அரசு அலுவலகல அனுபவங்கள் மகன் பிறப்பு சான்றிதழ்
அரசு அலுவலகம் அனுபவம்
நான் 2004ல் என் மகன் நெதர்லாந்து செல்வதற்காக பிறப்புச் சான்றிதழ் வாங்க போன போது நடந்த சம்பவம்.
என் மனைவி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி யைச் சேர்ந்தவர். சிவசாமி ஐயர் ஸ்கூலுக்கு எதிர்த்த மாதிரி ஹோட்டல் வச்சிருந்தா. என் மாமனார் வயதானவர் கல்லாவில் அவர் இருந்தால் பள்ளி ஆசிரியர் பக்கத்து பஞ்சாயத்து கிளார்க்குகள் அடுத்த போலீஸ் ஸ்டேஷன் ஆட்கள் எல்லாம் சாப்பிட்டு காசே தரமாட்டா. ஏன் இதை இங்க சொல்றேன்னா பின்னாடி எனக்கு உதவிப் போகிறது.
நான் பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி போய் பஞ்சாயத்து ஆபிஸில் கேட்டால் சார் இங்க பத்து வருடத்து ரிக்கார்டு தான் இருக்கும். அதற்கு மேல் திருவையாறு அனுப்பி விடுவோம் என்றனர்.விடு ஜூட் திருவையாறு.(என் மகன் பிறந்தது 1983 நான் கேட்க போனது 2004)
ஒரு அரசாங்க அலுவலகம் எப்படி இயங்கும் என்பதை அன்று தான் கண்கூடாக பார்த்தேன்.எது கேட்டாலும் அங்க அங்க என்று சொல்கிறார்களே அன்றி சரியான பதில் கூற யாரும் இல்லை.
முடிவில் நான் ஒரு துணை தாசில்தார் ஐப் பார்த்து விவரம் சொல்ல அவர் அப்ளிகேஷன் எழுதி கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி குடுங்க பின் அதில் நான் சைன் செய்கிறேன். பிறகு நீங்கள் திருக்காட்டுப்பள்ளி போய் வி ஏ ஓ கையெழுத்து வாங்கி பின் ஆர் ஐ கையெழுத்து வாங்கி பின் செக்ஷன் ஆபிஸர் கையெழுத்து வாங்கி கொண்டாங்க என்று சொன்னார்.எனக்கு ஒன்னுமே புரியல என்ன சார் ஏன் இப்படி னு கேட்டதற்கு பையன் பேர் போடல அதுக்கு இது தான் புரஜிஸர் என்று கூறினார்.நமக்கு தலையே சுத்த ஆரம்பிச்சது.
ஒரு வழியா திருக்காட்டுப்பள்ளி வந்து VAO வைத் தேடிப் பிடித்து (அந்த நேரம் பார்த்து அவர் பக்கத்து ஊர் போயிருந்தார்) என் மாமனாரைப் பற்றி சொன்னவுடன் உடனே கையெழுத்து போட்டு விட்டார்.பின் ஆபிஸ் வந்து ஆர்.ஐ கையெழுத்து வாங்க போன போது தான் அங்கு உள்ள ஒரு கிளார்க் ஆர் ஐ இடம் என்னைப் பற்றி தெரிந்து சார் கையெழுத்து போடுங்க சார் இவர் மாமனார் கடையில் இங்கு உள்ள முக்கால் வாசி பேரு காசு குடுக்காம பல நாள் சாப்பிட்டு இருக்கோம். அதுக்காக வாவது பேசாம கையெழுத்து போடுங்க என்றார். அதற்கு அங்கு உள்ள அனைவரும் சிரித்தார்கள். (நான் மேலே குறிப்பிட்டேனே பின்னாடி உதவும் என்று அது இது தான்).
பிறகு நடந்த சம்பவம் தான் மறக்க முடியாதது.காரணம் section officers signature கேட்ட போது அவர் என்ன விளையாடறீங்களா இது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து வக்கீல் கன்பர்ம் செய்து ஜட்ஜ் ஆர்டர் போட்டு பிறகு தான் பேரைச் சேர்க்க முடியும் ஆதலால் நீங்கள் ரூல்ஸ் படி வாருங்கள் என்றார். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. பிறகு அவரிடம் சார் நான் ஒரு முன்னாள் ராணுவத்தினர் எனக்கு மிகவும் அர்ஜெண்ட் என்று கூற அவர் ஒன்றும் வேலைக்கு ஆகாது என்று கூறினார்.
அதுவரை அவர் பேசிய அனைத்தும் சரியான ரூல்ஸ் நடைமுறை என்று அங்குள்ளவர்கள் கூறினார்கள்.ஆதலால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லைய் .
ஆண்டவன் இருக்கான் குமாரு. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் நான் சார் நான் பெத்த பையன் அப்பா நான் .நான் தான் பேர் வச்சேன் .அதனால் நான் பெத்த என் பையனுக்கு நான் வச்ச பேருக்கு தான சார் சர்டிபிகேட் கேட்கிறேன் என்றேன்.(அவருக்கு சனி இஙக தான் பிடிச்சது அவர் போறாத நேரமோ என் நல்ல நேரமோ தெரியவில்லை).
நான் அவ்வாறு கூறியவுடன் அவர் உடனே நீங்கள் தான் அப்பா நீங்கள் தான் பெற்றீர்கள் என்பதற்கு என்ன சாட்சி என்று கேட்டார்.. அவ்வளவு தான் பிறவியிலேயே நாம் துர்வாசர் முன்னாள் ராணுவத்தினர் வேற . கேக்க வேணுமா பேய் ஆட்டம் ஆட கேட்க வேண்டுமா அந்த பஞ்சாயத்து ஆபீஸே ஆட ஊரெல்லாம் கூட பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் லிருந்து இன்ஸ்பெக்டர் வந்து நடந்ததை விசாரித்து செக்ஷ்ன் ஆபீஸரை கண்டபடி திட்டி ஒரு முன்னாள் ராணுவத்தினர் ஐ மதிக்க தெரியாதா உங்களுக்கு. இவர் இப்ப ஒரு அப்ளிகேஷன் குடுத்தா ஆபீஸிலேயே உங்களை கைது பண்ண வேண்டி இருக்கும் என்று கூற பின் அவர் மன்னிப்பு கேட்டு மரியாதையாக கையெழுத்து போட்டு என்னை அவர் செலவில் வேண்டாம் வேண்டாம் என்று கூறியும திருவையாறு வரை அனுப்பி வைத்தார்.
பிறகு அங்கு வந்து துணை தாசில்தார் ஐப் பார்த்து (அதுக்குள்ள பக்கத்தில் இருந்த இன்னொரு துணை தாசில்தார் இதெல்லாம் தவறு ஒரு நாளில் இதெல்லாம் முடியாது நீங்கள் ஒரு எக்ஷப்ஸன் ஆனா நானா இருந்தா கையெழுத்து போட மாட்டேன் என்றார்.ஒரு முறை அனுபவப் பட்டது போதும் என்று நான் மெளனமாக இருந்தேன்) .
பின் என் துணை தாசில்தார் அதை தாசில்தார் இடம் குடுக்கச் சொன்னார்.நானும் அவரிடம் என் தகுதியை கூறி அதைக் கொடுக்க அவர் வெய்ட் செய்யுங்கள் என்றார்.
இது வரை ஒரு பைசா லஞ்சம் குடுக்க வில்லை. நான் சென்று தாசில்தாரிடம் குடுத்த வரைக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த ப்யூன் சார் தாசில்தார் பிஸி இன்று கையெழுத்து போட மாட்டார். நீங்கள் நாளைக்கு வாங்க என்றான் நான் அதற்கு அவர் வெய்ட் பண்ண சொன்னார் என்று சொல்ல அவர் அப்படித்தான் சொல்வார் நீங்க நாளைக்கு வாங்க என்றான்.( நம்ம மரமண்டைக்கு அதுவரை ஒன்றும் புரியவில்லை தீடீரென மின்னல் வெட்டியது போல் தோன்ற அவனை வெளியே அழைத்து டீ வாங்கி குடுத்து ரூபாய் முன்னூறு கையில் கொடுக்க ஐயா நீங்கள் எங்கும் வரவேண்டாம் இங்க ஒரு தம் அடிச்சிட்டு இருஙக நான் வரேன் என்றான். அவ்வளவு தான் அதற்கு அப்புறம் வேலை எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது அவன் கூறியபடியே பத்து அல்லது இருபது நிமிடத்தில் டைப் செய்யப் பட்ட அரசாங்க சீலுடன் தாசில்தார் கையெழுத்துடன் என் கையில் என் மகனின் ஒரிஜினல் பிறப்புச் சான்றிதழ்.வேறு என்ன வேண்டும் வாசு விடுஜூட் டு பொள்ளாச்சி.
இது தான் எனது அரசாங்க அனுபவம் நன்றி நன்றி
Comments
Post a Comment