உடுப்பி மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
உடுப்பி.
. . உடுப்பி பெயர்க் காரணம் தோன்றிய விதம் தோற்று வித்தவர் முதலியவை.
சிலர் பலர் வேண்டுகோளுக்கு இணங்க உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. மங்களூரில் இருந்து ஓரு மணி நேரம் யாத்திரை. இது தகவலுக்கு ஆக மட்டும்.
நான் இங்கு உடுப்பி கோசலையில் ஒரு ஃபோட்டோ எடுத்துள்ளேன் அதில் ஒரு பசுமாட்டின் உடம்பில் இயற்கையாக ஓம் என்ற எழுத்து உள்ளது.இது யாரும் எழுதியது அல்ல. சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது மேலும் இதைப் பார்ப்பது மிகவும் விஷேசம் என்றும் கூறுவதுண்டு.
உடுப்பி.
நான் இன்று பண்டரிபுரம் மஹாத்மியம் தான் எழுதுவதாக இருந்தது அது தோன்றிய விதம் தோன்ற மூல காரணம் முதலியன.ஆனால் உடுப்பி பற்றி எழுத வேண்டியதாயிற்று. ஒரு வேளை க்ருஷ்ணன் முதலில் துவாரகை விஷயங்களை முடித்து விட்டு மேலே தொடர் என்று சொன்னாரோ என்னவோ யான் அறியேன்.சர்வம் க்ருஷ்ணார்ப்பணம். இனி கதைக்கு வருவோம்.
துவாரகையில் ருக்மணி தேவி க்ருஷ்ணனுடன் இருந்து வரும் போது ஒரு நாள் அவளுக்கு க்ருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது.உடனே விஸ்வகர்மா வை அழைத்து எனக்கு பால -- க்ருஷ்ணன் எப்படி இருந்தான் என்று அறிய ஆவல் உள்ளது என்று கூறினார். உடனே விஸ்வகர்மா சின்னக் கண்ணன் குட்டி க்ருஷ்ண விக்ரகம் செய்து அதில் ஒரு கையில் மத்தும் (தயிர் கடையும் மத்து) மற்றொரு கையில் வெண்ணெய் யும் (வலது கையில் மத்தும் இடது கையில் வெண்ணெய் யும்) வைத்திருப்பது போல அழகிய பால க்ருஷ்ண விக்ரகம் செய்து குடுத்தார். ருக்மணி மிகவும் மகிழ்ந்து தினமும் அதை பூஜித்து வந்தாள்.
அதற்கு பிறகு அந்த விக்ரகத்தை அர்ஜுனன் பூஜித்து வந்தான். அவனுக்கு பிறகு யாரும் பூஜிக்க வில்லை என்பதால் அந்த விக்ரகத்தை ஒரு கோபி சந்தனத்தில் வைத்து பத்திரப் படுத்தி வைத்தனர். ஆனால் துவாரகை கடலில் மூழ்கியதால் இந்த விக்ரகமும் மூழ்கியது.
இது இவ்வாறு இருக்க காற்றும் மழையும் கடல் அரிப்பும் கொந்தளிப்பும் அடிக்கடி உண்டானதால் அந்த விக்ரகம் கோபி சந்தனத்தில் செய்யப்பட்டு இருப்பதாலும் அது கடலுக்கு மேலேயே மிதந்தது. ஒரு நாள் வணிகர்கள் கப்பல் ஒன்று வரும் போது ஒருவர் அந்த கோபி சந்தனத்தை எடுத்து கப்பலில் உள்ள தங்கம்/வைரம்/வைடூரியம் முதலியவைகளுடன் சேர்த்து வைத்தார்.
அந்த கப்பல் புறப்பட்டு தெற்கு நோக்கி வரும் போது பயங்கர காற்று மழை புயல் சூறாவளி வீசிக்கொண்டு இருந்தது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கும் போது தூரத்தில் ஒரு சந்நியாசி அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவரை இங்கு இருந்தே நமஸ்கரித்தனர். உடனே அவர் கையை அசைத்து சில மந்திரங்களை ஓதி காற்றையும் மழையையும் புயலையும் சூறாவளி யை யும் நிறுத்தினார். அவர் வேறு யாரும் அல்ல அவர் தான் மத்வ மதத்தை ஸ்தாபித்த மத்வாச்சாரியார் ஆவார். அவரின் இயற்பெயர் வாசுதேவன் (அடியேனின் பெயர்).
கப்பலில் உள்ளவர்கள் குருவின் சைகையால் மழை நின்றதைப் பார்த்து மகிழ்ந்து கரை அருகில் வந்து நமஸ்கரித்து அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொன் குவியலைக் காட்டி தங்களுக்கு எவ்வளவு பொன் வைரம் வைடூரியம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த கோபி சந்தனம் மட்டும் போதும் என்று கூறி அதை மட்டும் எடுத்துக் கொண்டார்.
பின் அதை நன்கு சுத்தம் செய்து அதனுள் இருந்த க்ருஷ்ண விக்ரகத்தை மட்டும் எடுத்து ஸ்தாபித்தார்
எங்கு:-
பெயர்க் காரணம்.
உடு என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவர் உடுபா என்றால் நட்சத்திரங்களின் தலைவன் அதுவே நாளடைவில் மருவி உடுப்பி ஆயிற்று.
அதாவது சந்திரனுக்கு 27 மனைவியர் அதில் முதல் மனைவி பெயர் ரோஹிணி அவள் மேல் மட்டும் சந்திரனுக்கு அலாதி பிரியம். அது மற்றவர்களுக்கு பொறாமையாக இருந்தது. உடனே அது பற்றி தன் தந்தையான தஷ்சப் பிரஜாபதி யிடம் புகார் செய்தனர். அதைக் கேட்ட தஷ்சப் பிரஜாபதி அவனுக்கு இன்று முதல் நீ தேய்ந்து போவாய் என்று சாபம் கெடுத்தார் . அந்த சாபத்தை நீக்குவதற்காக அவன் உடுப்பி வந்து க்ருஷ்ணரை வழிபட விமோசனம் கிடைத்தது.நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன் வழிபட்டதாலும் அவருக்கு உடு பா (நட்சத்திரங்களின் தலைவன்) என்று பெயர் வந்தது
உடுபா நாளடைவில் மருவி உடுப்பி ஆயிற்று.
இதுவே உடுப்பி க்ருஷ்ணன் தோன்றிய வரலாறு.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment