. என்னதான் எண்ணெயைத் தடவிட்டு மண்ணுல உருண்டாலும் ஓட்டுவது தான் ஒட்டும்னு. அதனால் இருப்பதைக் கொண்டு திருப்திப் படுங்கள்.
இதற்கான கதையைப் பார்ப்போமா.
ஒருமுறை பார்வதிதேவி சிவபெருமானிடம் நாதா என் சகோதரர் திருமாலும் மன்னி லட்சுமி தேவியும் வசிக்கும் இல்லத்தை பார்த்தீர்களா. நல்ல அரண்மனை போல் வசதியாக இருக்கிறது. நாமும் இந்த மரத்தடியில் வசிக்கிறோம் .நமக்கும் அதேபோல பெரிய இல்லமாக அமைக்கலாம் என்று கேட்டாள்.
சிவபெருமான் உடனே பார்வதியிடம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் .அங்கே இருக்கிறார்கள். நமக்கு அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லை. அதனால் அப்படி வீடு அமையவில்லை .வீடு மனைவி மக்கள் உற்றார் சுற்றம் அனைத்தும் அவருடைய விதிப்படியே அமையும். என்னுடைய தகுதிக்கு இந்த மரத்தடியே அதிகம் இங்கும் குளிர்ச்சியாக நன்றாகத்தான் இருக்கிறது இது போதும் என்றார்.
பார்வதிக்கு மிகுந்த வருத்தம் .அதெல்லாம் முடியாது. எனக்கும் அரண்மனை போல் பெரிய வீடு வேண்டும் என்று அடம் பிடித்தாள் .சிவனும் மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு பெரிய அரண்மனையை உருவாக்கினார் .உடனே அதற்கு கிரகப்பிரவேசம் நடக்க வேண்டி ஒரு சிறந்த குருவை தேடினார்.
குரு கிடைக்காததால் காரணம் இவரே ஞானகுரு உலகுக்கு உலகில் உள்ள அனைத்திற்கும் இவரே குரு .குரு கிடைக்காததால் பார்வதியிடம் தேவி எனது பக்தர்களில் சிறந்த ஒரு பக்தரை கொண்டு நான் கிரகப்பிரவேசம் செய்விக்கலாம் என்று இருக்கின்றேன் .அவ்வாறு பக்தி செய்பவர்களில் உயர்ந்தவன் எனக்கு மிகவும் பிரியமான இலங்கை மன்னன் ராவணன் அவனை அழைப்போம் என்று கூறினார்.
பார்வதியும் உடனே சம்மதித்து ராவணனை அழைத்து சடங்குகளை சிறப்பித்தனர். விழா முடிந்ததும் தட்சணை கொடுக்க வேண்டிய நேரம் வந்தது.
உடனே சிவபெருமான் ராவணன் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு கொடுக்க வேண்டிய தட்சனை என்ன வினவு வாயாக( கேட்பாயாக) என்று கூறினார் .ஒரு யாகம் ஒரு ஹோமம் எது நடந்தாலும் அந்த வந்திருக்கும் அந்தணர் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது .அதன்படி ராவணனிடம் வினவ அவன் எனக்கு இந்த அரண்மனை வேண்டும் என்று கேட்டான்.
சிவ பார்வதி தம்பதியருக்கு வேறுவழியில்லை. அந்தணன் கேட்டதை கொடுக்க வேண்டும். உடனே சிவபெருமான் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு மீண்டும் பழைய மரத்தடிக்கே வந்து வாசம் செய்யலானார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ஆண்டவனே ஆனாலும் விதிவசத்தால் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் தங்கும் நிலைக்கும் .என்னதான் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் .ஆதலால் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழுங்கள்.
கடவுளுக்கே இதுதான் கொடுப்பினை என்றால் மனிதர்களுக்கான மானிட ஜென்மங்களுக்கு நமக்கு என்ன விதி எழுதியிருக்கிறதோ அது தான் நடக்கும். நம் தலையெழுத்தை மாற்ற முடியுமா .அது அது அவரவர் விதிப்படி அமையும். அவரவர்களுக்கு என்ன தகுதியும் திறமையும் உள்ளதோ அதன்படி அவருக்கு அமைந்தது என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளுதிப்போம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசா...
தெரிந்த கதை தெரியாத வரலாறு இன்று நாம் காணவிருப்பது முருகப்பெருமானின் அவதாரங்கள் என்னது முருகப்பெருமானின் அவதாரங்கள் என்று கேட்கிறீர்களா முருகப்பெருமானும் ப...
Comments
Post a Comment