காளஹஸ்தி மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

காளஹஸ்தி மகாத்மியம் .

காளஹஸ்தி.

தோன்றிய வரலாறு அதன் விவரங்களை விரிவாக பார்ப்போமா .

காள   ஹஸ்தி பாம்பு  யானை

பண்டைய காலங்களில் சிவ பெருமான் ஆலயம் தற்போது உள்ளது போல் பெரிய கட்டடம் எல்லாம் அமைந்து பாதுகாப்பாக உள்ளது போல் இல்லை. காட்டின் நடுவில் வெட்ட வெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டு ஒரு சிவலிங்கம் இருந்தது. தினமும் ஒரு பாம்பு சிவபெருமானுக்கு மழையில் நனையக் கூடாது என்று சிவலிங்கத்தின் மேல் வலை போல் ஒரு கூடு கட்டியது .தினமும் ஒரு யானை அந்தக் கூட்டை அசிங்கம் என்று நினைத்து தனது தும்பிக்கையால் கலைத்து விட்டது. இது தினமும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் அந்த பாம்புக்கு மிகுந்த கோபம் வந்து யானையின் தும்பிக்கையில் புகுந்து கடித்துவிட்டது. யானை உடனே வலி தாங்காமல் தும்பிக்கையை ஓங்கித் தரையில் அடித்தது. அதனால் பாம்பு இறந்து விட்டது. பாம்பு கடித்த விஷம் பரவி யானையும் இறந்து விட்டது. உடனே சிவபெருமான்  காட்சி தந்து இருவருக்கும் முக்தியை அளித்தார் .

காலஹஸ்தி என்றால்  பாம்பு யானை இரண்டும் சேர்ந்து சிவனுக்கு தொண்டு செய்ததால் காளஹஸ்தி என்ற பெயர் ஏற்பட்டது. இது ஒரு வரலாறு

மற்றும் ஒரு வரலாற்றைப் பார்ப்போம்

இதற்கு நாம் சற்று பின்னோக்கி மகாபாரதத்திற்கு செல்வோம்.

மகாபாரதம் .

பாண்டவர்கள்அனைவரும்  வனவாசத்தில் உள்ளனர் .அந்த சமயத்தில் ஒரு அந்தணருக்கு பிரச்சனை என்று அர்ஜுனிடம் கூற அவன் தன் வில்லும் அம்பும் எடுக்க உள்ளே செல்ல அங்கு தர்மரும்  பாஞ்சாலியும் ஏகாந்தமாக இருக்க அதுகண்டு நியமப்படி தவறு செய்துவிட்டேன் ஒரு வருடம்  நான் தவம் செய்யச் செல்கிறேன் என்று எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அர்ஜுனன் வனம் சென்று விட்டான்.

வனத்தில் பாசுபதாஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கி தவம் செய்தான். கடுந்தவம் செய்தான். அவனது தவத்திற்கு மெச்சி சிவபெருமான் ஒரு வேடன் வடிவெடுத்து வந்தார். பின் ஒரு பன்றியின் கூக்குரலைக் கேட்டு சிவபெருமான் அம்பு எய்தினார் .அதேசமயம் அர்ஜுனனும் அப்பன்றியின் கூக்குரலைக் கேட்டு அம்பு எய்தினான் .ஆனால் வேடனின் அம்பு சீறிப்பாய்ந்து பன்றியைக் கொன்றது.அதைக் கண்ட அர்ஜுனன் என்னைவிட நீ சிறந்த பலசாலியா என்று கூறி வேடனுடன்  மல்யுத்தம் செய்தான்.இருவரும் கட்டிப் பிடித்து யுத்தம் செய்தனர்.  அவன் வீரத்தைப் பாராட்டி சிவபெருமான்  அவனுக்கு காட்சி தந்தார் .உடனே அர்ஜுனன் மன்னிக்க வேண்டி பிரார்த்தித்தான். சிவனும் அவனை மன்னித்து அவன் கோரியபடி அவனுக்கு  பாசுபதாஸ்திரம் கொடுத்து அவனை அனுப்பினார்.

இனி

நாம் ஒரு தவறு / தப்பு செய்தால் அந்த தப்பு தவறு மன்னிக்கப்படலாம் .ஆனால் அதன் விளைவுகள் இல்லாமல் போகாது .அதுபோல சிவன் வேடனாக வந்ததும் அர்ஜுனன் வேடன் என்று நினைத்து யுத்தம் செய்ததும் அதனுடைய வினைப்பயனை ஆற்றியது. ஆம் அடுத்த ஜென்மத்தில் அர்ஜுனன் ஒரு வேடனாக பிறந்தான். அவன் தான் கண்ணப்பன் என்கிற கண்ணப்ப நாயனார்.

இனி காளகஸ்தி மகாத்மியம் பார்ப்போமா

தினமும் சிவபெருமானுக்கு அர்ச்சகர் பூஜை புனஸ்காரங்கள் செய்து விட்டு சென்று விடுவார். ஆனால் மறுநாள் வந்து பார்த்தால் மாமிசம் இலைதழை முதலியவை நிறைந்து இருக்கும். இது பல நாள் தொடரவே அர்ச்சகர் மிகவும் மனம் வருந்தி சிவனிடம் நான் செய்யும் பூஜையில் ஏதாவது குறை இருக்கிறதா ?? ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று கேட்டார் .அன்று இரவு சிவன் அவர் கனவில் தோன்றி நாளை நீ பூஜை முடிந்தவுடன் சென்று விடாதே .மறைந்து இருந்து பார் என்ன நடக்கிறது என்று. ஆனால் எக்காரணம் கொண்டும் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்து விடாதே என்று கூறினார்.

மறுநாள் வழக்கம்போல் இவர் பூஜை முடித்து விட்டு ஒரு மரத்தின் பின் மறைந்து நின்றார். அச்சமயம் கையில் மாமிசமும் இலைதழைகளுடனும் வாயில் நீருடனும் ஒரு வேடன் வந்து வாயிலுள்ள நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான்.பின் இலைதழைகளால் அர்ச்சனை செய்து இறுதியாக மாமிசமத்தை  நைவேத்தியமாக படைத்தான்.

அப்பொழுது சிவபெருமான் அவன் பக்தியை ஊரறியச் செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வர செய்தார். உடனே கண்ணப்பன் லிங்கத்தின் மேல் இருந்த ரத்தத்தைத் துடைக்க அது மீண்டும் மீண்டும் வேகமாக வந்தது. உடனே கத்தி எடுத்து தன் ஒரு கண்ணை பிடுங்கி சிவன்  கண்ணில் வைக்க ரத்தம் நின்றது .அதை பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சகர் வெலவெலத்துப் போய் விட்டார். பக்தி என்றால் இது தான் பக்தி என்று நினைத்தார்.

சிவபெருமான் மீண்டும் ஒரு நாடகம் ஆட வேண்டி மறு கண்ணிலும் ரத்தம் வர வைத்தார். அது கண்ட கண்ணப்பன் தனது மறு கண்ணையும் பிடுங்கி வைக்க நினைத்தான். ஆனால் கண்ணில்லாமல் சரியாக பொருத்த முடியாது என்று நினைத்து அடையாளத்திற்காக தன் செருப்புடன் உள்ள காலை ரத்தம் வரும் சிவபெருமானின் கண் அருகே வைத்து மறு கண்ணையும் பெயர்த்து எடுத்து வைத்தான் ரத்தம் வருவது நின்றது.

அது கண்டு மகிழ்ந்த சிவபெருமான் உடனே கண்ணப்பனுக்கு காட்சி தந்து இரு கண்ணையும் தந்தருளினார் .

இதுவே கண்ணப்ப நாயனார் சரித்திரம்.காளஹஸ்தி வரலாறு.

இன்றும் சிவபெருமான் ஆலயத்திற்கு முன்பாக காளஹஸ்தியில் கண்ணப்ப நாயனார் சிலை உள்ளது. அதை வணங்கிவிட்டுத்தான் நாம் சிவனை வணங்க வேண்டும்

.இதுவே
காளஹஸ்தி மகாத்மியம் .

இதுவரை படித்தமைக்கு நன்றி .

நாளை வேறு ஒருவருடன்  வரலாறு உடன் சந்திப்போம் .

காளஹஸ்தி செல்வதற்கு முதலில் திருப்பதி சென்று அங்கிருந்து அலமேலுமஙகாபுரம் சென்று தரிசனம் முடித்து பிறகுதான் திருப்பதிக்கு வர வேண்டும் .திருப்பதி வந்து தரிசனம் முடித்து அலமேலுமங்காபுரம் வழியாக ஒரு ஒன்னரை  அல்லது 2 மணி நேரம் பயணம் செய்தால் காளஹஸ்தியை அடையலாம்.

காளஹஸ்தி

ராகு கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது .மேலும் காளஹஸ்தியில் முதலில் நுழைந்தவுடன் நாம் பாதாள விநாயகரை தரிசிக்க வேண்டும். நல்ல பருமன் உடல் உள்ளவர்கள் செல்ல முடியாது .மிகவும் குனிந்து செல்ல வேண்டும் .நண்பர் குருசாமியும் நண்பர் நடராஜனும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் பயண விதிகளை இங்கு கூறியிருக்கிறேன். நன்றி நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்