இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி:_
அதாவது இன்றைய இளைஞர்களுக்கு பழைய இந்தியாவைப் பற்றி தெரியாது என்பதால் சற்று விரிவாக விளக்கினால் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையில் இந்த முயற்சி.
1960-70 சக்கரை/அஸ்கா/ஜீனி
சக்கரை என்பது வெளியில் கிடைக்காத பொருள்.நாங்கள் பழனியில் ஓட்டல் நடத்திக் கொண்டு இருந்த போது டீ காபிக்கு சக்கரை வாங்குவதற்குள் என்பாடு உன்பாடு ஆகிவிடும்.முடிவில் அந்தக் காலத்தில் அரசாங்கத்திற்கு ஒரு மனு எழுதிப் போட்டு அது மேலிடத்தில் அப்ரூவ் ஆகி பின் கலெக்டரிடம் வந்து அவர் அப்ரூவ் செய்து பின் தாசில்தார் அலுவலகத்தில் அப்ரூவ் ஆகி பின் உணவு விநியோக அதிகாரியிடம் அப்ரூவ் ஆகி பின் எங்களுக்கு மாதம் ஒரு மூட்டை சர்க்கரை ஷேங்ஷன் ஆனது
ஆனால் இன்று.
2. சிமெண்ட்.
கட்டடடம் கட்ட வேண்டும் என்றால் பிளான் அப்ரூவல் ஆகி கலெக்டர் அலுவலகத்தில் அப்ரூவ் ஆகி பின் தாசில்தார் அலுவலகத்தில் அப்ரூவ் ஆகி பின் தான் சிமெண்ட் மூட்டைகள் கிடைக்கும் அதுவும் மேக்ஸிமம்25 டுடே 50 ஒன்லி
ஆனால் இன்று.
3. டீஸல்.
1977ம் வருடம் நான் டில்லியில் இருந்தேன் என் சொந்தம் என்னைப் பார்க்க matador van (12+1) ல் All India tour ல் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ( ஆந்திராவில் இருந்து) டில்லி வரை ready made application வைத்து இருந்தார்கள்.அதில் ஒவ்வொரு இடத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் குடுத்து அப்ரூவல் செய்து பர்மிஷன் வாங்கி ( அதற்கு பீயூனுக்கு அழ வேண்டிய தண்டத்தையும்அழுது) அதை பெட்ரோல் பங்கில் குடுத்தால் டீசல் குடுப்பார்கள் அதுவும் புல் அல்ல மேக்ஸிமம் 15அ 20 லிட்டர்ஸ்
ஆனால் இன்று.
4. Two wheelers.
Bajaj chetak 70 80 களில் வெறும் கனவு . யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.காரணம் முதலில் புக் செய்ய வேண்டும்.பின் 5 வருடம் காத்திருக்க வேண்டும். அதற்கே பயங்கர டிமாண்ட். உங்கள் பெயரில் புக் ஆனால் உடனே பிரிமியம் குடுத்து வாங்க தயாராக இருப்பார்கள்.பிரிமியம் என்பது வண்டி விலையில் ரெண்டு மடங்கு. டி வி.எஸ்ஸில் இருந்து two wheelers வெளி வர ஆரம்பித்த உடன் தான் நார்மலானது
ஆனால் இன்று.
டெலிபோன்.
5. அந்தக் காலத்தில் லேண்ட் லைன் என்பது கனவுலகம். பொதுவாக பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.ஏழைகளுக்கு டெலிபோன் என்பது எட்டாக்கனி.
நான் பழநியில் இருந்த போது என் மாமா காஞ்சீபுரத்தில் போன் செய்வார்.நேராக பழநி போஸ்ட் ஆஃபீஸ் க்கு வரும்.அங்கிருந்து ஒருவர் அடிவாரம் வந்து கூப்பிடுவார்.நாம் போஸ்ட் ஆஃபீஸ் சென்ற பிறகு சிலர் சொல்ல டெலிபோன் எக்ஸேன்ஜில் கனெக்சன் குடுப்பார்கள். அதுவும் மூன்று நிமிடம் தான் பேச முடியும்.பின் கட்டாகிவிடும்.பின் வேண்டும் என்றால் மீண்டும் புக் செய்ய வேண்டும்.சென்னை போன்ற பெரு நகரங்களுடன் பேச வேண்டும் என்றால் காலையில் புக் செய்தால் மாலையில் தான் கனெக்சன் குடுப்பார்கள்.
ஆனால் இன்று.
6. 1964.
நேரு மறைந்த வருடம்.நாட்டில் கடும் பஞ்சம் வறட்சி அரிசி அறவே இல்லை. இந்தியாவின் history ஐ எடுத்துப் பார்த்தால் அதில்1964 no rice in the country என்று இருக்கும்.அவ்வளவுக்கு உணவுப் பஞ்சம் தலை விரித்து ஆடியது.டெல்லியில் லால்பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரி.தமிழ் நாட்டில் காமராஜர் முதல்வராக இருந்தார்.அவர்கள் எலிக்கறியைத் தின்னச் சொன்னார்கள் பஞ்சத்தின் காரணமாக.அப்பொழுது தான் தி மு க உருவாக்கிக் கொண்டு இருந்தது.இதை சாக்காக வைத்து காங்கிரஸ் காரன் எலிக்கறி திங்கச் சொல்றான் என்று பயங்கர பிரச்சாரம் செய்தார்கள்.அது மட்டும் அல்லாமல் திங்கட்கிழமை இரவு அனைவரும் பட்டினி கிடக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை போட்டார்கள்.ஆதலால் தமிழ் நாட்டில் திங்கட்கிழமை இரவு அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டிருக்கும்.வாரவாரம் திங்கட்கிழமை இரவு ஓட்டல் விடுமுறை.போலீஸ் வந்து செக் வேறு செய்வார்கள்.அதை மையமாக வைத்து தான் திமுக ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற கோஷத்தை எழுப்பி ஆட்சியைப் பிடித்தார்கள்.அன்று திமுக ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணம் அரிசிப் பிரச்சினை.
ஆனால் இன்று.
தபால் அல்லது போஸ்ட்.7.
நான் ஏர்போர்ஸில் இருந்த போது 1975_1978 டில்லி ஆக்ரா ஒரு கடிதம் எழுதினால் அது எனக்கு கிடைப்பதற்கு பத்து நாட்கள் ஆகும்.காரணம் வீட்டில் உள்ளவர்கள் முதலில் தபால் அலுவலகம் சென்று கார்டு அல்லது கவர் வாங்கி வர வேண்டும்.பின் அவர்கள் நினைத்ததை எழுதி மீண்டும் தபால் ஆஃபீஸ் போஸ்ட் செய்ய வேண்டும்.அது பல வழிகளில் பயணித்து என்னை அடைய பத்து நாட்கள் ஆகும்.பின் நான் சென்று கார்டு அல்லது கவர் வாங்கி நேரம் இருக்கும் போது எழுதி போஸ்ட் செய்ய அது அவர்களுக்கு கிடைக்க பத்து நாட்கள் ஆகும்.ஸோ ஒரு தகவல் பரிமாறிக் கொள்ள குறைந்தது இருபது நாட்கள் ஆகும்.மேலும் வெளி நாடு என்றால் ஏர் மெயில் உண்டு அது அதிகக் கட்டணம்
ஆனால் இன்று.
8. Last but not least .
School college பள்ளிப்படிப்பு/பட்ட/பட்டயப் படிப்பு
இந்தக் கால இளைஞர்கள் கேக்கலாம் ஏன் என் அப்பா தாத்தா எங்களைப் போல் படிக்க வில்லை என்று.மேக்ஸிமம் 8 வதோ அல்லது SSLC க்கு மேல் தாண்டவில்லை என்று.
இன்று போல் அன்று ஊர் தோறும் பள்ளிகளோ கல்லூரியோ கிடையாது. பள்ளி செல்ல வேண்டும் என்றால் குறைந்தது நாலு அல்லது ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்.மேலும் கல்லூரி என்றால் மாவட்ட தலைநகரங்களில் தான் இருக்கும்.அதுவும் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்லூரிகள் தான்.தனியார் என்பது குதிரைக் கொம்பு.சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் தான் இன்ஜினியரிங் காலேஜ் இருக்கும்.
ஆனால் இன்று
தடிக்கி விழுந்தால் கல்லூரி.
மேலும் கேஸ் கனெக்சன் பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட் தொடங்குவது அது மட்டும் அல்ல ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றால் அந்தக் காலத்தில் 36 எண்ணிக்கை கொண்ட பிலிம் ரோல் இருக்கும் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அது புல் ஆனால் தான் கிடைக்கும் 10அல்லது15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்
ஆகையால் இளைஞர்களே நமது இந்தியா எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது நான் குடுத்த சிறிய அளவிலான உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்.
இன்றும் தொழில்துறையில் மின் உற்பத்தி யில் வேலை வாய்ப்பில் அனைத்திலும் பல மடங்கு முன்னேறி இருக்கிறது என்று கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க பாரதம்
Comments
Post a Comment