அப்பாவின் பாசம்
மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
சண்டைகளும் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி என்று!
அப்பாக்கள் புத்தர்களாகவே இருக்கிறார்கள்
குட்டிப் புத்தர்கள் ஆசைப்படும் வரை!
அப்பா என்பது ஜென்நிலையைத் தாண்டிய தவநிலை!!
பொது வாழ்க்கையைக் கடந்த
ஒரு புது வாழ்க்கை!
எத்தனை ரூபாய் கேட்டாலும்
பத்து ரூபாய் சேர்த்துத் தரும்போது
உலக பணக்காரர்கள் பட் டியல் மாற்றி எழுதப்படுகிறது!்
தன் பிள்ளைகளின் கன்னத்தை
தாடி முடி குத்திவிடக்கூடாது என்பதற்காகவே
முத்தங்களையும் குத்தங்களாக கருதும் மனம் படைத்தவர்கள்!
மொத்தத்தில்
தந்தை மனம் வரையறுக்க முடியாத வரையறை!!
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
Comments
Post a Comment