காசி விஸ்வநாதர் கோயில் மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது காசி மஹாத்மியம்.
காசியில் முக்கியமான கோயில்கள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி ஆலயம் ஆஞ்சநேயர் ஆலயம் காலபைரவர் கெளடி மாதா என்கிற சோளி மாதா ஆலயம் முதலியன.
இதில் காசி விசுவநாதர் ஆலயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று .ஆதலால் இதைப் பற்றி குறிப்பிட வேண்டியது இல்லை.
அன்னபூரணி ஆலயம் .மாதான்ன புவனேஸ்வரி அனைவரும் அறிந்ததே.
காலபைரவர்.
இவரைப் பற்றிக் காண்போமா.
இவர் காசியின் காவல் தெய்வம் .இவர் காசியை கண் போல பாதுகாத்து வருகிறார். ஒருநாள் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்வதற்காக ராமபிரான் ஆஞ்சநேயரை காசிக்கு சென்று லிங்கம் கொண்டு வர அனுப்பினார். ஆஞ்சநேயரும் காசிக்குச் சென்று லிங்கத்தை தேடினார்.அங்கு ஆயிரக்கணக்கான லிங்கங்கள் இருந்தன. அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. எதை எடுப்பது என்று. அந்த நேரம் வானில் கருடன் ஒன்று ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின் மேல் பறந்தது .அதைக்கண்ட ஆஞ்சநேயர் அந்த லிங்கத்தை எடுக்கலாம் என்று நினைத்தபோது பல்லியும் ஒன்று கத்தியது .அதே நேரத்தில் அங்கு உள்ள காகம் கரைந்தது.
உடனே ஆஞ்சநேயர் அந்த லிங்கத்தை எடுக்கலாம் என்று நினைத்த போது பளாரென்று ஒரு அறை விழுந்தது. யார் என்று பார்த்தால் காலபைரவர். பின் இருவருக்கும் துவந்த யுத்தம் நடந்தது .வெற்றி தோல்வி இன்றி நடந்த யுத்தம் முடிவில் சிவபெருமான் காட்சி தந்து காலபைரவரிடம் ஒரு நல்ல விஷயத்திற்காகத் தான் ஆஞ்சநேயர் அந்த லிங்கத்தை கொண்டு போகிறார் .ஆதலால் நீங்கள் தயவு செய்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .காலபைரவர் வேறு வழியில்லாமல் அரை மனதுடன் விட்டுக்கொடுத்தார். ஆஞ்சநேயர் அந்த லிங்கத்துடன் ராமேஸ்வரம் சென்று விட்டார்.
உடனே காலபைரவர் சிவனிடம் மிகுந்த வருத்தத்துடன் நான் இந்த இடத்தைக் காவல் காக்கும் தெய்வம் என்னிடம் கேட்காமல் எடுத்தது தவறு இல்லையா என்று கேட்க சிவபெருமான் பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். இருந்தும் கோபம் தணியாத காலபைரவர் இந்த காசியில் கருடன் தான் காண்பித்து கொடுத்தது மேலும் பல்லியும் காட்டிக்கொடுத்தது. மேலும் காகம் கரைந்தது ஆதலால் நான் இன்றிலிருந்து இந்த காசியின் எல்லைக்குள் கருடன் பறக்கக் கூடாது என்று சாபமிடுகிறேன் என்று கூறினார்.
காசியில் ஆறு முக்கியமான சாபங்கள் உள்ளன அவை வருமாறு.
1.காசியை சுற்றிலும் எங்கும் கருடன் பறக்காது
2.காசியை சுற்றிலும் எங்கும் பல்லிகத்தாது
3. காசியை சுற்றிலும் எங்கும் காக்க கரையாது
4. காசியை சுற்றிலும் உள்ள மாடுகள் முட்டாது
அதாவது மாடு காசியில் முட்டாது.
5.காசியில் உள்ள பூக்கள் மணக்காது
6.காசியில் இறந்தால் பிணம் நாறாது
ஆதலால் தான் தினம் இறந்தவுடன் பூதவுடலுடன் கங்கையில் தூக்கி வீசி விடுவார்கள் (இதனால் நிறைய தவறுகள் நடப்பதற்கும் சந்தர்ப்பம் உண்டு மேலும் கங்கையில் மிதக்கும் பிணங்களை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்று உத்தரவு உள்ளது இது தீய சக்திகளுக்கு ஒரு வரம் ஆகி விட்டது.)
அடுத்த சோலி மாதா ஆலயம்.(கெளடி மாதா)
காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்திற்கு செல்ல மறந்துவிடுவார்கள். இது காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மூணு அல்லது நாலு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .இதில் என்ன விசேஷம் என்றால் அஹோபிலம் சென்று திரும்புபவர்கள் கீழே சாட்சி கணபதி ஆலயம் உள்ளது .தவறாமல் அங்கு சென்று சாட்சி கணபதியிடம் நான் அகோபிலம் வந்தேன் என்று சொல்லிவிட்டு வரவேண்டும். நாளை நீ அஹோபிலம் வந்தயாஎன்று யாராவது கேட்டால் அங்கு உள்ள சாட்சி கணபதி ஆமாம் இவன் வந்தான் அதற்கு நான் சாட்சி என்று சொல்வாராம். அது போல இந்த ஆலயத்தில் நாம் சென்று காசிக்கு வந்தேன் என்று சொன்னால் நாளை நாம் இந்த பூலோக வாழ்க்கை முடிந்து மேலுலகம் சென்று சித்திரகுப்தன் நமது பாவ புண்ணிய கணக்குகளை பார்க்கும்போதுஇவர் செய்த புண்ணியம் என்ன என்று கேட்டால் அதற்கு சோழி மாதா இவர் காசிக்கு வந்து இருக்கிறார் இவருடைய பாவம் எல்லாம் தொலைந்து விட்டது அதற்கு நானே சாட்சி என்று இந்த அம்மா சாட்சி சொல்வார்
ஆதலால் தவறாமல் காசிக்குச் செல்பவர்கள் இந்த மாதா ஆலயத்திற்கு சென்று வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவே காலபைரவர் சோழி மாதா ஆலயம் ஆகியவற்றின் வரலாறு
இதுவரை படித்தமைக்கு நன்றி
நாளை வேறொரு வரலாறு உடன் சந்திப்போம்
Comments
Post a Comment