சனி சிங்கனாப்பூர் வரலாறு
ஆன்மீகம்:-
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
சனி சிங்கனாப்பூர்:-
அனைவரும் முதலில் சனிசிங்கனாப்பூர் பற்றி முதலில் எழுதுங்கள் என்று கேட்டதால் முதலில் அதைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன்.
சனி சிங்கனாப்பூர்:
இத்தலம் ஷீரடி சாய்பாபா கோவிலில் இருந்து சுமார் 7 k.m. தூரத்தில் உள்ளது.ஷீரடி பாபா கோயிலில் இருந்து ஆட்டோ போன்ற அனைத்து வசதிகளும் உண்டு.
மேலும் உலகிலேயே சனீஸ்வர பகவானுக்கு என்று உள்ள ஒரே ஆலயம் இதுதான்.மற்ற ஆலயங்கள் எல்லாம் ஏற்படுத்தப் பட்டது. ஆனால் இது மட்டுமே உண்டானது.(இங்கு திருநள்ளாறு பற்றி சிறு குறிப்பு காரணம் நிறைய பேர் ஏன் அதுவும் குச்சனூரும் சனீஸ்வரன் ஆலயம் தானே என்று கேட்பார்கள் அவர்களுக்கு ஆக இது.விருப்பம் உள்ளவர்கள் இதைப் படியுங்கள் இல்லை என்றால் ஒமிட் செய்து விட்டு மேலே தொடர்ந்து செல்லுங்கள். அதாவது திருநள்ளாறு என்பது ஈஸ்வரன் கோவில் அதாவது சிவனுடைய ஆலயம். எப்பவுமே ஆகம முறைப்படி சிவாலயங்களில் சிவனுக்கு இடது புறம் விநாயகர் ஆலயம் வலது புறம் முருகன்.இதுவும் அதுபோலவே பண்டைக் காலத்தில் இருந்தது.முருகனுக்கு வலது பக்கம் ஆலயம். முருகன் வாகனம் மயில் .பழைய காலத்தில் பக்தர்கள் முருகனுக்கு கற்பூர தீபாராதனை காட்டி காட்டி மயில் வாகனம் கறுத்து விட்டது . கறுத்து கறுத்து சிறுத்தும் விட்டது. பின்னர் மக்கள் மயில் கருப்பாக இருப்பதால் காக்கா என்றும் காக்கை வாகனம் ஆனதால் சனீஸ்வரன் என்றும் இது சனீஸ்வரன் ஆலயம் என்று கூறி சிலர் பலர் தொழ ஆரம்பிக்க நாளடைவில் அதுவே பிரபலமாகி விட்டது ஆதாரம் கோவில் ஆகம சாஸ்திரம் . இன்னும் சான்று வேண்டுவோர் 1985 ம் ஆண்டு பகீரதன் எழுதிய சக்தி பத்தகத்தைப் படியுங்கள்.இதை நான் இங்கு கூறவேண்டிய காரணம் யாரும் என்ன ஆதாரம் என்று என்னை கொஸ்டின் செய்ய கூடாது)
இனி மேலே நாம் சனி சிங்கனாப்பூர் பற்றி அறிவோம்.
சனி சிங்கனாப்பூரை சிம்மஹன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் பக்தி ச்ரத்தையுடனும் ஒழுக்கத்துடனும் குடி மக்களை தன் மக்கள் போல் பாதுகாத்து அரவனைத்து ஆட்சி செய்து வந்தான். சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். ஆனால் என்ன ஆனாலும் அவனும் சராசரி மனிதன் தானே. அவன் ஜாதகப்படி அவனுக்கு சனி திசை ஆரம்பம் ஆகியது. உடனே சனீஸ்வரன் அவன் முன் தோன்றி நான் உன்னை பிடிக்க போகிறேன் இன்னும் 2 1/2 ஆண்டுகளில் உன் ஆயுள் முடியும் என்று கூறினார். மேலும் உனக்கு மரணம் ஒரு முள்ளம்பன்றி ரூபத்தில் தான் என்றும் முடிந்தால் நீ நல்லவன் என்பதால் தடுக்க முடியும் என்றால் தடுத்துக் கொள் என்று கூறினார். (இங்கு சிலர் சனீஸ்வரன் ஆவது தோன்றுவதாவது ஒன்னாவது சும்மா என்று நினைப்பவர்களுக்கு நல்லவர்களுக்கு காட்சி தருவார் என்பதற்கு ஹனுமான் உதாரணம் அவருக்கு காட்சி தந்து உன்னை பிடிக்க போகிறேன் என்று கூறினார். அரிச்சந்திரனுக்கும் காட்சி தந்து உன்னை பிடிக்க போகிறேன் என்று கூறினார். நளனுக்கும் காட்சி தந்து கூறினார்.)
இனி தொடருவோம்.
உடனே ராஜா எனக்கு சற்று அவகாசம் தேவை என்று வேண்டினார்.சனியும் சரி என்று ஆமோதித்தார்.
எப்படி பரீட்சித் மஹாராஜா பாம்பு கடியில் இருந்து தப்பிக்க கடலுக்கு நடுவில் ஒரு மாளிகை கட்டினாரே அதேபோல் இந்த ராஜாவும் ஊருக்குள் பிரமாண்டமான ஒரு மாளிகை கூட கோபுரம் உயர்ந்த தூண்கள் பெரிய நிலைகள் கதவுகள் என்று பிரமாதமாக கட்டினார்.அந்தக் காலத்து அரண்மனையில் பயங்கர வேலைப்பாடுகள் நிறைந்து கலைநயம் மிக்க தாக பிரமாதமாக இருக்கும். மேலும் மரவேலைப்பாடுகள் சிங்கம்/புலி/யானை/மான்/நரி/மயில்/புறா/மீன்/முள்ளம்பன்றி/கழுகு முதலிய சித்திரங்கள் மர வேலைப்பாடு களில் இருக்கும்.
அதேபோல் அவரும் நல்ல கலைநயத்துடன் கூடிய மாளிகையை அமைத்துவிட்டு காற்று கூட யாரையும் கேட்காமல் உள்ளே நுழைய முடியாது என்ற திருப்தியுடன் சனீஸ்வரன் ஐக் கூப்பிட்டு இனி என்னைப் பிடித்துக்கோ என்று கூறிவிட்டு அரண்மனை யில் இருந்தார்.
இந்த ராஜா என்னைக்கு என்னைப் பிடித்துக்கோ என்று கூறினானோ அன்றுடன் சரியாக 2 1/2 ஆண்டு பூர்த்தி ஆகிறது. உடனே சனீஸ்வரன் சரி என்று கூற அவன் தங்கியிருந்த அரண்மனையின் உத்திரத்து தூண் ஒன்று சரிந்து ராஜா மேல் விழுந்தது.ராஜாவும் மாண்டான். எந்த தூண் விழுந்ததோ அந்த தூணில் முள்ளம்பன்றியின் சித்திரம் வரையப் பட்டிருந்தது.
மன்னன் இறந்தான் என்ற செய்தி கேட்டு மக்கள் எல்லோரும் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தும் எத்தனை கதவுகள் எத்தனை நிலவுகள் இத்தனை இருந்தும் மன்னனை காப்பாற்ற முடியவில்லை. நாமோ சாதாரண மக்கள் நம்மை யார் காப்பாற்றுவார்கள் எல்லாம் விதியின் படி யே நடக்கும். நமக்கு பாதுகாப்பு தேவைஇல்லை. ஆகவே இன்றுமுதல் ஒவ்வொரு மக்களாகிய நாம் நமது வீடுகளில் இனி கதவோ நிலையோ வீட்டிற்கோ வாசற்படி நிலவு படுக்கை அறை எதுவும் வைக்கக்கூடாது. மேலும் இனி வீட்டை பூட்டவோ பாதுகாக்கவோ மாட்டோம் என்று உறுதி எடுத்து அன்றிலிருந்து இன்றுவரை சனி சிங்கனாப்பூர் மக்கள் அவர்கள் வீடுகளுக்கு கதவு வைப்பதில்லை வீட்டை பூட்டுவதில்லை. அதாவது எவ்வளவு பாதுகாப்புடன் இருந்த மன்னனுக்கே இந்த கதி என்றால் நாம் என்ன பாதுகாப்பு உடன் இருந்து என்ன பிரயோஜனம் என்று கூறி ஆகவே இனி வீடுகளுக்கு கதவு வைப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுத்து அதை அன்று முதல் இன்று வரை கடைப் பிடித்து வருகின்றனர்.
இது தான் சனி சிங்கனாப்பூர் வீடுகளில் கதவு இல்லாததற்கான வரலாறு.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
(ஒரு சிறு கொசுறு. நான் சென்ற முறை சென்றபோது கோவிலில் இருந்து சில அடி தூரத்தில் பப்ளிக் டாய்லெட் சென்று சிறுநீர் கழிக்கலாம் என்று போனேன்.அங்கு டாய்லெட் க்கும் கதவு இல்லை. ஏன் என்று கேட்டதற்கு இங்கு எதற்கும் கதவே வைப்பதில்லை என்று கூறினார்கள்.ஆகையால் டாய்லெட் பாத்ரூம் அனைத்து பொது இடங்களிலும் கதவு வைப்பதில்லை என்று கூறினார் கள்.
பொதுஇடங்களிலேயே இந்த நிலைமை என்றால் வீடுகள் நிலையைப் பற்றி நான் கூற வேண்டுமா)
நன்றி. . நன்றி. . நன்றி. நன்றி.
Dear admins சனி சிங்கனாப்பூர் வீடுகளில் கதவே இல்லை என்பதை தெரிவிக்கவே போட்டோ சற்று கூடுதலாக பதிவிட்டுள்ளேன் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால்
Comments
Post a Comment