ஏர்ஃபோர்ஸ் சாகசங்கள்
நேற்றைய பதிவின் தொடர்ச்சி (இன்றுடன் நிறைவு)
முதலில் நான் ஒன்று கூற விரும்புகிறேன். எங்களது விடுமுறை நாளில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாட்டு கூத்து நடனம் முதலியவைகளில் பங்கேற்று சந்தோஷமாக இருப்போம்.அப்போது அனைவரும் சேர்ந்து அந்த காலத்தில் வெளியான ஒரு பாடலைத் தான் அனைவரும் விரும்பி பாடுவோம்.அந்தப்பாடல் இதோ.
கருநீல மலை மீது தாயிருந்தாள் காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்.வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்.வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
பாலூடடும் போது அவள் நினைத்தாளா பிள்ளை பாரதம் காக்கும் என்று வளர்த்தாளா தாலாட்டுப் பாட்டில் அவள் இசைத்தாளா . இதைத் தான் கூட்டமாக பாடிக் கொண்டு இருப்போம்.
இனி விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம்.
ஏர்போர்ஸில் காலையும் மாலையும் ரெண்டு நேரமும் குளிக்கும் பழக்கம் உண்டு.சேர்ந்த முதல் நாள் மாலை குளிக்க பாத்ரூம் சென்றேன்.பின் அங்கிருந்து பேய் அடித்தது போல் வெளியே ஓடி வந்தேன்.எனது முகம் எல்லாம் வெளிறிப் போய் விட்டது.வழியில் என்னை என் சக தோழர்கள் பிடித்து என்னடா ஏன் இப்படி பயந்து ஓடி வர என்று கேட்டார்கள். அதற்கு நான் டேய் இங்க நாம எல்லாரும் ஆம்பிளைப் பசங்க வயசுப் பசங்க மேலும் இது பேச்சிலர் தங்கும் இடம் இங்க ஒரு பொண்ணு பாத்ரூமில் குளிக்கறடா என்று கூறினேன்.அவர்களுக்கும் ஷாக் என்ன என்னடா சொல்ற என்று கூறி ஒருவன் சென்று பார்த்தான் ( காதல் படத்தில் பரத் சந்தியா நடிப்பில் சந்தியா ஆண்கள் மேஸனில் குளிப்பதை ஒளிந்து கொண்டு பார்ப்பானே அது போல பார்த்துக் கொண்டு இருந்தான்.)
பிறகு அங்கேயே வெய்ட் பண்ணி உள்ளே இருந்து குளித்து கதவைத் திறக்கும் வரை காத்திருந்து அவன் pl note அவன் வெளியே வரும்போது அவன் கையைப் பிடித்து வந்து என்னிடம் காண்பித்து பாராடா என்று காண்பித்தான். அவனுக்கு பாதாதிகேசம் அதாவது தலை முதல் கால் வரை முடி தொங்கியது.என் நண்பன் டேய் அவன் சார்தார் டா சிங் என்று அழைப்பார்கள்.தினமும் அவர்கள் மேலுக்கு தான் குளிப்பார்கள் வாரத்தில் ஒரு நாள் பெண்கள் போல தலையை அலசுவார்கள் அவன் தலைமுடியை பார்த்து நீ பெண் என்று நினைத்து பயந்து விட்டாய் என்று கூறினான்
வருடம் 46 ஓடி விட்டது இன்னும் அந்த நினைவு பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது.
அடுத்த நாள் மீண்டும் ஒரு கலாட்டா.
அதாவது சாயந்திரம் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து தலைமுடியை வெட்டச் சொன்னார்கள். முடி வெட்டும் இடத்தில் ஒரே சத்தம் ரகளை காரணம் உள்ளே போனால் மொட்டை அடித்து வெளியே வருகிறார்கள். அனைவருக்கும் கோபம்.காரணம் 1972ல் அனைவரும் ஹிப்பி ஸ்டைலில் நீண்ட தலைமுடி வைத்துக் கொண்டு அலையும் காலத்தில் ஒட்ட வெட்டி மொட்டை அடித்தால் எப்படி இருக்கும். கத்தி சத்தம் போட்டு பின் எதுவும் எடுபடாமல் முடியைக் காவு கொடுத்து விட்டு சோகமாக வந்தோம்.இத்தனை வருடம் கழிந்தும் அதை நினைத்தால் இப்பவும் துக்கம் தொண்டையை அடைக்கிறது
இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி.ஒரு ராணுவ வீரன் என்பவன் (அந்தக் காலத்தில் not today) தன் உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர் தாய் தந்தை தமக்கை அனைவரையும் விட்டு விட்டு மட்டும் செல்லவில்லை. தன் உடலையே தன் விருப்பம் போல் வைத்துக் கொள்ள முடியாது என்பது தான் முக்கியமான விஷயம்.ஆகையால் அவ்வாறு தியாகம் செய்து தான் ஒவ்வொரு ராணுவ வீரனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று கூறி இதுவரை பொறுமையாக படித்ததிற்கு நன்றி ஜெய்ஹிந்த்.(இனி மீண்டும் ஞாபகம் வந்தால் further எழுதுகிறேன் until then bye for time being
Comments
Post a Comment