கொலு அமெரிக்கா
நவராத்திரி ஸ்பெஷல்
கொலு
எல்லோரும் கொலு வைத்து ஃபோட்டோ போடுகிறார்கள் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உடனே என் மருமகள் அப்பா நாங்கள் இங்கு அமெரிக்காவில் ஆஸ்டனில் கொலுவைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து ஒரே கலராக பச்சை புடவை கட்டி லலிதா சஹஸ்ரநாமம் படித்தோம்.பின் அனைவருக்கும் நம்ம ஆத்திலேயே இரவு டிபன் பண்ணிக் கொடுத்தேன்.
பொதுவாகவே ஆஸ்டனில் உள்ள தமிழர்கள் தெலுங்கர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் ஒரோரு வீடாக லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது வழக்கம். இந்த வாரம் நவராத்திரி ஸ்பெஷல் வேறு கேட்க வேண்டுமா. அனைவரும் ஒன்று சேர்ந்து அம்பிகையை வழிபட்டு பூஜா செய்தனர்
அந்த போட்டோக்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். என்னமோ உங்கள் மத்யமர் குரூப்பில் சனிக்கிழமை கொலு ஸ்பெஷல் என்று சொன்னீர்களே இதைப் போடுங்கள் என்று சொன்னாள். ஆஹா தெய்வமே நமக்குத் துணை. வேறு என்ன வேண்டும் என்று முடிவு செய்து போட்டு விட்டேன்
நன்றி நன்றி நன்றி
Comments
Post a Comment