துருவன் வரலாறு
#ஆன்மீகம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது துருவன் வரலாறு.
துருவனின் தந்தை பெயர் உத்தானபாதன் . தாயின் பெயர் சுநீதி சித்தியின் பெயர் சுருசி
இனி நாம் கதைக்கு செல்வோமா
துருவ மகாராஜா!
!!
துருவன் என்னும் 5 வயது பாலகன் ஒரு அரச குமாரன். அவனுக்கு ஒரு நாள் தானும் அவனது சித்தியின் மகனை போல் தன் தந்தை மடியில் அமர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப் படுகிறான், ஆனால் அவனது தந்தை அதை வரவேற்கவில்லை மேலும் அவனது சித்தி அவன் மேல் கோபித்துக்கொண்டு , நீ என் வயிற்றில் பிறக்க வில்லை அதனால் உன் தந்தை மடியில் அமர உனக்கு உரிமை இல்லை. அப்படி நீ உன் தந்தை மடியில் அமர ஆசை இருந்தால் பரம புருஷனின் மேல் கடும் தவம் செய்து அடுத்த பிறவியில் என் கற்பத்தில் வந்து பிறந்தாயானால் நீ அமரலாம் என்று கூறி அவனை அந்த இடத்தை விட்டு விரட்டி விடுகிறாள்.
அந்த சிறு பாலகன் அழுதுகொண்டே அவன் பெற்ற தாயை நோக்கி ஓடினான். அவனை சமாதான படுத்த முயன்றும் அதில் தோல்வி அடைந்த அவன் தாய், அவள் தன் இயலமையை வெளிப்படுத்தினாள். நான் என்ன செய்ய முடியும் துருவா! உன் தந்தை என் வார்த்தையை கேட்க மாட்டார், உன் சித்தி கூறியது நிஜமே, நீ அந்த பரம புருஷனை தியானம் செய்தால் தான் உன் தகப்பனார் மடியில் அமர முடியும் என்று கூறினாள்.
பிறப்பில் ஷத்ரியன் ஆன துருவன் கடவுளை கண்டு விட வேண்டும் என்று உறுதி பூண்டான். கடவுளை எங்கு பார்க்கலாம் ? என்று அந்த பாலகன் வினவினான். பெரிய துறவிகள் எல்லாம், காட்டிலே தான் சென்று தேடுவர்கள் என்று கூறினாள். இந்த 5 வயது பாலகன் காட்டிற்கு பரம் பொருளை காண புறப்பட்டான். அவன் காட்டில் உள்ள எல்லா ஜீவராசிகளிடம் கடவுள் எங்கு உள்ளார் என்று வினவினான். இந்த சிறு பலகனின் உறுதியான நம்பிக்கையும் பக்தியும் கண்ட தேவ ரிஷி நாரத முனிவர் அவன் முன் தோன்றி "குழந்தை! நீ உன் தந்தை உதாசீன படுத்தியத்தை எல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாதே , அந்த ஆதிமூலத்தை காண்பது மிகவும் கடினம். மிக கடினமான யோகமும், தவம் புரிய வேண்டும், நீ இன்னும் சிறு பாலகன், நீ உன் அரண்மனைக்கு சென்று விடு என்று கூறினார், ஆனால் துருவனோ கேட்பதாக இல்லை, பதிலுக்கு, நாரத முனிவரே! , உம் வாக்கை மிகவும் மதிக்கிறேன், ஆனால் அந்த பரம புருஷனை கண்டு , என் ஆசையை நிறைவு செய்து கொள்ளாமல் நான் திரும்ப செல்ல மாட்டேன் என்று திடமாக கூறினான்.
பாலகனின் உறுதியை கண்ட நாரதர் அவனுக்கு பக்தில் எப்படி ஈடுபடுவது, பரம் பொருளை தியானம் செய்ய மூல மந்திரம், ஆகிய ஓம் நமோ பகவதே வாஸுதேவாயா என்ற மூல மந்திரத்தையும் அஷ்டாங்க யோகம் எல்லாம் கற்று கொடுத்தார்.
ஆதிமூலத்தை காண, கடும் தவம் புரிய துவங்கினான். முதல் மாதத்தில் வெறும் பழங்களை தின்று தவம் புரிந்தான். இரண்டாவது மாதத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை உண்டும், வெறும் இல்லை தழைகளை உண்டும் தவம் புரிந்தான். நான்காவது மாதத்தில் பிராண வாயு பயிற்சியில் தேர்ந்தான். 12 நாட்களுக்கு ஒரு முறை மூச்சுக்காற்றை உள் வாங்கினான். பிற நேரங்களில் அந்த விஷ்ணு(கிருஷ்ணர்) தியானத்தில் இருந்தான். பிறகு அவன் சுவாசிப்பதயே நிறுத்தி விட்டான். இதனால் உலகமே நின்று விடுவது போல் ஆகியது. இத்தனை அறிந்த தேவர்களும், பிற தேவதைகளும் அந்த பரம் பொருளான பகவன் விஷ்ணுவிடம் சென்று கூறினார்.
பக்தனின் தவத்தில் இறங்கி, அந்த பகவன் நான்கு கைகளோடு சங்கு சக்ர கதாபாணியாக அவன் முன் தோன்றினான். அந்த பகவானை நேரில் கண்ட சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தை கூட வரவில்லை. பக்தனின் நிலை அறிந்த பகவான் கருணா சிந்துவான அவன் அந்த பாலகன் மேல் கருணை பொழிந்தான்.தனது பாஞ்ச சந்நியம் என்ற சங்கால் அவன் கன்னத்தை வருடினான். பக்தனின் மனத்தையும், லட்சியதையும் அறிந்த பகவன் அவனை என்றும் மிளிரும் துருவ நக்ஷத்திரத்தை பெற வரம் கொடுத்தான். துருவன் மேலும் பிரார்த்தித்தான், "பகவானே உன் காட்சியால் எனது தூங்கிக்கொண்டு இருக்கிற எல்லா புலன்களும் விழித்து கொண்டன . முட்டாள் தனமாக இத்தனை நாளும் பிறப்பு இறப்பில் இருந்து முக்தியை கொடுக்க வல்ல அந்த பகவானிடம் போய் சிறு அல்ப சந்தோஷமான இவ்வுலக பதவி, செல்வத்திற்காக உன்னை தியானம் செய்த என்னை மன்னித்து விடு என்று கண்ணீர் மல்க வேண்டினான். உடைந்த கண்ணாடி துண்டை தேடி வந்த எனக்கு ஒரு பெரும் ஆபரணம் கிடைத்து விட்டது. எனக்கு எதுவும் வேண்டாம் என்றுகூ றி கண்ணீர் சிந்தி பகவானிடம் சரண் அடைந்தான்..
பிறகு துருவன் தனது அரண்மனைக்கு சென்றான். அவனது தகப்பனாரும், சித்தியும் மனம் திருந்தி அவனை வரவேற்றனர். மேலும் அரசன் தனது சிம் மா- ஸனத்தை துருவனுக்கு கொடுத்துவிட்டு பக்தி மார்க த்தை மேற்கொண்டு காட்டி ற் க்கு சென்றா ர். துருவன் மேலும் 36,000 ஆண்டுகள் பக்தி நெறியோடு நல் ஆட்சி செய்தான். அவன் வாழ்நாள் முடிந்த பின் துருவன் முக்தி அடைந்து வானில் என்றும் அழியாத துருவ நட்சத்திரமாக மின்னிக் கொண்டு இருக்கிறான்
இதுவே துருவனின் வரலாறு.
இந்த கதையில் இருந்து இறைவன் உலகியல் இன்பம் மட்டும் இல்லாமல் மாறாத இறைபக்தியும், முக்தியும் அவரை சரண் அடைந்தவர்களுக்கு கொடுக்கிறார் என்பது தெரிகிறது.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment