கணவன்மார்கள் இயலாமை
சில கணவர்கள் எப்பொழுது பார்த்தாலும் மனைவியை திட்டிக் கொண்டே இருப்பார்கள் அது அவர்களுக்கு பழக்கமாகி விட்டது போல் தோன்றுகிறது .அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை.
இங்கு அதுபோல் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் சற்று பார்ப்போமா.
பாலக்காட்டிற்கு அருகில் நூறணி என்றொரு கிராமம். அந்த கிராமத்தில் நல்ல வயதான 87 வயதான ஒரு பிராமணனும் 82 வயதான அவருடைய பாரியாளும் வசித்து வந்தார்கள். ஒருநாள் அந்த கிராமத்திற்கு கதாகாலட்சேப வித்தகர் திரு ஜெயராம் சர்மா அவர்கள் சொற்பொழிவு ஆற்றுவதற்கு வந்திருந்தார்கள்
அவ்வாறு இருந்த பொழுது இந்த வயது முதிர்ந்த பிராமணர் ஜெயராம் சர்மா அவர்களிடம் நீங்கள் எங்காத்து க்கு வந்து தங்கிவிட்டு சாப்டுட்டு போங்கோ என்று வேண்டுகோள் விடுத்தார். அவருடைய ஆச்சாரம் மடிகளைக் கண்டு ஜெயராம் சர்மா விற்கு மிகவும் திருப்தியாக இருந்தது சரி என்று உடனே ஒத்துக் கொண்டார்.
அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. மாமி குளித்துமுடித்து சமையல் சமைக்க ஆரம்பித்தார்.பிராமணரும் குளித்து பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு காபி எல்லாம் குடித்த பிறகு கிட்டத்தட்ட மணி10 ஆகிவிட்டது.(பிராமண அக்ரஹாரங்களில் காலை டிபன் கிடையாது பதினோரு மணிக்கு சாப்பாடு தான்) டி சமையல் சமையல் ஆச்சா ஆச்சா என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை என்ன சமையல் ஆகலையா ஏன் லேட் ஏன் லேட் என்று கத்திக் கொண்டே இருந்தார்.
மாமி வாயை திறந்து ஒன்றும் பதில் சொல்லவில்லை .ஒருவழியாக சமையல் முடிந்து அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். அப்பொழுது மாமி திரு ஜெயராம் சர்மா அவர்களிடம் மாமா பாருங்கோ இந்த பிராமணர் எப்ப பார்த்தாலும் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று புகார் செய்தார். அதற்கு ஜெயராம் சர்மா அவர்கள் ஏன் சுவாமி அவர்கள் பாவம் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு எல்லா பணிவிடையும் செஞ்சிட்டு இருக்கார் அவாளை திட்டலாமோ என்று கூறினார்.
உடனே பிராமணர் நான் என்ன செய்ய என்னால முடியல தள்ளல வயதாயிடுத்து உடம்புல தெம்பு இல்லை என்று கூறினார். அதை கேட்டவுடன் மாமிக்கு வந்ததே கோபம் அப்படின்னா சின்ன வயசுல ஏன் திட்டினாரென்று கேளுங்கள் என்று வெடுக்கென்று கூறினார். அதுகேட்ட பிராமணர் உடனே அப்போது தெம்பு இருந்தது திட்டினேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட ஜெயராமசர்மா மிகவும் சிரித்து நல்ல ஆதர்சன தம்பதிகள் என்று வாழ்த்தினார். அதாவது சில கணவன்மார்கள் திட்டுவது என்பது ரத்தத்தோடு கலந்து விட்டது ஊறிப் போய் விட்டது அதை அவர்கள் என்ன முயற்சி செய்தாலும் மாற்ற முடியாது.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Enjoyed the story...Hah..hah
ReplyDelete