காவிரி ஆற்றின் மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

காவேரி மஹாத்மியம்.

தலக்காவேரி (தலக்காவேரி முகப்பு நுழை வாயில் ஃபோட்டோ இணைத்துள்ளேன்).

காவிரி நதி அதன் உற்பத்தி அதன் வரலாறு எல்லாம் பார்ப்போமா.

காவிரி நதி மிகவும் புண்ணியம் வாய்ந்த தெய்வீக நதி.  கர்நாடக மாநிலத்தில் குடகில் உற்பத்தியாகி பல வழிகளில் பயணித்து பல இடங்களில் விவசாயத்தை செழிப்பாக்கி தமிழ்நாட்டிற்கு வந்து திருச்சியில் sri ரங்கநாதர் பாதத்தை தொட்டு வழிபட்டு பல வழிகளில் பயணித்து இறுதியில் கடலில் கலக்கிறது.

இதன் வரலாறு.

அகத்திய மாமுனி அ  குள்ள முனி அ குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர் ஒரு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடித்து விச்ராந்தியாக வனத்தில் நடந்து வரும்போது ஒரு மரக்கிளையில் பல ஆவிகள் தொங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே துணுக்குற்று நீங்கள் யார் ஏன் ஆவியாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் மகனே நாங்கள் எல்லோரும் உன் முன்னோர்கள் எங்களுக்கு பிதுர்க்கடன் யாரும் செய்யாததால் நாங்கள் சொர்க்கம் சென்று சேரவில்லை. நீ திருமணம் செய்து கொண்டு எங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும்  நிறைவேற்றினால் நாங்கள் அனைவரும் சொர்க்கம் சென்று சேர்ந்து விடுவோம் என்று கூறினார்கள். உடனே அகத்தியரும் அவர்களது கூற்றை சிரமேற்கொண்டு திருமணம் செய்ய சம்மதித்தார்.

உடனே அந்த ஊர் ராஜாவிடம் சென்று நான் திருமணம் செய்ய வேண்டும் தங்களது திருக் குமாரத்தியை எனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த ஊரின் ராஜாவின் பெண்ணின் பெயர் லோபமுத்திரை (காவிரி நதியின் உண்மையான பெயர் லோபமுத்திரை என்பதாகும்).

உடனே ராஜா அகத்தியரே நீங்கள் மஹா...ரிஷி அதே சமயம் மிகவும் வயதானவர் நான் மறுத்தால் சாபம் குடுப்பீர்கள். ஆதலால் இதில் நான் தலையிட விரும்பவில்லை. என் மகள் விரும்பினால் நீங்கள் தாராளமாக விவாகம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். உடனே அகத்தியரும் லோபமுத்திரையிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் அதற்கு அவளும் உடனே சம்மதம் தெரிவித்தார்.

திருமணம் முடிந்த கையோடு ஆஸ்ரமத்திற்கு அழைத்து வந்து விட்டுட்டு தியானத்தில் ஈடுபட்டார்.
தனக்கு திருமணம் ஆனதையே மறந்து விட்டார். நீண்ட காலத்திற்கு பிறகு கண் விழித்து உலகைப் பார்த்தார். நதியைப் பார்த்தார் கடலைப் பார்த்தார் வானத்தைப் பார்த்தார்.எங்கு பார்த்தாலும் நதியில் கடலில் வானத்தில் பேரன் பேத்தி அப்பா அம்மா மகன் மகள் தாத்தா பாட்டி என்று குடும்பம் குடும்பமாக இருப்பதைக் கண்டார்.வம்ச விருத்தியைக் கண்டார்.

அப்பொழுது தான் பிதுர்க்கடன் ஞாபகம் வர லோபமுத்திரையுடன் இணைந்து அனைத்து பிதுர்க்கடன்களையும் முடித்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். பின் லோபமுத்திரையை நீராக்கி (தண்ணீராக்கி போகும் இடமெல்லாம் மனைவியை அழைத்துக்கொண்டு போக முடியாது என்பதால்) கமண்டலத்தில் அடைத்து வைத்து எடுத்துக் கொண்டு போனார்.

உடனே மஹாவிஷ்ணு சிவன் அனைவரும் யோசித்து உலகிற்கு பயன் படக்கூடிய ஒரு சிறந்த நிதியை இவர் யாருக்கும் உபயோகமில்லாமல் கமண்டலத்தில் அடைத்து வைத்து இருக்கிறாரே என்ன செய்யலாம் என்று யோசித்து ஆபத் பாந்தவனாகிய விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்.

யாருக்கு என்ன துன்பம் கஷ்டம் வந்தாலும் முதலில் தீர்த்து வைப்பவர் விக்னங்களைக் களைபவர் விநாயகர் தான். ஒரு காரியம் உலகிற்கு நன்மை அளிக்க வேண்டும் என்றால் விநாயகர் துணை இருந்தால் தான் நடக்கும். எப்படி என்றால்
ராவணன் கைலாயத்தை தூக்கிக் கொண்டு வரும்போது விநாயகர் தான் சென்று தந்திரம் செய்து கீழே இறங்கி வைக்க வைத்தார். அதனால் தான் நமக்கு இங்கு பஞ்சலிங்கங்களான கோகர்ணம முடீஸ்வரர் தர்மஸ்தலா போன்றவை கிடைத்தன (இது மிகவும் பெரிய கதை தனிப் பதிவாக போடுகின்றேன்).

விபீஷணன் ரங்கநாதரை தூக்கி கொண்டு வரும்போது விநாயகர் தான் சென்று கீழே இறங்கி வைக்க வைத்து நம் அனைவரும் வழிபட sri ரங்கநாதரைக் கொடுத்தார்.அது போல் இங்கும் விநாயகர் காரியத்தில் இறங்கி விட்டார்.

காக்கா ரூபம் எடுத்து வந்து அகத்தியர் பூஜை செய்யும் போது அவர் அறியாமல் கமண்டலத்தை தட்டி விட அதிலிருந்து நீர் குபு குபு என்று பாய்ந்து ஓடியது. உடனே அகத்தியர் காக்காவைக் குட்ட கையை ஓங்கிய போது காக்கா மறைந்து விநாயகர் காட்சி தந்தார். உடனே அகத்தியர் மன்னியுங்கள் விநாயகப் பெருமானே என்று சொல்லி தன் தலையில் குட்டிக் கொண்டார்.

உடனே விநாயகர் அகத்தியா நீ தவறு செய்தாய் தலையில் குட்டிக் கொண்டாய். ஆதலால் இன்று முதல் என்னைக் காண வரும் பக்தர்கள் அவர்கள் செய்த தவறை மன்னிக்கும் படி என்னை வேண்டித் தன் தலையில் குட்டிக் கொண்டால் நான் அவர்கள் தப்பை மன்னித்து விடுவேன் என்று கூறினார். இதனால் தான் விநாயகர் முன் தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.

மேலும் அகத்தியர் பிரபுவே தாங்கள் காக்கா ரூபம் எடுத்து வந்து கமண்டலத்தை தட்டி விட்டு இந்த நதி விரிந்து ஓடுவதால் இன்று முதல் கா...விரி காவிரி என்று பெயர் பெறட்டும் என்று கூறினார்.

இதுவே காவிரி மஹாத்மியம்.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்