மத்யமர் தலைவர்

அனேகமாக மத்தியமர் தலைவருக்கும் அட்மின்களுக்கும்  விசாரணைக் கமிஷன்வழக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
காரணம் . தற்போது ஏற்பட்ட கஜா புயலுக்கு  காரணமானவர்கள் மத்தியமர் மெம்பர்கள் தான் என்று டெல்லியில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏன் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றால் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு மத்தியமர் தலைவர் திரு சங்கர் ராஜரத்தினம் அவர்கள் ஜெம் வாங்குவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒரு வழிமுறையை போட்டிருந்தார். அதைக் கண்ட மக்கள் அனைவரும் எனக்கு ஜெம் வாங்க வேண்டும் என்று அனைவரும் சந்தோசமாக குதித்ததால் அந்த சத்தம் பூமியை விட்டு வான் வரை சென்று வானத்தைக் கிழித்து மின்னலை உண்டாக்கி அந்த மின்னலின் தாக்கம் கடலில் கலந்து கடலில் வாயுவை உற்பத்தி செய்து காற்றையும் புயலையும் உண்டாக்கியது என்று டெல்லியில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தகவல் கூறுகிறது. மேலும் இது பரமரகசியமாக தயாரிக்கப்பட்ட புலன் விசாரணையின் அறிக்கை. இதன் காரணமாகத்தான்  விசாரணை கமிஷன் வரலாம் என்று நினைக்கிறேன் .தற்போது இந்த அறிக்கையின் நகல் பிரதமரின் கையில் உள்ளது என்று ரகசிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் புயல் அடித்தாலும் மழை பெய்தாலும் நான் போட்டோ போடுவேன் என்று திண்டுக்கலில் இருந்து வேலு மணியும் நான் பத்திற்குள் வரவேண்டும் என்று அனு மேடமும்  நான் குஜராத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நான் முதல் பத்திற்குள் வாங்க வேண்டும் என்று குஜராத் மேடமும் சிங்கப்பூரையே கலங்குகிறேன் தமிழ்நாடு எனக்கு ஒரு தூசு என்று வெங்கடேஷ் வீரராகவனும் காமராஜபுரத்தில்இருந்தால் என்ன நான் தனியாக  முயற்சி செய்வேன் என்று வெங்கட்ராமனும்பெண்ணின் திருமணம் கூட எனக்கு முக்கியமில்லை மத்யமர் தான் முக்கியம் என்று அலங்கார் பெனிடிக்டும்  இடையில் நானும் எங்கள் அனைவரையும் முந்தி ஒருவர் இருக்கிறார் என்றால் வெங்கட்வெங்கியும் அனைவரும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

நேற்று கோவை பொள்ளாச்சியில் விடாத அடைமழை .இத்தனை அடைமழையிலேயும் நாம் பயணிப்போம் என்று பயணித்து கோவையில் உள்ள பெரிய மாலில்  சென்றால் அங்கு அனைவரும் தெரிந்த முகமாக இருக்கிறார்கள் .அனைவரும் போட்டி போட்டு கொண்டு கவுண்டரில் நின்று ஒரு டோக்கன் வாங்குவதற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். பார்த்தால் அனைவரும் தெரிந்த முகமாக இருக்கிறார்கள்.முதலில்குஜராத் மேடம் வெங்கடேசன் வெங்கட்ராமன் அனைவரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.வெங்கட் வெங்கி கடும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார் முன்னேறுவதற்கு. நானும் முன்னேறலாம் என்று பார்த்தால் என்னை பின்னால் தள்ளிவிட்டு கொண்டே இருந்தார்கள் .நான் உடனே அருகில் இருந்த  அலங்கார் பெனிடிக்டும்என்ன என்று கேட்டேன் . அதற்கு அவர் இங்கு டோக்கன் தருகிறார்கள். அந்த டோக்கனை வாங்கிக்கொண்டு மத்யமரில் காண்பித்தால் ஜெம் வழங்கப்படுமாம்.அதனால்தான் அந்த டோக்கனை வாங்குவதற்கு இவ்வளவு முண்டியடித்து முயற்சி செய்கிறார்கள் என்று  கூறினார். உடனே நான் இங்கு உள்ள அனைவருக்கும்  தான் ஜெம்கிடைத்து விட்டதே என்று கூறினேன். அதற்கு அவர் ஜெம் கிடைக்காதவர்களுக்கு ஜெம்மும்  ஜெம் கிடைத்தவர்களுக்கு முதல் பத்திற்குள் வரவேண்டும் என்ற போட்டியும் இருப்பதால் இந்த டோக்கனை காண்பித்தால் முதல் பத்துக்குள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறினார்.

நாட்டில் இத்தனை கலவரத்தையும் உண்டுபண்ணின தலைவர் சங்கர் ரத்தினத்தின் மேல் முதல் விசாரணைக் கமிஷனும்  மத்யமர்கள்  அனைவரின் பேரில் தனியாக ஒருவிசாரணைக் கமிஷனும் வைக்க முடிவு செய்து உள்ளார்கள். ஒரு நாட்டில் புயலையே உருவாக்க முடியும்  என்றால் எத்தனை கட்டுக்கோப்புடன் அனைவரையும் வளர்த்து விட்டிருக்கிறார்  என்று சில சமயம் கோர்ட் அவரைப் பாராட்டவும் செய்யலாம்.

நான் இவ்வாறு அறுதியிட்டு உறுதியாக கூறுவதற்கு காரணம் எனது சிறுவயதில் எட்டு பத்து வயது இருக்கும் பொழுது நான் கேட்டிருக்கிறேன் சீனாவில் ஜனத்தொகை அதிகம் என்றும் சீனாவில் உள்ளவர்கள் அனைவரும்  ஒரே நேரத்தில் ஒரே ஒரு குதி  எம்பி குதித்தால்  அந்த சத்தத்தின் எதிரொலி கேட்டு இந்தியா சுக்குநூறாக போய்விடும் என்றும்  உடைந்து போய் விடும் முடிந்துவிடும் காணாமல் போய்விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

நான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் மத்யமர் அனைவரும்  சப்தம் செய்ததால் தான் கஜா புயலே உருவானது .இனி இதுபோன்ற போட்டிகளை அறிவித்து நாட்டில் இது போன்ற புயலைஉருவாக்க வேண்டாம் என்று தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி வணக்கம்.

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்