அஹோபிலம்

டூர் சிறு குறிப்பு.  ஸ்ரீ சைலம் மலை மேல் மல்லிகார்ஜுன் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.   மஹா நந்தி   நந்தி வாயில் இருந்து நீர் வரும் அருமையாக குளிக்கலாம்.  அடுத்ததாக அஹோபிலம் மொத்தம் ஒன்பது நரசிம்மர் 1 ஜ்வாலா நரசிம்மர் 2 அஹோபில நரசிம்மர் 3 மலோல நரசிம்மர் 4 க்ரோடகார (வராக) நரசிம்மர் 5 கரஞ்ச நரசிம்மர் 6 பார்கவ நரசிம்மர் 7 யோகானந்தா நரசிம்மர் 8 சத்ரவட நரசிம்மர் 9 பவன நரசிம்மர்  இதில் 5 நரசிம்மர் காரில் சென்று பார்க்கலாம் மீதி நாலு நடந்து அதில் ஜ்வாலா மலோலநரசிம்மர் நடந்து தான் போக வேண்டும் முடியாதவர்கள் டோலியில் போகலாம் 3000 ரூபாய் செலவு ஜ்வாலா நரசிம்மர் என்பது தான் ஹிரன்ய கசிபைகொன்ற இடம் இன்றும் அந்த இடம் உக்ரமாக உள்ளதாகவும் புல்லை காண்பித்தால் தீ பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது ஆனால் அங்கு போவது சாமான்யமாக நடக்க கூடியது அல்ல காரணம் கல்லு முள்ளு ஓடை பாறை மேடு பள்ளம் குழி குன்று சில்லுகள் அனைத்தையும் தாண்டி ஏறி மூச்சு திணறி ஒரு வழியாக போனால் முதலில் ரத்த குண்டம் ரத்த குண்டம் என்பது ஹிரன்யனைக்கொன்ற பிறகு கையைக் கழுவிய இடம் அந்த சுனை நீர் அந்த கொழுத்தும்வெய்யிலில் ஜில் என்று இருப்பது அதிசயம் எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம் அருமை அருமை பிரமாதம் பின் அங்கிருந்து மலோலநரசிம்மர் மா என்றால் மஹாலக்ஷ்மி லோலன் என்றால் பிரியமானவன் லஷ்மி யிடம் பிரியம் உள்ளவர் என்று பொருள் இத்தகைய ஒரு மிக மிக மிக கடின பயணத்தை முடித்துக் கொண்டு சற்று ஓய்வு மீண்டும் அடுத்த நாள் பார்கவ  பாவன நரசிம்மர் தரிசனம்  அப்பா அப்பா அப்பா நடந்தோ காரிலோ போக முடியாது ஜீப் அல்லது டிராக்டர் தான் அதுவும் மேடு பள்ளம் குண்டு குழி சேறு சகதி ஆறு ஓடை பாறை கற்குவியில் அப்ப அப்ப அப்பா ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விடும் அல்லது சிக்கிக் கொள்ளும்சேற்றில் மாட்டிக் கொள்ளும் இதெல்லாம் தாண்டி போய் சேர்ந்தால் பாவன நரசிம்மரை தரிசிக்கலாம் பாவன நரசிம்மருக்கு பலி ஆடு கோழி முதலியவை கொடுக்கிறார்கள் காரணம் அதற்கு அது முடிந்ததும் வந்த வழியே திரும்பி வந்து மீண்டும் புதிய பாதையில் மேலே குறிப்பிட்ட அத்தனையும் உள்ள தனி ரூட்டில் மீண்டும் சென்று பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம்  பார்கவா என்றால் பரசுராமர் அவருக்கு காட்சி கொடுத்ததால் பார்கவ நரசிம்மர் என்று பெயர் மீதி நரசிம்மர்களை தரிசிப்பது அவ்வளவு கடினம் இல்லை ஆனால் இந்த நான்கு நரசிம்மர்களை தரிசிப்பது என்பது மிகவும் கடினம் நரசிம்மா நரசிம்மா என்று கூறிக் கொண்டே போனால் வலியோ வேதனையோ தெரியாது தயவு செய்து முடிந்தவர்கள் ஒரு முறை யாவது சென்று நவ நரசிம்மர்களையும் தரிசித்து அவர்களின் ஆசியைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் நன்றி வாழ்க வளமுடன் ஓம் நரசிம்மா

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்