துளசிதாசர் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது ராமசரிதமானஸ எழுதிய துளசிதாசரின் வரலாறு.

துளசிதாசர்

இவரும் சிறுவயதில் ஏனைய மகான்களைப் போல் அருணகிரிநாதர் பட்டத்திரி போல இவரும் சிறுவயதில் பயங்கர சிற்றின்பத்தில் மூழ்கி இருந்தார்(பட்டத்திரி யைப் பற்றி குறை கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம். கண்ணதாசன் ஒரு கதையில் பட்டத்திரியைப் பற்றி அப்பட்டமாக கூறியுள்ளார் அதை நான்  இங்கு மேலோட்டமாக தெரிவிக்கிறேன்).

இவருடைய செய்கையை கண்டு இவரது தாயார் சிறு வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைத்தார். கணநேரம் ஷணநேரம் கூட தனது மனைவியை பிரியாமலே இருந்தார். ஒருமுறை இவர் மனைவி ஏதோ அவசர வேலையாக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இவரால் மனைவியைப் பிரிந்து இருக்க முடியவில்லை. இரவோடு இரவாக மனைவியைக் காண அவர் சென்று விட்டார்.

இவர் செல்லும் பொழுது திடீரென்று பயங்கர இருட்டு மழை காற்று சூறாவளி அனைத்தும் சேர்ந்து நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கை உண்டாக்கிவிட்டது. இவர் இருந்தபோதிலும் மனைவியை காண வேண்டும் என்ற ஆர்வ கோளாறினால் நதியில் மிதந்து வந்த ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு அக்கறை சேர்ந்தார். பிறகு மனைவியின் தாய் தந்தையர் அறியாமல் மனைவியை மட்டும் காண வேண்டும் என்பதனால் பின்புறமாக சென்று மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கொடியை பிடித்து வீட்டிற்குள் தாவினார்.

இவரைக் கண்ட மனைவிக்கு ஆச்சரியம் கோபம் அனைத்தும் ஒருசேர வந்து தாங்கள் எவ்வாறு வந்தீர்கள் என்று வினவினாள் .அதற்கு அவர் நான் பின்புறத்திலுள்ள கொடியைப் பிடித்துக்கொண்டு குதித்தேன் என்று கூறினார். உடனே மனைவி விளக்கை எடுத்துக்கொண்டு வந்து கொடி எங்கே காண்பியுங்கள் என்றார் .அது கொடியல்ல ஒரு மலைப்பாம்பு தொங்கிக்கொண்டு இருந்தது என்பதை விளக்கு வெளிச்சத்தில் கண்டார்கள் .பிறகு ஏதோ கட்டை என்று சொல்லி அதை காண்பியுங்கள் என்று மனைவி கேட்டாள் .ஆற்றில் வந்து பார்த்தால் விளக்கின் வெளிச்சத்தில் அது கட்டை இல்லை அது ஒரு மனிதப் பிணம் .உடனே அவன் மனைவி வெகுண்டு இந்த தேகம் இன்றில்லை நாளை அழிய போகிறது .இந்த அழியப்போகும் தேகத்திற்காகவா இவ்வளவு சிரமம் மேற்கொண்டு வந்தீர்கள் .இந்த சிற்றின்பத்திற்கு வந்த நீங்கள் பகவான் நாமாவை உச்சரித்து  பேரின்பம் அடையும் வழியைக் காணுங்கள் . அதை விட்டுவிட்டு இந்த ஆசையில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டார்..

துளசிதாசருக்கு பொறி தட்டியது. மனம் வெறுத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்தார் . பேரின்பமே சிறந்தது .பகவான் நாமாவே சிறந்தது என்று உணர்ந்தார்.ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். ராம நாமத்தை இடைவிடாது ஜெபித்து சொற்பொழிவு கதாகாலட்சேபம் முதலியவைகளை விடாது கேட்டார் .இவர் ராமநாமத்தை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பதால் ராமாயணம் நடக்கும் இடத்தில் போட்டிருக்கும் ஆசனத்தின் மீது ஆஞ்சநேயர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

இவரின் ராம நாம ஜெபத்தினால் மட்டுமே இவர்  கண்களுக்கு ஆஞ்சநேயர் தெரிந்தார். பலநாள் ஆஞ்சநேயரை கண்டபிறகு ஆஞ்சநேயரிடம் மன்றாடி எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் கிடைக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று விடாமல் கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஆஞ்சநேயரும் இவருக்கு இவரது கோரிக்கையை நிறைவேற்றினார். அவருக்கு ராம தரிசனம் கிட்டியது.

ராமரிடம் ராமாயணம் எழுத போகிறேன் நான் அதற்கு ராமசரிதமானஸ் என்று பெயர் வைக்கப் போகிறேன் என்று கூறினார் .உடனே ராமர் செய்யுங்கள் எந்த சந்தேகம் என்றாலும் ஆஞ்சநேயரை கேட்டுக் கொண்டு தாங்கள் எழுதுங்கள் என்று கூறி மறைந்து விட்டார்.

இவர் கதை எழுத ஆரம்பித்தார் சொற்பொழிவு போலவே கதையை சொல்லி பிறகு எழுத ஆரம்பித்தார் .காரணம் ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தவறிருந்தால் ஆஞ்சநேயர் திருத்த வேண்டும் என்றும் அவர் சத்தமாக உச்சரித்தார்.

சுந்தரகாண்ட பகுதி சீதை அசோகவனத்தில் இருக்கிறார் .அந்தப் பகுதியை அவர் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது துளசிதாசர் கூறுகிறார். அசோக வனத்தில் உள்ள மலர்களெல்லாம் சிவந்த நிறமாக காணப்பட்டது என்று .அதற்கு ஆஞ்சநேயர் கூறுகிறார் இல்லை இல்லை மலர்களெல்லாம் வெள்ளை நிறமாக தான் இருந்தது என்று. மீண்டும் துளசிதாசர் கூறுகிறார் இல்லை இல்லை சிவந்த நிறத்தில் தான் இருந்தது மலர் என்று. மீண்டும் ஆஞ்சநேயர் வெள்ளை நிறத்தில் தான் இருந்தது என்று கூறுகிறார் .மீண்டும் துளசிதாசர் இல்லையில்லை சிவந்த நிறத்தில் தான் இருந்தது என்று கூறினார் .உடனே ஆஞ்சநேயர் மிகுந்த கோபத்துடன் என் கண்களால் நான் பார்த்தேன். பார்த்ததை கூறுகின்றேன் .மலர் வெள்ளையாகத்தான் இருந்தது வெண்மை நிறத்தில் தான் இருந்தது என்றார் .உடனே துளசிதாஸர் இல்லை இல்லை மலர் சிவந்த நிறத்தில் தான் இருந்தது என்று கூற ஏன் எப்படி என்று ஆஞ்சநேயர் கேட்க ஆஞ்சநேயா சீதா மாதாவை அசோகவனத்தில் ராவணன் சிறை வைத்திருக்கிறான் என்று தாங்கள் அறிந்த பின்பு உங்கள் தலை மிகவும் சூடாகி கண்கள் சிவந்து விட்டது .அந்த சிவந்த கண்களால் தாங்கள் பார்த்த மலர்கள் அனைத்தும் சிவந்த நிறமாகி விட்டது என்று கூறினார். ஆஞ்சநேயர் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார்.

பிறகு ஆஞ்சநேயர் தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் கூறுவது சரியே என்று அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தார். பிறகு அவரும் ராமசரிதமானஸ் எழுதி முடித்தார்.

இதுவே துளசிதாசரின் சரித்திரம்

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்