சாம்பார் தோன்றிய வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது தமிழ்நாட்டில் மிக முக்கியமான உணவு ஐட்டமான சாம்பார் உருவான விதம்.
அதாவது காலையில் நாம் சிற்றுண்டி இட்லிக்கு பயன்படுத்துவதில் தொடங்கி மதிய உணவு இரவு டிபன் என்று சாம்பாரை பயன்படுத்தாத தமிழரகளே இல்லை என்று கூறும் அளவிற்கு சாம்பார் மிகவும் பிரபலமானது. அத்தகைய சாம்பார் தோன்றியது எவ்வாறு என்பதை சற்று விரிவாக விளக்கமாக காண்போமா????.
தஞ்சாவூரை மராத்திய மன்னர் ஷாஜி ஆண்டுகொண்டிருந்தார். அவர் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் ஆவார் .அப்பொழுது சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சைக்கு விஜயம் செய்தார் .அங்கு சாம்பாஜி மகாராஷ்டிராவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவான ""டாலை"" சாப்பிட விரும்பினார் .அதில் ஒரு பிரச்சனை இருந்தது.
அதாவது மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் ""டாலை"" தயாரிக்க பயன்படும் பதார்த்தங்களில் மிக முக்கியமானது கோகம் எனும் பழம் .அது தஞ்சையில் கிடைக்கவில்லை. அதற்கு பதில் என்ன செய்வது என்று தலையை பிடித்துக் கொண்டிருந்தார் சமையற்காரர். இறுதியாக கோகத்திற்கு பதிலாக புளியை உபயோகித்து தயாரித்தார் சமையல்காரர். சாம்பாஜி உட்பட எல்லோரும் அதை மிகவும் விரும்பி உண்டனர். அந்த உணவு தஞ்சை அரச குடும்பத்தின் ஆஸ்தான உணவாகவே மாறியது. சாம்பாஜி ஆகர் (ஆகாரம்/ உணவு) என்று அழைக்கப்பட்டது .நாளடைவில் அந்த பெயர் சுருங்கி சாம்பாஜி ஆகர் என்பது சாம்பார் என்று ஆனது.
இதுவே சாம்பார் தோன்றியதற்கான வரலாறு. இதைப்பற்றிய முழு குறிப்பும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் மராட்டிய அரசவை குறிப்புகளில் காணப்படுகிறது.
இதுவே சாம்பார் தோன்றிய வரலாறு
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment