தியாகராஜர் கீர்த்தனைகள்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது நாதப்பிரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இரண்டு எல்லோராலும் அறியப்பட்ட மிகவும் முக்கியமான கீர்த்தனைகளும் அதன் விளக்கமும்.

முதல் கீர்த்தனை.

மறி‌ மறி நின்னே  மொறலிட  நீ
மனஸுன தயராது(மறி)
கரி மொற லினி ஸரகுன சன் நீக்கு
காரண மேமி ஸர்வாந்தர்யாமி (மறி)
கருணதோ த்ருவுனி கெதுட நில்சின
கத வின்னானய்யா
ஸுரரிபு தனயுனிகை நர ம்ருகமெள
ஸுசன லேமய்யா
மறசி யுன்ன வனசருனி ப்ரோசின
மஹிம தெலுபவய்யா
தரனு வெலயு த்யாகராஜ ஸன்னுத
தரமுகாதிக நே வினனய்ய (மறி)

விளக்கம் அல்லது அர்த்தம்.

மீண்டும் மீண்டும் நான் உன்னிடம் வேண்டியும் உன் மனதில் கருணை பிறக்கவில்லையே ஐயா. எங்கும் நிறைந்த இறைவா .கஜேந்திரன் என்னும் யானையின்  கதறலை கேட்டு நீ விரைந்து சென்ற காரணம் என்ன ஐயனே. இரக்கத்துடன் நீ துருவன் எதிரில் தோன்றிய கதையை கேட்கிறேன் சுவாமி. தேவர்களுக்கு எதிரான இரணியனின் மகன்  பிரகலாதனுக்காக நீ நரசிம்மமாக மாறியதன் காரணம் தான் என்ன. எல்லாவற்றையும் இழந்த சுக்ரீவனை நீ காப்பாற்றியதன் மகிமையைச் சொல் ஐயனே. தியாகராஜன் வணங்கும் இறைவனே.இனியும் நான் பொறுக்கமாட்டேன் ஐயனே. நீ என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன் .

இதுவே முதல் பாடலின் அர்த்தம்.

இனி அடுத்த பாடலைப் பார்ப்போமா மிகவும் ஃபேமஸான அனைவரும் அறிந்த ஒரு கீர்த்தனை.

சாந்தமு லேக ஸெளக்யமு லேது
ஸாரஸ தள நயன (சாந்தமு)
தாந்துநிகைன வேதாந்து நிகைன (சாந்தமு)
தார ஸுதுல தன தான்யமு லுண்டின
ஸாரெகு ஜபதப ஸம்பத் கல்கின (சாந்தமு)
யாகாதி கர்மமு லன்னியு ஸேஸின
பாகுக ஸகல ஹ்ருத் பாவமு தெலிஸின (சாந்தமு)
ஆகம சாஸ்த்ரமு லன்னியு ஜதிவின
பாகவதுலனுசு பாகுக பேரைன (சாந்தமு)
ராஜாதி ராஜ ஸ்ரீ ராகவ த்யாக
ராஜவினுத ஸாது ரக்ஷக தனகுப (சாந்தமு)

விளக்கம்.

தாமரைக் கண்களை உடைய திருமாலே.
மனதில் அமைதி இல்லாவிட்டால் சுகமில்லை. புலன்களை அடக்கிய துறவிகளும் மனைவி மக்களுடன் வாழும் இல்லறத்தான் என்றாலும் எந்நேரமும் ஜபம் தியானம் செய்பவனாக இருந்தாலும் மனதில் அமைதி இல்லாவிட்டால் என்ன பயன்.

யாகம் உள்ளிட்ட வழிபாடுகளை செய்தாலும் அனைவரின் உள்ள கருத்துக்களை அறிந்திருந்தாலும் வேத சாஸ்திரங்களை கற்று பாகவதர் என்ற புகழ் பெற்றிருந்தாலும் சாந்தம் இல்லாவிட்டால் பயனில்லை மன்னாதி மன்னரான ஸ்ரீராமனே.ஸ்ரீ தியாகராஜனால் வணங்கப்படும் மூர்த்தியே .நல்லவர்களை பாதுகாப்பவனே.சாந்தம் இல்லாவிட்டால் ஏது சுகம்.

இதுவே தியாகராஜர் பாடிய இரண்டு பேமஸான கீர்த்தனைகளின் விளக்கம்

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்