நட்பின் மஹத்துவம்

இன்றைய தலைப்பு நட்பு

நாம் எத்தனையோ நட்புகளை கேட்டிருப்போம். நட்புக்காக  தலை குடுத்த  குமணன் பெருந்தலைச்சாத்தனார்  கர்ணன் துரியோதனன் கபிலர் பாரி வள்ளல் இது போல் பல நட்ப்புக்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால்  எல்லாத்தையும் விட மிகவும் முக்கியமான ஒரு நட்பு இதுவரை கேள்விப்படாத ஒன்று .அதை சற்றுப் பார்ப்போமா.

கிரீஸ் நாட்டில் டாமன் ப்ரீத்தியாஸ் என்று  ரெண்டு நண்பர்கள் இருந்தார்கள். அதில் அந்த டாமன் கொஞ்சம் வசதியானவன். ப்ரீத்தியாஸ் கொஞ்சம் ஏழை . ஆனால் அவங்க ரெண்டு பேரும் எப்போதுமே நல்ல ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. ப்ரீத்தியாஸ் க்கு  வயசுக்கு வந்த  ஒரு தங்கை அம்மா இருந்தாங்க .அவங்க வீட்டில் ரொம்ப வறுமை .  அதனால  ப்ரீத்தியாஸ் நிறைய கடன் வாங்கி  இருந்தான் . ஆனால் அவன் நண்பன் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படவில்லை யே ஒழிய மிகவும் பணக்காரன் அல்ல.ப்ரீத்தியாஸ் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. உடனே அந்தக் கடன் கொடுத்தவங்க  பணம் கேட்டு நெருக்கடி குடுத்தனர்.

ஒரு அளவுக்கு மேல தாங்க முடியாம பணம் கொடுத்தவர்கள்  பணத்தை கொடுக்க முடியுமா முடியாதா என்று கேட்க நான் முயற்சி பண்றேன் நான்  முயற்சி பண்ணறேன் என்று கூறினான் அவனுக்கு முடடியல. உடனே  பணம் கொடுத்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த ஊர் ராஜாவிடம் சென்று புகார் கொடுத்தார்கள். ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தர வேண்டும் அவ்வாறு தராவிட்டால் உனக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். ஒரு மாதம் பார்த்தார்கள் .அவனால் பணத்தை திருப்பிக் கட்ட முடியவில்லை .மீண்டும் ராஜாவிடம் புகார் கொடுக்க ராஜா அவனை ஜெயிலில் அடைத்து விட்டார்.

அவன் நண்பன் அவனை ஜெயில்ல பார்க்க வந்தான்.அப்போது அவன்
சொல்றான் நண்பா எனக்கு ஒரே ஒரு ஆசை தான் .நான் என் அம்மாவையும் தங்கையையும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துட்டா அப்புறம் தூக்குக் கயிறை  ஏத்துக் கொள்வதற்கு கூட அஞ்சமாட்டேன் என்ன பண்றதுன்னு தெரியல என்று கூறினான்.  அதைக் கேட்ட டாமன் ராஜா கிட்ட போயி தயவு செய்து அவனை கொஞ்ச நாளைக்கு வெளியில விடுங்க  அவன்தங்கச்சியையும் அம்மாவையும்பாத்துட்டு வந்துடுவான்அது வரைக்கும் டைம் குடுங்க என்று கேட்டான். ராஜா  அதுக்கு ஒத்துக்க என்னால முடியாது என்று கூறினார்.

உடனே டாமன் அவனுக்கு சற்று அவகாசம் கொடுங்கள் அதுவரை நான் ஜெயிலில் இருக்கிறேன். அவன் குறிப்பிட்ட நாளில் திரும்பி வரவில்லை என்றால் அவனுக்கு பதிலாக என்னை தூக்கிலிடுங்கள் என்று கூறினான்.அது கேட்டு மலைத்துப்போய்  ராஜா ப்ரீத்தியாஸை உடனே விடுவித்து டாமனை ஜெயிலில் போட்டார்.

அவன் ஊருக்கு போய் அவன் அம்மா தங்கை எல்லோரையும் பாத்துட்டு திரும்பி வரும்போது காட்டு வழியில்  எக்கச்சக்க மிருகங்கள்  சோ என்று பயங்கர மழை  வேறுபெய்யுது .காற்று புயல்  மழை என்று பயங்கரமாக இருக்க  என்னடா இது  இன்னும் கொஞ்ச நேரம் தானே உசிரை கையில புடிச்சிகிட்டு  போய்விடுவோம் என்று இவன் ஓட்டமும் நடையுமாக வர இவன் கோட்டைக்குள் நுழையும் போது அவனது நண்பனை தூக்கு மேடைக்கு கொண்டு போறாங்க .கோட்டையைத் தாண்டும்போது கரெக்ட்டா  கருப்பு துணியை  அவன் கழுத்துல மாட்டடறாங்க. அவன் தூக்கிலிடும் இடத்திற்கு வந்தவுடன் கயிற்றை அவன் கழுத்தில் மாட்டறாங்க.

உடனே நிறுத்துங்கள் .என் நண்பனை விடுவியுங்கள் நான் வந்து விட்டேன் என்னை தூக்கில் ஏற்றுங்கள் என்று கூறினான். அதைக் கேட்ட ராஜா அப்படி திரும்பிப் பார்த்தார். சரியான நேரத்தில்  நண்பனை காப்பாற்ற வந்த இவங்க ரெண்டு பேரும் தான் உண்மையிலேயே உத்தமமான  நண்பர்கள்  தியாகம்  நட்பு என்றால் இவர்கள் மாதிரி தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை வாழ்த்தி அவன்கொடுக்க வேண்டிய கடனை தானே பொறுப்பேற்று  பணத்தை கொடுத்து மேலும் அவர்களுக்கும் வேண்டிய அளவு செல்வத்தைக் கொடுத்து இருவரையும் விடுவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

உங்கள் நட்பு போல் ஒரு சிறந்த நட்பில்லை வாழ்க உங்கள் நட்பு என்று கூறிஅவங்களை வாழ்த்தி அனுப்பி வைக்கிறார்.

இது தான் உண்மையான நட்பு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி.

நன்றி நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்