சோமவார விரதம் பலன்கள்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது கார்த்திகை மாத சோம வார விரதம் பெயர்க் காரணம் அனுஷ்டிக்கும் முறை. பிறகு மதுரை தோன்றிய விதம் பெயர் காரணம் முதலியன.

முதலில் சோமவார விரதம்

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் இதை முதன்முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும்  அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். சோமன் என்றால் சந்திரன். சந்திரனைத் தலையில் சூடிய காரணத்தினால் சிவனை சோமசுந்தரர் என்றும் அழைப்பர் .சோமசுந்தரரை வேண்டி மேற்கொள்ளும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர்.

இந்த விரதத்தை கணவனும் மனைவியும் சேர்ந்து செய்தால் தீர்க்க ஆயுளுடன் வாழலாம் என்றும் அன்று தவறாமல் இருவரும் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றும் வாழ்வில் தவறு செய்யாதவர்களே இல்லை. செய்த தவறை திருத்தியும் மேற்கொண்டு தவறு செய்யாமல் இருப்பதற்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

இனி மதுரை .

மதுரையின் பெயர்க்காரணம் மதுரை தோன்றிய விதம் பார்ப்போமா.

மதுரையை குலசேகர பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் .அவன் தவறாமல் சோமவார விரதத்தை அனுஷ்டித்து வந்தான். அதன் காரணமாக ஒரு சோமவாரத்தன்று சிவபெருமான் அவன் கனவில் தோன்றி தான் ஒரு லிங்கமாக இருப்பதாகவும் அங்கு ஒரு கோயில் கட்டி பூஜிக்க வேண்டும் என்று அருள் பாலித்தார்.

மன்னன் வசித்த ஊருக்கு அடுத்துள்ள மணவூர் என்ற ஊரில் செல்வச்செழிப்பு மிக்க தனஞ்செயன் என்ற வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள் வியாபாரம் முடிந்து விட்டு கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தின் வழியாக வரும் பொழுது மிகவும் இருட்டிவிட்டதால் காட்டிலேயே தங்கி விட்டார். அவர் அமர்ந்த இடத்தின் அருகே ஒரு சிவலிங்கம் இருந்தது .அவர் சிவனை வணங்கி விட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் வானத்திலிருந்து தேவர்கள் பலர் வந்து லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். மறுநாள் மன்னரிடம் சென்று தான் இரவு கண்ட காட்சியைப் பற்றி கூறினார்.

மன்னனும் தான் கண்ட கனவை உறுதி செய்யும் பொருட்டு கடம்பவனத்தில் சிவலிங்கம் இருப்பதை அறிந்து அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோயிலின் நான்கு புறமும் சுற்றியும் மாடவீதியும் அழகான தெருக்களும் அமைத்தான்.அப்போது சிவபெருமான் தனது ஜடாமுடியில் உள்ள சந்திர கலையில் இருந்து மதுரமான அமிர்தத்தை கங்கா ஜலத்துடன் கலந்து அந்த நகரின் மீது தெளித்தார்.

ஜடாமுடியில் இருந்து அமிர்தம்  அந்த நகரில் விழுந்ததால் மதுரமான அமுதம் சிந்தியதால் அவ்வூருக்கு மதுரை  என்று பெயர் ஏற்பட்டது.

இதுவே மதுரை தோன்றியதற்கான வரலாறு

இதுவரை சோமவார விரதம் தோன்றிய வரலாறு மற்றும் மற்றும் மதுரை தோன்றிய வரலாறு பார்த்தோம்.

இதுவரை படித்த மிக்க நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்