அஜமஹராஜா வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு .
இன்று நாம் காண இருப்பது அஜ மகாராஜா சரித்திரம். அஜமஹராஜா யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஸ்ரீராமனுடைய தாத்தாவும் தசரதருடைய அப்பாவும் ஆவார்.
இனி அவருடைய கதையைப் பார்ப்போமா.
ஒருநாள் அஜ மகாராஜா அரண்மனை முற்றத்தில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார் .அப்போது ஒரு கந்தர்வப் பெண் வானத்தில் போய்க்கொண்டு இருந்தாள். உடனே அந்த கந்தர்வப் பெண்ணின் அழகில் மயங்கி அவளை உடனே அழைத்து தான் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.
அவள் பெயர் இந்திராணி .அவளுக்கும் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தான். ஆனால் ஆனால் என்று இரண்டு முறை கூறினாள். என்ன என்று கேட்டதற்கு அவள் காரணத்தை கூற மறுத்துவிட்டாள் .மறுபடியும் ஆனால் ஆனால் என்றாள். என்ன என்று கேட்டதற்கு ஒன்றும் கூறவில்லை அவர்களுக்கு திருமணம் நடந்தது.
ஒரு குழந்தையும் பிறந்தது அதுதான் தசரத மகாராஜா.
ஒருநாள் அந்திப்பொழுதில் இருவரும் முற்றத்தில் இருந்து கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவரிஷி நாரதர் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் .அவர் கழுத்தில் எப்போதும் மாலை அணிந்து கொண்டு இருப்பார் .அந்த மாலை கழண்டு சரியாக இந்திராணியின் கழுத்தில் விழுந்தது. உடனே அவள் மாண்டுவிட்டாள்.
திருமணத்திற்கு முன்பு ஆனால் ஆனால் என்று கூறினாளேஅவள்.அதற்கு இதுதான் அர்த்தம். அஜ மகாராஜா விடம் கூற வேண்டாம் என்று மறைத்தாளேஅது வேறு ஒன்றும் இல்லை. அவளுக்கு இயற்கையிலேயே ஒரு சாபம் உள்ளது . அதாவது அவளுடைய மரணம் என்று தேவரிஷி நாரதர் கழுத்திலிருந்து மாலை கழண்டு அவள் கழுத்தில் விழுகிறதோ அன்று அவளுக்கு மரணம் என்ற ஒரு சாபம் இயற்கையிலேயே உள்ளது.
இன்று அது போல் நடந்து விட்டது .உடனே அஜ மகாராஜா அவள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்று அந்த மாலையை எடுத்து தான் போட்டுக் கொண்டார். அவருக்கு மரணம் நிகழ வில்லை. என்னெல்லாமோ செய்து பார்த்தார். என்னால் இந்திராணியை பிரிந்து இருக்க முடியாது என்று பல வழிகளிலும் முயன்று மரணம் சம்பவிக்காது என்ற காரணத்தினால் இறுதியாக தற்கொலை செய்து கொண்டார் .ஆம் அஜ மகாராஜாவின் இறப்பு அனைவருக்கும் வருவது போல் சாதாரணமான மரணம் அல்ல. அசாதாரணமான இழப்பு . தன் முடிவைத் தானே தேடிக் கொண்டார்.
இதற்குப் பிறகு தசரத மகாராஜாவை வசிஷ்டர் வளர்த்து வந்தார். பிறகு அவருக்கு திருமணம் நடந்தது எல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து ஸ்ரீ இராமர் பிறந்ததை அனைவரும் அறிவர்.
(இங்கு எனது மனதிற்கு தோன்றிய ஒரு சந்தேகத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அதாவது கந்தர்வப் பெணணைக் கண்டு மோகித்து அவளுடனேயே வாழ்ந்து இறுதிவரை அவளுடன் இருந்து ஒரு குழந்தையைப் பெற்றார் அஜமஹா ராஜா .
ஆனால்
வஸிஷ்டர் இடத்தில் ரிஷி இடத்தில் ரிஷியால் வளர்க்கப்பட்ட தசரத மகாராஜா 60 ஆயிரம் பெண்களை திருமணம் செய்து கொண்டார்.அப்படி 60 ஆயிரம் பெண்களை திருமணம் செய்து கொண்டவரால் வளர்க்கப்பட்ட ஸ்ரீ ராமன் ஏக பத்தினி விரதனாக இருந்தார். இதிலிருந்து அறிவது என்னவென்றால் ஒரு சிலர் சொல்வார்கள் நான் வளர்ந்த விதம் வளர்த்த விதம் என்று . இது ரெண்டும்தசரத மகாராஜாவுக்கும் பொருந்தவில்லை .ஸ்ரீராமனுக்கும் பொருந்தவில்லை. ஆதலால் அந்த பழமொழி தவறு என்று என்னைப் பொறுத்தவரை நினைக்கிறேன். வேறொன்றுமில்லை.)
இதுவே அஜ மகா ராஜாவின் சரித்திரம்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment