தோடுடைய செவியன் என்ற பாடலுக்கான வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது ஞானசம்பந்தர் எழுதிய பாடலின் அர்த்தம் .

அது என்ன பாடல் என்றால்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

இந்தப் பாடல் தோடுடைய செவியன் என்று வருகிறது. அது என்ன தோடுடையசெவியன்.

அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போமா.

பகன் லம்பகன் என்ற இரு கிங்கரர்கள் பகனுக்கு மத்தளம் வாசிப்பதில் ஆர்வம் .லம்பகனுக்கு வீணை வாசிப்பதில் ஆர்வம் .24 மணி நேரமும் மத்தளமும் வீணையையும் வாசித்துக்கொண்டே இருப்பார்கள். பகன் மத்தளம் வாசித்துக்  கொண்டே இருப்பான். லம்பகன் வீணையை வாசித்துக் கொண்டே இருப்பான்.இருவரும் சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றி சாம கானத்தில் மத்தளமும்  வீணையும் வாசிக்க ஆரம்பித்தார்கள் .அனைத்தையும் மறந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்வதற்குப் பதிலாக அவர்கள்சாம கானத்தில் இசையை வாசித்து சிவபெருமானை நோக்கி வழிபட ஆரம்பித்தார்கள். இசையில் மயங்கிய சிவபெருமான் அவர்களுக்கு காட்சி தந்தார்.

என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் .இருவரும் நாங்கள் எப்பொழுதும் இசையை வாசித்துக் கொண்டே இருப்போம் தாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்கள் .அதற்கு சிவன் இந்த உலகத்திற்கு நான் படி அளக்க வேண்டும் உங்களிடையே கவனம் செலுத்தினால் உலகை யார் காப்பது என்று கேட்டார். அதற்கு இருவரும் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது எங்களுடைய இசையை தாங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் இதுவே எங்களுக்கு அருள வேண்டிய வரம் என்று சொன்னார்கள்.

உடனே சிவபெருமான் பகனை ஒரு தோடாக்கி  ஒரு காதிலும் லம்பகனை மறு தோடாக்கி மறு காதிலும்
அணிந்து கொண்டு நீங்கள் வாசித்துக் கொண்டே இருங்கள் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று சொன்னார் .பகனும் அவரின் ஒரு காதிலிருந்து மத்தளத்தையும் லம்பகன் மற்றோரு காதில் இருந்து வீணையும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.சிவபெருமானும்
கேட்டுக்கொண்டே  இருக்கிறார்.இந்த விஷயம் ஞான சம்பந்தருக்கு தெரிய வந்தது .உடனே அவர் சிவபெருமானை குறித்து இயற்றிய  பாடல் தான் தோடுடைய செவியன் .

தோடுடைய செவியன் என்ற பாடலுக்கான வரலாறு இது தான்.

இதுவரை படித்தமைக்கு நன்றி  நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்