ஆனந்த ராமாயணம்

ஆன்மீகம்:-  ராமாயணம்.

அனைவருக்கும் ஏகதேசம் அநேக ராமாயணங்களைப் படித்திருப்பீர்கள்.அதாவது வால்மீகி ராமாயணம் கம்பராமாயணம் துளசி ராமாயணம் ப்ருங்கி ராமாயணம் அத்யந்திய ராமாயணம் வியாச ராமாயணம் காளிதாசனின் ரகுவம்ச ராமாயணம் எழுத்தச்சனின் ராமாயணம் முதலியன.

ஆனந்த ராமாயணம் என்று ஒன்று உண்டு.எத்தனை பேர் படித்து இருப்பீர்கள் என்று தெரியாது. இன்று அதிலிருந்து ஒரு சில பார்ப்போமா. ஆனந்த ராமாயணம் என்பது அனைத்தையும் ஆனந்த மயமாகவே பார்க்கும்.குற்றம் குறையே அதில் இல்லை.அது இவ்வாறு தொடங்குகிறது.

அதாவது சிறுவயதில் கிராமத்தில் சொப்பு வைத்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவார்கள் குழந்தைகள்.பெண் குழந்தை அம்மாவாகவும் ஆண் குழந்தை அப்பாவாகவும் விளையாடும்.இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் அதேபோல விளையாடலாம் வா என்று கூப்பிடுகிறான் ஆண் குழந்தை.

இதை கைலாயத்தில் இருந்து சிவனும் பார்வதியும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

அன்று பெண் குழந்தைக்கு மகா கோபம் என்னடா தினமும் நீயே அப்பா நான் அம்மா இன்று நான் அப்பா நீ அம்மா என்று கூறுகிறாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி தேவி உடனே நாதா எனக்கும் பூலோகத்தில் ஆணாகப் பிறக்க வேண்டும் நீங்கள் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்று கூறினார்.அதைக்கேட்ட சிவனும் உடனே ததாஸ்து என்று கூறினார். அதன் படி சிவன் சீதையாகவும் பார்வதி ராமனாகவும்  அவதரித்தனர் என்று கூறுகிறது.

இந்தக் கூற்று ஓரளவு உண்மை என்பதை வால்மீகி இராமாயணத்தில் நாம் காணலாம். அதாவது ராமனைக் காட்டிற்கு போகும் படி கைகேயி கூறியவுடன் ராமன் வந்து சீதையிடம் நான் காட்டிற்குச் செல்கிறேன் நீ வேண்டாம் என்று கூறுவார். அதற்கு சீதை ஏன் உங்கள் பிறவிப் பெண் குணத்தை காட்டுகிறீர்களா என்று கேட்பாள்.(அதாவது ராமன் உண்மையில் பார்வதி என்பது). இந்தக் கருத்தை உற்று நோக்கும் போது ஆனந்த ராமாயணத்தின்படி உண்மை என்றே தோன்றுகிறது.

இனி தொடருவோம். மூன்று லோகங்களிலும் எது நடந்தாலும் அறிந்தவர் ஒருவரே அவரே தேவரிஷி நாரதர்.  ஒரு நாள் நாரதர் லங்கைக்கு வருகிறார்.

ராவணன் சிவ பூஜை செய்து கொண்டு இருக்கிறான்.நாரதரைப் பார்த்ததும் முறைப்படி வரவேற்று வேண்டியதைச் செய்கிறான்.அப்போது நாரதர் ராவணா என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.அதற்கு ராவணன் தேவரிஷி பார்த்தால் தெரியவில்லையா சிவ பூஜை செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறினான்.

அதற்கு நாரதர் ராவணா வெண்ணெய் மைக் கையில் வைத்துக் கொண்டு யாராவது நெய்க்கு அலைவார்களா என்று கேட்டார்.அதற்கு ராவணன் ஸ்வாமி ஒன்றும் புரியவில்லை என்றான்.

உடனே நாரதர் சிவபெருமான் சீதையாகப் பிறப்பெடுத்து தற்போது பஞ்சவடியில் உள்ளார்.சீதை தான் சிவன் சிவன் தான் சீதை .நீ சீதையையே (சிவனையே) இங்கு கொண்டு வந்து பூஜை செய்யலாமே என்று கூறினார்.

அதன் பின்னர் தான் ராவணன் சிவபூஜை செய்வதற்காக சீதையை (சிவனை) கொண்டு வந்து லங்கையில் அசோக வனத்தில் அதாவது சிம்சுமா மரத்தின் அடியில் வைத்து பூஜை செய்தான்.அவன் சீதையை (சிவனைப்) பூஜிப்பதற்காக மட்டுமே கொண்டு வந்தான் என்று கூறுகிறது.வேறு தவறான எண்ணம் இல்லை என்று கூறுகிறது.

இது வரைக்கும் பொறுமையாக படித்ததிற்கு நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்