திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது திருத்துறைப்பூண்டி மஹாத்மியம்.
திருத்துறைப்பூண்டி தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் ஆலயம்.
இதைப்பற்றி இது தோன்றிய விதம் எவ்வாறு தோன்றியது இதன் பயன்கள் என்ன சற்று விரிவாக பார்ப்போமா.
திலீபன் சக்கரவர்த்தி.
மகாகவி காளிதாஸ் ரகுவம்சத்தில் சொல்லும்பொழுது திலீபன் தொடங்கி தயரதன் வழியாக ஸ்ரீராமன் சரிதையை சொன்னேன் என்று திலீபன் சக்கரவர்த்தியிலிருந்து ரகுவம்சம் தொடங்குவதாக மகாகவி காளிதாஸ் கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன் வம்சாவளியில் வந்த முன்னோர்களில் ஒருவர் தான் தீலீபன் சக்கரவர்த்தி.
ஒரு நாள் அவர் காட்டிற்கு வேட்டையாட வரும்பொழுது ஒரு பெண் மானுடன் சுற்றிக் கொண்டிருந்த ஆண் மானைக் கண்டு அம்பை எய்து அந்த ஆண் மானைக் கொன்றுவிட்டார். அது இறக்கும் தருவாயில் ஒரு முனிவராக மாறி கடும் அவஸ்தைப்பட்டு இறந்தது.இதைக் கண்ட பெண் மான் உடனே ரிஷிபத்தினி வடிவம் எடுத்து அவன் மீது விழுந்து அழுதாள். அதைக் கண்ட மகாராஜா திலீபன் சக்கரவர்த்தி அவள் அருகே ஓடி வந்தார்.
உடனே ராஜா தாயே ரிஷி பத்தினி தாயே என்னை மன்னித்து விடுங்கள் .நான் மான் என்று நினைத்து தான் அம்பு எய்தேன். ஆனால் ரிஷி முனிவர் என்று தெரியாது.மேலும் அந்தணரைக் கொன்றுஅதன் மூலம் எனக்கு பிரம்மஹத்தி தோஷமும் வந்து விட்டது .தயவு செய்து மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்புக்கு உரியது தான்.ஆனால் நான் என் கணவர் இன்றி வாழ முடியாது .அதனால் தயவு செய்து என்னையும் கொன்று விடுங்கள் என்று மன்னரிடம் கோரிக்கை விடுத்தார் .அதைக் கேள்விப்பட்ட மன்னர் மேலும் துயருற்று அந்தணரைக் கொன்ற பாவம் தீராமல் நான் தவிக்கின்றேன் .மேலும் தங்களையும் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களே என்ன செய்வது என்று குருவை நினைத்து என்னை காப்பாற்றுங்கள் தாங்கள் தான் எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று தனது குலகுருவான வசிஷ்டரை அழைத்தார்.
உடனே குலகுருவான வசிஷ்டர் அங்கு தோன்றினார். அவரைக் கண்டவுடன் ரிஷிபத்தினி அவர் காலில் விழுந்து வணங்கினாள்.என்ன ஏது என்று ஒன்றும் அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசீர்வதித்தார். உடனே ரிஷிபத்தினி குருதேவரே இப்பொழுதுதான் இந்த ராஜா என் பதியை கொன்றுவிட்டார் . ஆனால் தாங்களோ தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசீர்வதிக்கிறீர்கள் இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டார். மேலும் குரு வாக்கு பொய்யும் ஆகாது என்றும் கூறினாள்.
அப்பொழுதுதான் வசிஷ்டருக்கு தன்னுடைய நிலைமை புரிந்தது. தன் மாணவனை காப்பாற்ற வேண்டும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ன செய்வது என்று யோசித்து அந்தப் பெண்ணிடம் ஒரு சிறு ஆலோசனையைக் கூறினார்.
பெண்ணே காவிரிக்கரையின் அருகில் வில்வ மரங்கள் நிறைந்த காட்டின்அருகில் ஒரு சிவலிங்கமும் அம்பாளும் இருக்கிறார்கள். அங்கே சென்று உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக் கொண்டு இந்த மன்னரின் சேவகர்களை சுமக்கச் செய்து அந்த கோயிலில் உள்ள ஜல்லிதீர்த்தத்தில் நீராடி மூன்று கை நீர் எடுத்து உன் கணவனின் மார்பில் தெளி அவன் உயிர் பெற்றுவருவான்.ஏற்கனவே ஜல்லிகை என்ற அசுர பெண்மணி இவ்வாறு செய்து தனது பதிக்கு உயிர் கொடுத்துள்ளார். அசுர குலத்துக்கே உதவி செய்த ஆண்டவன் உனக்கு செய்யமாட்டாரா ???அவசியம் செய்வார் என்று கூறினார்.
ரிஷி பத்தினிமகிழ்ந்து அவர் கூறியபடியே செய்து தீர்த்தத்தில் உள்ள நீரில் மூன்று கை எடுத்து தன் கணவன் உடல் மீது தெளித்தாள்.உடனே தூங்கி எழுந்தவர் போல அவளது கணவன் உயிர் பெற்று எழுந்தான். அப்பொழுது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினார்கள்.
அப்பொழுது ரிஷிபத்தினி அம்பாளிடம் தாயே என்னைப் போலும் ஜல்லிகை போலும் தன் கணவரின் உடல் நலம் மோசமாகி இங்கு வரும் பக்தர்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற வரத்தை தாங்கள் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள் .அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தார்.
பிறகு ரிஷி பத்தினியும் முனிவரும் திலீப மகாராஜாவைச் சந்தித்து தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி கூறினார்கள்.மன்னரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார் .அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் ஆகும்.
இந்தக் கோயிலின் விசேஷம் என்னவென்றால் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தவர்களின் வீட்டில் அகால மரணம் எதுவும் நடக்காது என்பது இன்று வரை உள்ள ஐதீகம்.
இதுவே திருத்துறைப்பூண்டி மஹாத்மியமும் ஆகும்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போமா.
மகாகவி காளிதாஸ் படத்திலும் காளிதாஸாக நடிக்கும் சிவாஜி பாடும் பாடல்.
திலீபன் தொடங்கி தயரதன் வழியாக ஸ்ரீராமன் சரிதை சொன்னேன். குலமிசை சொன்னேன் கோசலை நாடாண்ட கொற்றவர் வரிசை சொன்னேன் .நிலமிசை ரகுவம்சம் நின்றதும் நடந்ததும் நேராக எடுத்துரைத்தேன். கலைமகள் ஆணையை ஒன்றென எண்ணியே கவிதையை சரிதை சொன்னேன்.
இந்தப் பாடலை இங்கு கொடுப்பதற்குக் காரணம் தீலீபன் சக்கரவர்த்தி யார் என்று புரிந்து கொள்வதற்காக நன்றி.
Comments
Post a Comment