அரசியல் வாதிகள் திறமை
அரசியல்வாதிகள் திறமைசாலிகள் அதுவும் நமது தமிழக அரசியல்வாதிகள் மிகவும் திறமைசாலிகள்.
ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தேர்தலுக்கு நிற்க சீட் கேட்டு இருந்தார். அவருக்கு சீட்டு உடனே கிடைத்து விட்டது. தொகுதிக்கு ஓட்டு சேகரிக்கச்சென்று அனைவரையும் கண்டு வேண்டியது செய்து ஓட்டை வாங்கி வெற்றியும் பெற்றுவிட்டார். வெற்றி பெற்றவுடன் நன்றி அறிவிப்பு கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.
நன்றி அறிவிப்பு கூட்டம் நடப்பது தமிழ்நாட்டில். தமிழர்களோ வார்த்தையில் மயங்கி விடுவார்கள். அவர்களை வார்த்தை ஜாலம் காட்டி மயக்குவதற்காக வெற்றிபெற்ற எம்எல்ஏ தூயதமிழில் இவர்களை மயக்க வேண்டும் என்று நினைத்து வாழ்த்துரை வழங்கினார். எவ்வாறு இதோ கீழ்க்கண்டவாறு.
வாக்களிக்கிறேன் என்று வாக்களித்து வாக்களித்தபடி வாக்களித்த வாக்காளிப் பெரு மக்களுக்கும் வாக்களிக்கிறேன் என்று வாக்களித்து வாக்களித்தபடி வாக்களிக்காத வாக்காளி பெருமக்களுக்கும் வாக்களித்து வாக்களிக்காத வாக்காளப் பெருமக்களுக்கும் வாக்களிக்காமலே வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றி என்று கூறினார்.
அதாவது உங்களுக்கு ஓட்டு போடறேன் என்று சொல்லி சொன்னபடி ஓட்டு போட்டவங்களுக்கும் ஓட்டு போடறேன்னு சொல்லி சொன்னபடி ஓட்டு போடாத வங்களுக்கும் ஒன்னும் சொல்லாமலேயே ஓட்டுப்போட்ட வங்களுக்கும் சிலரு சில சொற்கள் சொல்லாமலேயே ஓட்டுப்போட்ட உங்களுக்கும் என் நன்றி.
Comments
Post a Comment