போட்டிக் கதை ஏர்ஃபோர்ஸ் சேர்ந்த வரலாறு
நான் சிறுவயதில் 8 அல்லது 9 வயதில் எங்கள் ஊர்க்காரர் ஒருவர் விமானப் படை யில் சேர்ந்து விடுமுறை யில் வரும் போது டிப் டாப் ஆக வருவார் அதைப் பார்த்து எனக்கும் ஏர்போர்ஸ்ல் சேர வேண்டும் என்று ஆசை முன்னுரை முடிந்தது நான் S S L C முடித்து. P U C முடித்து time being ஒரு கம்பெனி யில் all in all அழகு ராஜாவாக இருந்தேன் சம்பளம் என்னவோ 90 ரூபாய் தான் (வருடம் 1972) ஒரு நாள் என் அண்ணன் (அவர்கள் எல்லோரும் முயற்சி செய்து தேர்வாகவில்லை) வாசு பேப்பரில் நாளைக்கு ஏர்போர்ஸ்க்கு ஆள் எடுக்கறாங்களாம் நீ போடா என்று சொல்ல மறு நாள் கம்பெனிக்கு சொல்லாமல் நான் சென்று விட்டேன் . கோவை டூரிஸ்ட் பங்களா ஜே ஜே என்று கூட்டம் குறைந்தது ஒரு பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் நான் வளர்ந்த குடும்ப சூழ்நிலை யில் அவ்வளவாக வெளி உலகமோ சூது வாதோ தெரியாது நான் இப்படி கூற காரணம் அங்கு உள்ள சிலர் சொல்கிறார்கள் டேய் வெய்ட் டெஸ்ட் எடுக்கும் போது ஒரு டஜன் பூம்பழத்தை தின்று நாலு டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்ல வெய்ட் தூக்கி குடுக்கும் என்று. இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் கூட்டத்தில் நானும் நின்றேன் மொத்தம் பதினாறு டெஸ்ட் முதலில் அனைவருடைய சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொண்டார்கள் பிறகு டெஸ்ட் ஆரம்பம் முதலில் தமிழ் நாட்டைச் சேராதவர்கள் எல்லாம் தனியே வாருங்கள் என்று கூற ஒரு ஐநூறு பேர் அவுட் (அவர்கள் வடிகட்டும் முறை பார்க்க வேண்டுமே பிரமாதம்) பிறகு கைட் ஒரு ஆயிரம் அவுட் பிறகு வெய்ட் ஆயிரம் அவுட் பிறகு செஸ்ட் டெஸ்ட் இதில் ஆயிரம் அவுட் மீதி ஆறு அல்லது ஏழாயிரம் பேர் இருப்பார்கள் அதில் நானும் ஒருவன் முதல் நாள் முடிந்தது மறு நாளும் டான் என்று 7.30 மணிக்கு ஆஜர் இடையில் கம்பெனியில் ப்ராப்ளம் காரணம் நான் தானே ஆல் இன் ஆல் அழகு ராஜா செக்புக் பணம் வரவு செலவு அனைத்தும் என்னிடம் ஓகே ஓகே பின்னர் முதல் டெஸ்ட் ஆங்கிலம் அப்ப் அப்பா ஒரு 2000 out பின் scienc again 2000 out (Total 16 test including height weight written oral practical. Practical alone 8 test and final medical) இவ்வாறாக ஒரோரு முறையும் சர்டிபிகேட் கொண்டு வரும் போது நமது இல்லை என்று மனம் குதூகலிக்கும் 2ND day all written test over பின் மூன்றாம் நாள் வரச் சொல்லி ஆர்டர் ஏகதேசம் மீதி நாங்கள் ஒரு 1500 பேர் தான் இருப்போம். ஒகே மூன்றாம் நாள் (இடையில் கம்பெனியில் ப்ராப்ளம் வந்ததால் நான் நடப்பது நடக்கட்டும் என்று சாவியை வந்து கேட்டால் குடுத்து விடுங்கள் என்னமோ நடக்கட்டும் என்று என் அம்மாவிடம் கூறி விட்டேன் அவர்களும் வந்து சாவியை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள் ) மூன்றாம் நாள் ப்ராக்டிக்கல் மொத்தம் எட்டு டெஸ்ட் இதில் முடிவில் 1479 பேர் அவுட் மீதி ஓரு 21 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள் அதில் நானும் ஒருவன் மீண்டும் அடுத்த நாள் வரச் சொல்லி ஆர்டர் fourth and final day ஆஜர் சரியாக 7.30 மணிக்கு தொடங்கியது இன்று மெடிக்கல் இதில் ஐந்து பேர் அவுட் ஆக 10000 பேரில் கடைசியாக 1972 ல் மார்ச் மாதத்தில் கோவையில் இருந்து நாங்கள் ஒரு 16 பேர் செலக்ட் ஆகி டிரெய்னிங் க்காக பெல்காமில் உள்ள டிரெய்னிங் சென்டர் சென்றோம் என்று கூறி எனது ஏர்போர்ஸ் செலக்சன் ஆன விதத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்
Comments
Post a Comment