காலடி அக்ரஹாரம் கேரளா
ஆன்மீகம்:- தெரிந்த கதை.தெரியாத வரலாறு.
இடம். காலடி அக்ரஹாரம். கேரளா.
ஒரு 6அல்லது 7 வயது பாலகன் யாசகம் கேட்டு வருகிறான். அக்ரஹாரத்தில் ஒரு ஆத்தின் முன்பு நின்று கொண்டு ""பவதி பிஸ்ஸாந் தேஹீ"" என்று யாசகம் கேட்கிறான். அந்த வீட்டில் இருக்கும் மாது மனம் உடைந்து முகம் வெளிறி எல்லா இடங்களிலும் தேடுகிறாள். வாசலில் பார்க்கின்றாள் நன்கு தேஜஸ் உடன் அழகான ப்ரம்மச்சாரி பாலகன் நின்று யாசகம் கேட்கிறான்.அவன் கேட்பதோ யாசகம்.வீட்டிலோ அரிசி காலி பருப்பு உப்பு புளி ஒன்றும் இல்லை.மனம்வெதும்பி அங்கும் இங்கும் ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறாள்.இறுதியில் மிகவும் சுருங்கி வெம்பிப்போன ஒரு நெல்லிக்கனி யைத் தேடி எடுத்து வேறு வழியின்றி அதை அந்த பாலகனுக்கு பிச்சை இடுகின்றாள்.
அனைத்தையும் வாசலில் இருந்து கவனித்த அந்த பாலகன் மனம் மகிழ்ந்து லஷ்மி தேவியை நினைத்து """அங்கம் ஹரே புலக பூஷண் மாஸ்ரயந்தே""' என்று கனகதாரா ஸ்தோத்திரத்தை மனம் உருகி பாடுகின்றான்.அவனது பாடலில் மகிழ்ந்த லஷ்மியும் அவனுக்கு காட்சி கொடுத்து என்ன வேண்டும் சங்கரா என்று கேட்கிறார்.
அதற்கு சங்கரன் தாயே அந்தப் புண்ணியவதி வீட்டில் ஒன்றும் இல்லை தாங்கள் தயை கூர்ந்து அவளுக்கு செல்வத்தை ஈய வேண்டும் என்று கூறினார்.
""அதற்கு லஷ்மி தேவி என்னால் முடியாது நான் செய்ய மாட்டேன் என்று கூறி சென்று விட்டாள்."""
உடனே சங்கரன் மீண்டும் லஷ்மி தேவியை ஸ்தோத்திரம் பண்ணி அழைக்க மீண்டும் வந்து என்ன என்று கேட்கிறாள்.உடனே சங்கரன் தாயே அந்த மாது பாவம் ஒன்றும் வீட்டில் இல்லை தாங்கள் உதவ வேண்டும் என்று கேட்க தாயார் மீண்டும் மாட்டேன் என்று கூறி சென்று விட்டாள்.
மீண்டும் சங்கரன் அழைக்க தாயார் காட்சி தந்து என்ன என்று வினவ . தாயே அவர் வீட்டில் ஒன்றும் இல்லை இருந்தும் என் மனம் நோகக்கூடாது என்று நினைத்த அந்தப் புண்ணியவதிக்கு தாங்கள் அருள வேண்டும் என்று கூறினார். அதற்கு தாயார் சங்கரா அவள் கதையைக் கூறுகிறேன் கேள் என்றார்.
இந்த மாது வின் பெயர் சுசீலா.போன ஜென்மத்திலும் இவள் பெயர் சுசீலா தான்.இவள் சுதாமரின் மனைவி ( சுதாமர் என்பது குசேலரைக் குறிக்கும்.குசேலரின் இயற்பெயர் சுதாமா) சுதாமர் ஒரு முறை எங்களைத் தேடி (மஹாவிஷ்ணு கிருஷ்ணனாகவும் நான் ருக்மணி தேவி யாகவும் இருந்த பொழுது) துவாரகை வந்தார். க்ருஷ்ணன் ஒரு பிடி அவலை வாயில் போட்டார்.மீண்டும் உண்ண முயற்சிக்கும் போது நான் கையைப் பிடித்து விட்டேன்.காரணம் அந்த ஒரு பிடி அவலுக்கே துவாரகையின் பாதி செல்வம் காலியாகிவிட்டது.
அந்தக் கணமே இவள் மாபெரும் கோடீஸ்வரி ஆகிவிட்டாள்.அதிஅற்புதமான மாடமாளிகை கூடகோபுரம் வேலை ஆட்கள் பட்டு பவளம் வைரம் வைடூரியம் என்று செல்வத்தில் கொழித்தாள்.ஆனால் சற்று முன்பு இருந்த நிலையை மறந்தாள் . பணம் வந்து விட்டது என்ற காரணத்தினால் அனைவரையும் கொடுமைப் படுத்தினாள் யாருக்கும் அடங்கவில்லை.யாரையும் மதிக்கவில்லை எல்லோரையும் எடுத்து எறிந்து பேசினாள்.கட்டிய கணவனையே மதிக்கவில்லை.அதுமட்டுமல்ல எச்சக் கையால் காக்கா ஒட்டவில்லை.யாருக்கும் ஒன்றும் குடுக்க வில்லை தானமோ தருமமோ கிஞ்சித்தும் செய்யவில்லை.மனம்போனபடி செல்வத்தில் மிதந்தாள்.
அதன் விளைவாக அவளுக்கு மீண்டும் மூன்று பிறவிகள் உண்டு என்றும் அந்த மூன்று பிறவியிலும் அட்ட தரித்திரத்தில் வாழ வேண்டும் என்றும் சாபம் உள்ளது என்று கூறினார்.
அதற்கு சங்கரன் தாயே பாவம் அந்த மாது ஒன்றும் இல்லை இருக்கும் ஒரு நெல்லிக்கனி யை யாவது கொடுப்போம் என்று இக்கணத்தில் தோன்றியதே அதற்காக தாங்கள் அனைத்தையும் மறந்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
அதன் பிறகு மஹாலக்ஷ்மி சங்கரா என்னையே நீ கரைத்து விட்டாய் நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளுடைய சாபத்தைப் போக்கி அவளுக்கு செல்வ மழை பொழிஙிறேன் என்று கூறி தங்க நெல்லிக்கனி களை வீடு முழுவதும் கொட்டினாள் மஹாலக்ஷ்மி.
இது தான் கனகதாரா ஸ்தோத்திரம் தோன்றுவதற்கான காரணம்.
படித்ததிற்கு நன்றி. நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment