பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதியார் பாடல்கள்
தெரிந்து கதை. தெரியாத வரலாறு.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தோன்றிய வரலாறு.
ஒரு முறை பாரதியார் நகர் வலம் கிராம வலம் வரும் பொழுது ஒரு கிராமத்தான் பாடிய பாடலைக் கேட்டு மெய் மறந்து நின்று விட்டார்.(சில இடங்களில் கம்பர் என்றும் சில இடங்களில் ஒட்டக் கூத்தர் என்றும் கூறுவதுண்டு. நான் பாரதியார் தான் உண்மை என்று எடுத்துக் கொள்கிறேன்).
அந்தப் பாடல் பின்வருமாறு.
அத்தினத்திற்கும் ஓட்ட கைக்கும் ஆயிரம் மைல் தூரம் ஆனாலும் நடக்குது புடவை வியாபாரம்..
இந்த பாட்டைக் கேட்டு மெய் மறந்த பாரதியார் அதன் அர்த்தம் தெரியாமல் மறுநாள் அவன் வரவுக்காக காத்திருந்து அவனிடம் தெளிவு பெற வேண்டும் என்று நினைத்தார்.
மறுநாளும் அவன் வந்தான் அப்பாடலை பாடிக் கொண்டே
பாரதியார் அவனை இடைமறித்து அப்பா நீ பாடிய பாடலின் அர்த்தம் என்ன என்று கேட்க அதற்கு அவன். ஐயா
அத்தினம். என்றால். ஹஸ்தினாபுரம்.
ஓட்டை. என்றால். துவாரம்.
ஓட்டகை என்றால் துவாரகை
ஹஸ்தினாபுரத்திற்கும் துவாரகை க்கும் இடையில் இருப்பதோ ஆயிரம் மைல் தூரம் ஆனாலும் பாஞ்சாலிக்கு கிருஷ்ணன் புடவை தந்தான் அல்லவா அதைத் தான் ஆனாலும் நடக்குது புடவை வியாபாரம் என்று கூறினேன் என்றான்
இதைக் கேட்ட உடன் தான் பாரதியாருக்கு பாஞ்சாலி சபதம் இயற்ற வேண்டும் என்று தோன்றியது.அது மாத்திரம் அல்ல அந்தக் கிராமத்தானை மனதில் வைத்து தான் ஒரு தேர்ப்பாகன் கதாபாத்திரம் உருவாக்கி அதில் அவன் அரச சபையில் துரியோதனனிடம் பாஞ்சாலி கேட்பது போல
""தனைத் தோற்று எனைத் தோற்றாரா
எனைத் தோற்று தனைத் தோற்றாரா என்று கேட்பது போல் பாஞ்சாலி சபதத்தில் இயற்றி இருப்பார்.
அதாவது தருமர் அவரை முதலில் தோற்று பின் என்னை வைத்து சூதாடினாரா அல்லது முதலில் அவருக்கு முன் என்னை வைத்து ஆடினாரா என்று கேட்பதாக இயற்றி இருப்பார்.
அதன் அர்த்தம் என்ன வென்றால். முதலில் அவரை வைத்து ஆடி அவர் தோற்று விட்டார் என்றால் தோற்றவர்க்கு மற்றவரை வைத்து ஆட அதிகாரம் இல்லை.அதே சமயம் முதலில் என்னை வைத்து ஆடினார் என்றால் அவ்வளவு மோசமான தரம் தாழ்ந்தவர் அல்ல தர்மர் என்பது போல கேட்டிருப்பார்.
இது தான் பாஞ்சாலி சபதத்தின் மையக் கருத்து.
அதற்கு காரணம் ஒரு கிராமத்து வழிப் போக்கன் பாடிய பாடல் என்று கூறி நிறைவு செய்கிறேன்
இதுவரை படித்தமைக்கு நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
(நான் திருப்பதி தொடங்கி பண்டரிபுரம் பாண்டுரங்கன் சனி சிங்கனாப்பூர் சோம்நாத் காசி விசுவநாதர் காசிஸோலி மாதா ஆலயம் துவாரகை மாத்ரு கயா ருக்மணி தேவி ஆலயம் முதலிய தோன்றிய வரலாறுகளயும் சனி சிங்கனாப்பூர் வீடுகளில் ஏன் கதவே கிடையாது என்பதையும் தினமும் ஒவ்வொன்றாக எழுதலாம் என்று நினைக்கிறேன் PROVIDED மத்யமர் ஆதரவு இருந்தால் நன்றி)
Comments
Post a Comment