ஒரு பாடலின் அர்த்தம்
தெரிந்த பாடல் தெரியாத வரலாறு
இதுவரை கோவில் மகாத்மியம் எழுதிக் கொண்டிருந்த நான் புதுமையாக ஒரு சினிமாப் பாடலின் அர்த்தம் எழுதலாம் என்று முடிவு செய்ததன் விளைவே இது.
உள்ள மொத்த ஒரு காதலன் காதலி எனக்கு நீ உனக்கு நான் என்று ஈர் உயிர் ஓர் உயிராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தினமும் அவர்கள் பார்க்கில் பீச்சில் சந்திப்பது அளவளலாவது என்று நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது நாளை மாலை 4 மணிக்கு சந்திப்போம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் .
அதன்படி காதலன் அவளை காண்பதற்காக நாலு மணி இல்லை மூன்றரை மணிக்கே வந்து கையில் ஒரு மலரோடு வந்து அவள் தலையில் சூட வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறான். அதை அவன் இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.
அதற்கு அவள் மறுதலிக்கிறார் . எப்படி இதோ இப்படி
இந்த உலகத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்கள் .நீ தனியாக இருப்பாய் என்பதற்காகவே உன இளமைக்கு என்னை விருந்தாக்க வேண்டும் என்று நான் தனியாக வந்தேன் என்று சொல்லி.
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு விருந்தாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு)
இவர்கள் இவ்வளவு பாசமாக இருக்கும் பொழுது வரும் காதலியை அவன் காண்கிறான் ஆண்களுக்கே உள்ள சந்தேக குணம் அவன் மனதில் எழுகிறது. காரணம் அவள் உதட்டில் காயம் பட்டிருக்கிறது.கை வளையல்கள் உடைந்து கையில் காயம் பட்டிருக்கிறது.கூந்தல் கலைந்து இருக்கிறது.
உடனே அவன் அவளைப் பார்த்து கேட்கிறான்
நீ வரும்போது வழிமீது யார் உன்னைக் கண்டார் உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார் உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார் உன் மலர்க்கூந்தல்அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ் மீது பரிசென்ன தந்தார்.
உடனே அவள் மிகுந்த கோபமுற்று இவ்வளவு தானா உனக்கு என்னைப் பற்றி தெரிஞ்சது நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் உன்னைத் தவிர எனக்கு வேற யாரும் இல்லை நீ தனியாக இருப்பாய் என்று
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு விருந்தாக தனியாக வந்தேன்
என்று கூறிவிட்டு நடந்ததை உனக்குச் சொல்கிறேன் கேள்
நான் உன்னைப்பார்க்கணும் நீ என் அழகில் மயங்க வேண்டும் என்று நினைத்து சீவி முடிச்சு சிங்காரிச்சு நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு வந்திட்டு இருக்கும் போது அழகான என் முகத்தை பார்த்து இது ஒரு அழகான தாமரை மலர் என்று நினைத்து ஒரு வண்டு வந்து கடிச்சிடுச்சு அதனால உதட்டில் காயம் அந்த வண்டை விரட்ட கையை வேகமா கொண்டு போகும்போது கை வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி வளையல் உடஞ்சுகைய கிழிச்சு விட்டுருச்சு அதனால கையில் காயம் மறுபடியும் அந்த வண்டு வந்து துன்புறுத்தும்னு நினச்சுஓடி வரும்போது என் கூந்தல் கலஞ்சு மேகம் மாதிரி ஆயிருச்சு. நான் வேற வழியில்லாம உன்கிட்ட உண்மையைச் சொல்லனும்னு பயந்து ஓடி வரேன் என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கூறிவிட்டு இப்படி பாடுகிறாள்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத என் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு விருந்தாக தனியாக வந்தேன் .
இதுவே பாடலும் கருத்தும் நன்றி
முழுமையான பாடல்.
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு விருந்தாக தனியாக வந்தேன்.
நான் மலரோடு
நீ வரும்போது வழிமீது யார் உன்னைக் கண்டார் உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார் உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார் உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ்மீது பரிசு என்ன தந்தார்
நான் மலரோடு
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு விருந்தாக தனியாக வந்தேன்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத என் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் இளமைக்கு விருந்தாக தனியா வந்தேன்
நான் மலரோடு
Comments
Post a Comment