போட்டிக் கதை ரியல் எஸ்டேட்
Real estate. ரியல் எஸ்டேட்.
#ரியல்_எஸ்டேட்
நான்் விமானப்படையில் இருந்து terms of agreement முடிந்து வெளியே வந்து 87; 88 ல் கோவை சூலூரில் இருந்தேன். 88 கடைசியில் பொள்ளாச்சியில் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தேன்.
89ல் பொள்ளாச்சியில் ஜோதிநகரில் ஒரு இடம் வாங்கினேன். அதன் ஓனர் ஒரு சென்னியப்ப நாய்க்கர். ஆனால் அதில் ஏஜண்டாக இருப்பவர்கள் காதர் முகைதீன் பாய்ஸ் குரூப்.
அதாவது ஒரு செண்ட் 8000 என்றால் 5000 ஓனருக்கு மீதி 3000 இவர்களுக்கு என்று அக்ரிமெண்ட். இது ஏதும் எனக்கு தெரியாது. மேலும் ஏர்போர்ஸ் ல் இருந்து ப்ரஷ் ஆக வந்ததால் இந்த சூழ்ச்சி ஏதும் அறியாதவன். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இருந்தது. எங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரெண்டு வருஷம் அனுபவம் ஆனால் கவுஸிங்க் லோன் கிடைக்கும். ஆதலால் அதற்கு முன்பே இடம் வாங்கி வைப்போம் லோன் வந்த உடன் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
அந்த குரூப் என்னிடம் பேசும்போது இது முனிசிபல் கார்ப்பரேஷன் அப்ரூவ்டு DTP யும் அப்ரூவுடு என்று கூறினார்கள். மேலும் நான் வாங்கி விட்டேன் என்றவுடன் என் பெயரை உபயோகப் படுத்தி இன்சூரன்ஸ் ஆபீஸர் வாங்கி விட்டார் பின்னர் என்ன சந்தேகம் அனைவரும் வாங்குங்கள் என்று விளம்பரம் வேறு செய்தார்.
நானும் மனைவியும் வாரம் ஒரு முறை இருக்கும் இடத்தில் இருந்து 2கி.மி தூரத்தில் உள்ள அந்த இடத்தை அடிக்கடி சென்று பார்த்து வீட்டை அப்படி கட்டுவோம் இப்படி கட்டுவோம் என்று மனதில் நினைத்து திட்டம் தீட்டிக் கொண்டு இருப்போம்.லோன் கிடைத்த உடன் செயலாக்குவோம் என்று முடிவு செய்வோம்.
ஒரு நாள் நாய்க்கரிடம் பணம் செட்டில்மென்ட் செய்யும்போது என் இடத்திற்கு அந்த குரூப் மிகவும் குறைவாக குடுத்தனர் (டோட்டல் 9 3/4 செண்ட் ஆனால் தவறாக பத்திரம் 7 3/4 செண்ட் என்று பதிவாகியுள்ளது) அதை நாய்க்கர் கண்டு பிடித்து அவர்களிடம் சொல்ல அவர்கள் வந்து தவறு நடந்து விட்டது மீதி பணம் தாருங்கள் என்று கேட்க நான் பத்திரத்தை என்ன செய்வது என்று கேட்க பிழை திருத்தப் பத்திரம் என்று கூறி மீண்டும் பதிவு செய்தோம். அதற்கு சார்ஜ் வேறு தனியாகக் குடுத்தேன்.
என் நண்பன் ஒருவன் முனிசிபாலிடியில் இருக்கிறான். அவனிடம் இந்த இடம் பற்றி கூற அவன் அந்த இடம் முனிசிபல் கார்ப்பரேஷன் அப்ரூவ்டு அல்ல என்றும் மேலும் டிடீபி அப்ருவலும் இல்லை என்று கூற எங்கள் மனக்கோட்டை (சொந்த வீடு என்கிற மனக்கோட்டை) மண் கோட்டை ஆகியது. பின் அவனைப் பிடித்து அது பற்றிக் கேட்க இன்று நாளை ஒரு வாரம் பத்து நாட்கள் என்று கூறி நாட்களை இழுத்துக் கொண்டே போய் முடிவில் அவர்கள் தினமும் அடுத்தவன் காசில் குடித்து குடித்து முடிவில் இறந்தே போனான்.
பின் ஓனரிடம் சென்று அப்ரூவல் பற்றி கேட்க அவனிடம் தான வாங்கினீர்கள் அவனிடமே கேளுங்கள் என்று கூற அவன் தான் இல்லையே என்று நான் கூற அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார்.
என்ன செய்வது என்று புரியாத நிலையில் ஆபீஸில் லோன் எலிஜிபிலிட்டி வந்த உடன் வேறு இடத்தில் புதியதாக கட்டிய ஒரு வீட்டை வாங்கி குடியேறினேன். மேலும் ஒரு வருடத்தில் அந்த இடத்தையும் விற்று விட்டேன்.
இதுவே எனது ரியல் எஸ்டேட் அனுபவம்
Comments
Post a Comment