முசுகுந்த சக்ரவர்த்தி வரலாறு

ஆன்மீகம்.

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

முசுகுந்த சக்ரவர்த்தி:-

முசுகுந்தன் என்றால் குரங்கு முகம் என்று அர்த்தம்.

ஒரு நாள் அடர்ந்த காட்டில் புலி ஒன்று மிகவும் பசியால் ஏதாவது மிருகம் கிடைக்குமா என்று காத்திருந்தது. மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு அதன் கண்களில் ஒரு குரங்கு தென்பட்டது.உடனே நாலு கால் பாய்ச்சலில் அதைத் பிடிக்க ஓடியது.குரங்கும் புலியைப் பார்த்து விட்டது.அதுவும் தப்பிக்க வேகமாக ஓடியது.

என்றுமே யாருக்குமே உயிர் பயம் என்றால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கண்மண் தெரியாமல் உயிரைக் காப்பாற்ற ஓடுவார்கள்.புலியோ பசியின் கொடுமை ஓடியது
குரங்கோ உயிர் பயம் ஓஓஓஓஓஓஓடியது.

முடிவில் ஒரு நீண்ட மரம் தென்பட்டது குரங்கு சடாரென்று தாவி அதில் ஏறிக் கொண்டது புலி என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி ஆனாலும் கீழே இறங்கி வந்து தானே ஆகனும் என்று நினைத்து மரத்தின் அடியில் காத்திருந்தது இருட்டு வேளை புலி அசையவில்லை குரங்குக்கு ஓடிவந்த களைப்பு கண் இமைகள் கெஞ்சியது ஆனால் நிலைமையை உணர்ந்து தூங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து தூக்கம் வராமல் இருக்க மரத்தின் ஓரோரு இலையாகப் பறித்து கீழே போட்டது விடியும் வரை கீழே போட்டுக் கொண்டே இருந்தது.

பொழுது விடிந்து விட்டது புலியும் சென்று விட்டது உடனே குரங்குக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.சிவனைப் பார்த்தவுடன் குரங்குக்கு பேசும் சக்தி வந்து விட்டது சிவனைப் பார்த்து என்ன என்று கேட்டது அதற்கு சிவன் நேற்று சிவராத்திரி நீ இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாய் அதனால் உனக்கு காட்சி தந்தேன் என்றார்.

அதுவரை குரங்குக்கு சிவராத்திரி என்றோ அது வில்வ மரம் என்றோ அம்மரத்திற்கு கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது என்றோ ஒன்றுமே தெரியாது.ஆனால் இது பறித்துப் போட்ட வில்வ இலைகள் அனைத்தும் சிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மேல் விழுந்ததால் சிவன் மகிழ்ந்து காட்சி கொடுத்தார்.

உடனே சிவன் சிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மேல் உறங்காமல் வில்வார்ச்சனை செய்ததால் உனக்கு அடுத்த பிறவியில் மஹாராஜா வாகப் பிறப்பாய் என்று கூறினார்.உடனே குரங்கு நான் அடுத்த பிறவியில் மஹாராஜா வாகப் பிறந்தால் அது நான் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டது.உடனே சிவன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் அதற்கு குரங்கு நான் அடுத்த பிறவியில் மஹாராஜா வாகப் பிறந்தாலும் இதே முகம் இதே குரங்கு முகம் இருக்க வேண்டும் என்று கேட்டது அதற்கு சிவன் அப்படியே ஆகட்டும் ததாஸ்து என்று கூறினார்.

அடுத்த பிறவி. முசுகுந்த சக்ரவர்த்தி.
இந்திரலோகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது தேவேந்திரன் முசுகுந்த சக்ரவர்த்தி யிடம் உதவி கோரினார் உடனே முசுகுந்தனும் தேவர்களுக்கு ஆதரவாக விடாமல் ஆறு மாத காலம் போரிட்டு அசுரர்களை எல்லாம் வதம் செய்து இந்திரனுக்கு உதவினார்.
உடனே இந்திரன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்று கேட்டதற்கு நான் ஆறுமாதம் உறங்கவில்லை நான் நிம்மதியாக யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் உறங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் அப்படி யாரேனும் தொந்தரவு செய்தால் நான் அவர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் இந்திரனும் அவர் வேண்டிய வரத்தை அருளினார்.  ததாஸ்து.

இது அனைத்தும் நடந்தது திரேதா யுகத்தில். திரேதா யுகம் முடிவுற்றது துவாபர யுகம் தொடங்கியது. கிருஷ்ணன் கம்சனைக் கொன்றபின் ஜராசந்தன் விடாமல் கிருஷ்ணனை துரத்திக் கொண்டே இருந்தான் கிருஷ்ணனுக்கு தெரியும் ஜராசந்தன் பீமனால் கொல்லப் பட வேண்டியவன் என்று. ஆனால் ஜராசந்தனின் கூட்டாளி காலயவன் அவனை வில் அம்பாலோ ஆயுதங்களாலோ சாவு இல்லை என்று வரம் வாங்கியவன் ஆதலால் காலயவன் க்ருஷ்ணனை துரத்திக்கொண்டு ஓடினான் க்ருஷ்ணன் ஆயுதம் ஏதுமின்றி அவனிடம் இருந்து தப்பிக்க ஒரு குகைக்குள் ஒளிந்தான் அந்தக் குகைக்குள் தான் முசுகுந்தன் படுத்திருக்கிறான்

வேகமாக குகைக்குள் நுழைந்த காலயவன் படுத்து இருப்பது க்ருஷ்ணன் என்று நினைத்து தன் காலால் வேகமாக எட்டி உதைத்தான்.அந்த உதையின் வீரியத்தால் உறக்கம் கலைந்த முசுகுந்தன் யாராடா அது உதைத்தவன் என்று பார்த்தான் அவன் பார்த்த மாத்திரத்தில் காலயவன் பற்றி எரிந்தான் க்ருஷ்ணனும் மகிழ்ந்தான் பின் இன்னும் யார் குகைக்குள் என்று பார்த்து பகவானைக் கண்டவுடன் பணிந்து சாப விமோசனம் பெற்று வைகுந்தம் அடைந்தான்.

இதுவே முசுகுந்த சக்ரவர்த்தி யின் வரலாறு

இது வரை படித்தமைக்கு நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்