ஜோஸ்யம் உருவான கதை தோன்றிய கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காணவிருப்பது ஜோசியத்தின் கதை. ஜோசியம் உருவான விதம் தோற்றுவித்தவர் போன்றவை.

ஆதியில் ஜோசியத்தை தோற்றுவித்தவர் சாட்சாத் முருகப்பெருமான் தான். அவர் தான் ஜோசியத்தின் தந்தை  ஜோசியத்தின் குரு ஜோசியத்தின் ஆசான்.
ஜோசியத்தை தோற்றுவித்தவர்.

இவர் ஜோசியத்தை தோற்றுவித்து முதன்முதலாக அகத்தியருக்கு ஜோசியத்தை உரைத்தார் .அகத்தியரும் யோசித்து உணர்ந்து கொண்டு ஏட்டுச் சுவடியில் பதிவதற்கு ஆரம்பித்தார் .அவ்வாறு நாடியில்  பதிவதைப்பற்றி யோசித்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு நாள்  முருகன் அகத்தியர் சிவபெருமான் அனைவரும் கைலாயத்தில் இருந்தனர்.

அப்பொழுது சிவபெருமான் முருகனிடம் என்ன ஏதோ ஒரு நூல் ஒன்று இயற்றி உள்ளயாமே ஜோசியத்தை பற்றி அது என்ன ஜோசியத்தைப் பற்றி என்று கேட்டார் .அதற்கு முருகர் ஆமாம் நான் ஜோசியத்தை பற்றி ஒரு நூல் இயற்றி உள்ளேன். மனிதர்களுக்கு தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது என்று கூறினார்.

அப்படியானால் அதில் என்னைப் பற்றி என்ன கூறி இருக்கிறது என்று  உன்னால் கூற முடியுமா  என்று கேட்டார் .அதற்கு முருகன் சற்றும் சளைக்காமல் அவர் ஜாதகத்தை பார்த்து உங்கள் ஜாதகப்படி நீங்கள் பிச்சை எடுப்பீர்கள் என்று கூறினார் .அதற்கு உடனே சிவபெருமான் கிண்டலாக சிரித்துக்கொண்டு உலகுக்கே படியளக்கும் ஈசன் நான் . நான் போய் மற்றவரிடம் யாசகம் கேட்பது  என்பது சாத்தியமில்லை ஆகையால்  உனது ஜோசியம் தவறு  என்று கூறினார்.

நாட்கள் நடந்தன. ஓடு திருவோடு ஏந்தி பிச்சை கேட்டார் காசியில் .அன்னபூரணியிடம் சென்று மாதா அன்னபூர்ணேஸ்வரி என்று பாடி அன்னபூர்ணேஸ்வரி பிச்சை இட்டு அவர் பசியைப் போக்கினார் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

ஒரு நாள் மீண்டும் கைலாயத்தில் அனைவரும் இருந்தபோது முருகன்  பார்த்தீர்களா நான் கூறிய ஜோசியம் பலித்து விட்டது அல்லவா. நீங்கள் பிச்சை எடுத்தீர்கள் அல்லவா என்று கேட்டார். உடனே சிவனுக்கு கோபம் வந்துவிட்டது. என்னையே கிண்டல் செய்கிறாயா நீ உண்டாக்கிய உருவாக்கிய ஜோதிடம் இன்று முதல் பலிக்காமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார்.

உடனே முருகன் அகத்தியர் பார்வதி தேவி அனைவரும் நீங்கள் இவ்வாறு சாபம் கொடுக்க கூடாது .அந்த சாபத்தை திருப்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு சிவபெருமான் கொடுத்தது கொடுத்ததுதான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டார். அகத்தியர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவபெருமான் இறுதியாக நான் ஒரு காரியம் செய்கிறேன் .நான் கொடுத்த சாபம் முழுவதும் பூரணமாக வாபஸ் பெற முடியாது.இன்று முதல் நீ கூறிய ஜோசியத்தில் பாதி பலிக்கும் பாதி பலிக்காது என்று சாபமிடுகிறேன் என்று கூறினார். இதுவே இறுதி .இந்த சாபத்தை என்னால் திருப்பி எடுக்க இயலாது. ஜோதிடத்தில் பாதி தான் பலிக்கும் மீதி பாதி பலிக்காது என்று கூறினார்.

அன்று முதல் இன்று வரை இந்த கூற்று தான் உண்மையாக இருக்கிறது .சிலர் நல்ல ஜோசியர்கள் கூட அவர்கள் கூறுவதில் பாதிதான் உண்மை பாதி பொய் .ஜோசியத்தை நாம் குற்றம் கூறக்கூடாது .ஜோசியர்களை குற்றம் கூற கூடாது .இதற்கு முழு முதற் காரணம் அன்று சிவபெருமான் கொடுத்த சாபம் தான். என்பதை உணர வேண்டும் .ஆகவே ஜோசியம் பார்ப்பவர்கள் அவர்கள் கூற்றுகளில் பாதிதான் உண்மை என்பதை தெரிந்துகொண்டு மன திருப்தி அடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுவே ஜோசியம் உண்டாகிய வரலாறு

இதுவரை படித்தமைக்கு நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்