பால் பாயசத்தின் பெருமை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது பால் பாயசத்தின் பெருமை.
அதென்ன பால் பாயசத்தின் பெருமை. அதுக்கு என்ன தனி விசேஷம் .அதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.
ஒரு வஜனம் சொல்லுவா பிராமணாள் வேதவியாசகாள். பிராமணாள் போஜனப்பிரியாள் .அது என்ன போஜனப்பிரியாள். அதை சற்று விரிவாக பார்ப்போமா.
ஒரு பந்தி நடந்திண்டிருக்கு .ரெண்டு பிறாமணாள் உட்கார்ந்து சாப்பிட்டிண்டு இருக்கா.( சவுண்டி பிறாமணாள்னு வேணும்னாலும் சொல்லலாம் ) நன்னா சாம்பார் வத்தக் குழம்பு மோர் குழம்பு கூட்டு பொரியல் பச்சடி கோசுமரி வடைன்னு சாப்பிட்டு வயிறு ஃபுல்லா ஆயிடுத்து.
அப்போ ஒருத்தர் சொல்றார் .ஓய் சாப்பாடு பிரமாதமாக இருக்கு. ஆனால் சாப்பிடத்தான் வயிற்றில் இடம் இல்ல அப்படின்னு சொல்றார். அதுக்கு இன்னொருத்தர் சொல்றார்.ஓய் உன் ரெண்டு விரலை வாயில் விட்டு எல்லாத்தையும் வெளியில் எடுத்துட்டு வந்து மறுபடியும் சாப்பிட வேண்டியதுதானேன்னு.அதுக்கு அவர் சொல்றார்.ஓய் ரெண்டு விரல் உள்ள போற அளவுக்கு இடம் இருந்ததாநான் இன்னும் ஒரு உருண்டையை வாயில் போட்டு இருப்பேனே அப்படின்னார்.
அப்ப பந்தியிலே பரிமாறுவர் பால் பாயசம் பால் பாயசம் சந்தேகத்துக்கு பால் பாயசம் என்று பரிமாறிட்டு வந்துட்டு இருக்கிறார் .அப்ப யாரு ரெண்டு வெரலை வாயில் உள்ள விட இடம் இல்லைன்னு சொன்னாரோ அவரு பால் பாயசத்தை ஊத்துங்க ஊத்துங்க ஊத்துங்க ன்னு சொல்லி ஒரு எட்டு பத்து கரண்டி வாங்கினார்.
அப்ப மற்றவர் கேக்குறாரு .ஏன் ஓய் வயித்துல இடமே இல்லைன்னு சொன்னீர் .இப்ப பத்து கரண்டி பால் பாயசம்வாங்கி இருக்கீறே அதை எப்படி சாப்பிடுவீர் என்று கேட்டார். அதுக்கு அவர் சொல்கிறார் அம்பீ நோக்கு பால்பாயசத்தின் அருமை தெரியாதா சொல்றேன் கேளு அப்படின்னு சொல்ல ஆரம்பிக்கிறார்.
உனக்கு திருச்சூர் பூரம் பத்தி தெரியுமா அப்படின்னு கேட்கிறார். அதுக்கு அவர் தெரியாது அப்படின்னு சொல்றார். நான் சொல்றேன் கேளு. திருச்சூரில் இந்தக்காலம் இல்ல அந்த காலத்துல பூரம் பண்டிகை விசேஷமா நடக்கும். எங்கிருந்தெல்லாமோ ஜனத்திரள் வந்திருப்பா யானை குதிரை மக்கள் கூட்டம் ஆட்டம் பாட்டம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். எள்ளு போட்டா எள்ளு விழகாதுன்னு சொல்லுவா தெரியுமா. அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா. எள்ளு என்பது ஒரு சின்ன பொருள் .அது அப்படியே மேல தூக்கி போட்டால் அது பூமியைத் தொடாமல் யாரோடு தலையிலோ தான் விழும். அந்த எள் கீழே விழும் அளவுக்கு கூட இடமில்லாத அளவுக்கு ஒரே தலைகளாக இருக்கும். ஒரு பாட்டு சொல்லுவா தெரியுமா கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையான்னு. அந்த அந்த மாதிரி எங்க பார்த்தாலும் ஜனத்திரள் ஒரே கூட்டமா இருக்கும்.
அப்ப பார்த்து திடீர்னு ஒரு குரல் கேட்கும். திருச்சூர் மகாராஜா பராக் பராக் பராக் அப்படீன்னு ஒரு குரல் கேட்கும் .பார்த்தா திருச்சூர் மகாராஜா முதல்ல யானைப்படை அப்புறம் குதிரைப்படை அப்புறம் காலாட்படை அப்புறம் தேரு அப்புறம் ரதம் அப்புறம் மெய்க்காப்பாளர்கள் அப்புறம் மகாராஜா பெரிய தேரில் பவனி வருவார் ரத கஜ துரக பதாதிகளுடன்.
எள்ளு போட்டா எள்ளு கீழே விழ இடமில்லை என்று சொன்ன கூட்டம் மகாராஜா வரார்ன்ன உடனே எப்படித்தான் அங்க அவ்வளவு இடம் வந்ததோ தெரியாது .மகாராஜாவிற்கும் அத்தனை படைவீரர்களுக்கும் அவர்களின் ரத கஜ துரக பதாதிகளுக்கும் எப்படித்தான் இடம் கிடைத்ததோ தெரியாது அத்தனை பேரும் மகாராஜா கூட்டத்திற்கு அத்தனை கூட்டமும் ஒதுங்கி மகாராஜா வருவதற்கு வழி கிடைக்கும். அந்த மாதிரி தம்பி வயிறு என்னதான் நிரம்பி இருந்தாலும் பால் பாயாசம் னு சொன்னா வயிறு தன்னால ஒதுங்கி வழிவிடும் அப்படின்னு சொன்னார்.
இந்தக் கதையை கேட்ட அந்த பிராமணன் அப்படியே மயங்கிவிழுந்து விட்டான்.
இதுதான் பால் பாயசத்தில் அருமை பெருமை பிராமணாள் போஜனப்பிரியர்கள் என்பதும் இந்த.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment