நள தமயந்தி எழுதிய ஹர்ஷர் சரித்திரம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது நள
சரித்திரத்தை எழுதிய ஸ்ரீ ஹர்ஷரின் கதை .ஸ்ரீஹர்ஷர் அவர் தோன்றிய விதம் அவரது தந்தை தாயார் யார் ஹர்ஷர் எவ்வாறு தோன்றினார் முதலியவற்றை பார்ப்போமா.
ஹர்ஷரின் தந்தை பெயர் ஸ்ரீஹீரர் மிகப் பெரும் புலவர் . இவரது புலமையால் ஈர்க்கப்பட்ட அந் நாட்டு மன்னன் இவருக்குப் பெரும் பொருளும் பொன்னும் மணியும் கொடுத்து தனது அரசவையில் ஆஸ்தான கவிஞராக புலவராக வைத்துக்கொண்டார்.தாயார் பெயர் மாமல்லதேவி.
ஒருமுறை வெளிநாட்டு புலவர் ஒருவர் அரசரின் சபைக்கு வந்தார் .மன்னா நான் புலமையில் மிகவும் சிறந்தவன் உயர்ந்தவன் .என்னோடு போட்டி போடுவோர் யாருமே இல்லை. உன் நாட்டில் யாரேனும் போட்டிக்கு இருந்தால் அவர்களை என்னுடன் போட்டி போட சொல். அவ்வாறு போட்டி போட்டு நான் தோற்றுவிட்டால் என் அனைத்தும் சொத்துக்களை யும் உங்களுக்கு கொடுக்கிறேன் .மாறாக உங்கள் தேசத்தில் உள்ளவர் தோற்றுவிட்டால் ஒரு கோடி பொன் எனக்கு கொடுக்க வேண்டும் .
அதுமட்டுமல்ல இந்த தேசத்தில் என்னை வெல்வதற்கு யாரும் இல்லை என்று கைப்பட ஓலை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .
அதைக் கேட்ட மன்னன் சிரித்து புலவரே பெருமைப்படாதே என் ஆஸ்தான புலவர் ஸ்ரீ ஹீரர் அவரது புலமையைப் பற்றி நீர் அறியாமல் பேசுகிறீர். நாளை அவருடன் போட்டி நடைபெறும் என்று சொல்லிவிட்டார்.
ஸ்ரீஹீரர் தேசத்தின் பெருமைக்காக அந்த புலவருடன் போட்டியிட்டார் .ஆனால் வெளிநாட்டு புலவரின் முன் ஈடுகட்ட முடியாமல் தோற்றுப் போனார்.மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொன்னை அழித்தான் தங்கள் தேசத்தின் புலமையை தாழ்த்தி ஓலையும் எழுதிக் கொடுத்தான்.
மிகவும் அவமானப் பட்டு வெட்கமடைந்த ஸ்ரீஹீரர் வீட்டிற்கு சென்று தன்மானம் மட்டுமல்ல நாட்டின் மானத்தையும் ஒரு சேர இழந்து விட்டோமே என்று வருந்தினான்.மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல அந்த வருத்தத்திலேயே அவர் இறந்து போனார்.
ஸ்ரீஹீரரின்மனைவி மாமல்லதேவி. அவள் சிறந்த பதிவிரதை உடன்கட்டை ஏற வேண்டும் என்று நினைத்தார் .ஆனால் தன்னுடைய மகனை என்ன செய்வது என்று தெரியாத காரணத்தால் அவனுக்கு சிறுவயதிலேயே சிந்தாமணி என்ற மந்திரத்தைப் போதித்து இருந்தாள்.
இந்த சிந்தாமணி மந்திரத்தின் மகிமை என்னவென்றால் அந்த மந்திரத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக யாராவது சொன்னாலோ அல்லது ஒரு இரவு முழுக்க ஒரு பிணத்தின் மீது ஏறி அமர்ந்து எவ்வித பயமும் இன்றி அதை உச்சரித்தாலோ சரஸ்வதிதேவி அவர்களுக்குகாட்சி தந்து வேண்டிய விரும்பிய வரத்தை தருவார் என்பதுஅந்த மந்திரத்தின் பலன்.
தன் தந்தையால் ஏற்பட்ட களங்கத்தை தன் மகன் ஸ்ரீஹர்ஷன் தீர்த்து வைக்க வேண்டும் என்று விரும்பி அவனுக்கு சிந்தாமணி மந்திரத்தை தொடர்ந்து பயிற்சி செய்தாள்.அவனும் சில நாட்களிலேயே நன்கு பயின்று விட்டான்.ஒரு நாள் இரவு தன் மார்பின் மீது அவனை படுக்க வைத்து மந்திரத்தை தொடர்ந்து சொல்லும்படி வலியுறுத்தினாள்.அந்த சிறுவன் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இருட்டை பயன்படுத்தி கத்தியால் தன் கழுத்தை அறுத்து இறந்து போனாள்.
இதை எதுவுமே அறியாத சிறுவன் ஹர்ஷர் தன் தாயின் அரவணைப்பில் தான் இருக்கிறோம் என்று நினைத்து விடிய விடிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். விடிந்தவுடன் சரஸ்வதிதேவி அவன் முன்னால் பேரொலியுடன் காட்சி தந்து அவன் நாவில் ஓம் என்ற மந்திரத்தை அட்சரத்தை எழுதினாள். நீ தலை சிறந்த கவிஞனாவாய் என்றும் வாக்களித்தாள். அவன் உடனே தாய் இறந்து கிடப்பதை கண்டு அவளுக்கு மீண்டும் வாழ்வளிக்க கேட்டுக் கொண்டான். சரஸ்வதிதேவி அவளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவளை எழுப்பினாள். இனி உலகம் போற்றும் கவிஞனாக ஸ்ரீஹர்ஷன் விளங்குவான் என்றும் உறுதிபடக் கூறினார் சரஸ்வதிதேவி.
இந்த ஸ்ரீ ஹர்ஷர் தான் பின்னாளில் நளசரிதம் என்ற நூலை எழுதியவர் .இந்த நூலின் விசேஷம் என்னவென்றால் எந்த கஷ்டத்திலும் ஒரு மனிதன் மனம் கலங்கக்கூடாது என்றும் கிரகங்களினால் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் நள சரித்திரத்தை படித்தோம் என்றால் கஷ்டங்கள் விலகும் என்றும் அதில்கூறியுள்ளது. மேலும் ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் நள சரித்திரத்தைப் படித்தால் அவனுடைய நாட்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்றும் இந்த சரிதத்தில் கூறியுள்ளது.
மத்யமர் அனைவரும் சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என்ற நல் எண்ணத்தில் இந்த சரித்திரத்தை இங்கு பதிகிறேன். இதைப் படிப்பவர் கேட்பவர் வாழ்வில் எல்லா வளமும் நலமும் உண்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதுவே நள சரித்திரம் எழுதிய ஸ்ரீ ஹர்ஷர் வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment