ததி பாண்டன் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது தெய்வத்திற்கே பாடம் புகட்டிய பக்தனின் கதை. அது என்ன தெய்வத்திற்கே பாடம் புகட்டிய பக்தனின் கதை அதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

திருச்சி ஸ்ரீரங்கம் பத்மாவதி தாயாருக்கு எதிரே உள்ள ராமாயணம் அரங்கேறிய கம்பர் மண்டபம். சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது . கதாகாலட்சேபம் ஆற்றிக் கொண்டிருக்கிறார் உபன்யாசகர். நமது கதையின் நாயகர் தீவிரமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். உபன்யாசகர் சொல்லி முடித்தவுடன் கூட்டத்திலிருந்து விடுவிடுவென்று எழுந்து நேராக ரங்கநாதரிடம் செல்கிறார் .எதற்கு ???பார்ப்போம்!!!.

நேராக ரங்கநாதரிடம் சென்று ரங்கா எனக்கு சொர்க்கம் கொடு என்று கேட்டார். மீண்டும் ரங்கா எனக்கு சொர்க்கம் கொடு என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்ததை கண்டு ரங்கநாதரும் பொறுமை இழந்து ஒரு ஸ்டேஜில் அவருக்கு காட்சி தந்து அன்பரே உமக்கு எதற்காக நான் சொர்க்கம் தரவேண்டும் நீர் என்ன பூஜை புனஸ்காரம் செய்தீரா ?தவம் செய்தீரா? தியானம் செய்தீரா? பக்தி செய்தீரா? உபன்யாசம் செய்தீரா? எதற்காக சொர்க்கம் கேட்கிறீர் என்று கேட்டார்.

உடனே நமது பக்தருக்கு வந்தது பார் கோபம். ரங்கநாத நீ என்ன ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பு வைத்திருக்கிறாயா என்ன ?? ததிபாண்டன் என்ன செய்தான் ??என்று அவனுக்கு சொர்க்கம் கொடுத்தாய்.நான் ஒன்றும் செய்யவில்லை என்று என்னை குற்றம் கூறுகிறாயே என்று கூறினார் .அதை கேட்டு சற்று ரங்கநாதர் ஆடிப்போய்விட்டார் .பக்தரே உமக்குத் தந்தேன் சொர்க்கம் என்று கூறினார் .காரணம் ரங்கநாதருக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை.

இந்த ஞானோதயம் இந்த பக்தருக்கு எப்படி வந்தது என்றால் சொற்பொழிவில் உபன்யாசகர் ததிபாண்டன் கதையை கூறிக் கொண்டிருந்தார். அதை கேட்டவுடன் இவருக்கு
ஞானம் ஏற்பட ரங்கநாதரிடம் சென்று எனக்கும் சொர்க்கம்  கொடு என்று கேட்டு சொர்க்கத்தை அடைந்தார்.

அது என்ன ததிபாண்டன் கதை .அதை சற்று பார்ப்போமா.

பாகவதத்தில் கண்ணன் குழந்தையாக இருந்த பொழுது அங்குள்ள குழந்தைகளுடனும் கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் .ஒரு வீட்டில் வெண்ணெய் திருடுவது  நெய் திருடுவதுஎன்று களியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார். இவ்வாறு இருக்கையில் கோபியர்கள் எப்படியாவது  கண்ணனைக் கையும் களவுமாக பிடித்து யசோதையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர் .ஒரு நாள்

இவர் ஒரு வீட்டில் வெண்ணை திருடிக் கொண்டிருந்தார் .அப்போது வீட்டின் உரிமையாளர் ஆகிய ததிபாண்டன் வந்துவிட்டார். உடனே கண்ணன் பயந்து போய் அங்குள்ள பெரிய பானையில் குதித்து மேல்தட்டை போட்டு மூடிக் கொண்டதை ததிபாண்டன் பார்த்துவிட்டார்.

உடனே சென்று அந்தப் பானையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார். ஆயிற்று சற்று நேரமாயிற்று சற்று நேரம் ஆயிற்று கண்ணனும் மூடியைத் திறக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை .மூடியை திறந்து திறவுங்கள் என்று பானைக்குள் இருந்து கண்ணன் கத்திக் கொண்டிருந்தார் .அப்பொழுது ததிபாண்டன் எனக்கு நீ சொர்க்கம் கொடுப்பதாக இருந்தால் நான் மூடியைத் திறந்து விடுவேன் என்று கூறினார்.

உடனே கண்ணன் சொர்க்கமா என்னது !!!அது என்ன?  எனக்கு எப்படி தெரியும் !!!நான் எப்படி கொடுக்க முடியும்!!"" என்று வினவினார் .அதற்கு ததிபாண்டன் ஐயனே தாங்கள் யாரென்று எனக்குத் தெரியும் .தாங்கள் சொர்க்கம் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் இங்கிருந்து எழுவேன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொண்டிருந்தார் .அதைக் கேட்ட பகவான் உமக்குத் தந்தேன் சொர்க்கம் உமக்கு மட்டுமல்ல உன்னுடன் கூடி இந்த பானைக்கும் சொர்க்கம் தந்தேன் என்று கூறி பானையும் ததிபாண்டனையும் சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார்.

நமது இவ்வுலக பயணம் முடிந்து அவ்வுலக பயணம் கிட்டும்போது சொர்க்கம் கிட்டினால் அந்த சொர்க்கத்தில் ததிபாண்டனையும் அவன் அமர்ந்திருந்த பானையும் இருக்கும் என்று உபன்யாசகர் கூறியதை கேட்டவுடன் தான் நமது பக்தருக்கும் சொர்க்கம் செல்ல ஆசை வந்து ரங்கநாதரிடம் சென்று அதை சாதித்து காட்டினார்.

இதுவே பக்தன் பகவானுக்கு பாடம் புகட்டிய கதை

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்