள் சிரமப்படுத்துகிறார்கள் என்று நினைக்காமல் குழந்தையின் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் சிரமப் படுத்துகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்