அட்சய திருதியை விவரம்

நம் மக்கள் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுகிறார்கள். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் பழக்கமே இல்லை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் அட்சைய திருதியை.
--------------------------------------------------------------------------------
அட்சைய திருதியை குறித்து பறப்பபட்ட பொய்யான தகவல்கள்:

அட்சைய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் வற்றா செல்வம் பெருகும். தங்கம் பெருகும் ஆதலால் எப்பாடுபட்டாவது அல்லது யாரை பாடுபடுத்தியாவது  தங்க நகை வாங்கியே தீர வேண்டும்.

அட்சைய திருதியையின் உண்மை விளக்கம்:

தீவ திலகை என்னும் கடல் தெய்வத்தால் கோவலன் மாதவியின் மகளான மணிமேகலை முன் தோன்றி “கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி தோன்றும் நாள் இது; ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்குக் கிடைக்கும்” என்று கூறி அழைத்துச் செல்கிறது. இருவரும் கோமுகிப் பொய்கையை வலஞ்செய்து வணங்க, அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.

அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.
ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
(பாத்திரம் பெற்ற காதை : 48-50)

(ஆருயிர் மருந்து = உணவு; தான் தொலைவு இல்லா = தான் குறையாத) என்றும், அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும் சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
(பாத்திரம் பெற்ற காதை :  120-121)

(கரியாக = சான்றாக; சுரவாது = பெருகாது) என்றும் அமுதசுரபியின் சிறப்பும், அது சுரப்பது அருள் உடையவர்க்கே என்பதும் இங்கு எடுத்து உரைக்கப்படுகின்றன.

அந்த அட்சைய பாத்திர உதவியுடன் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்கிறாள் மணிமேகலை. இதில் தங்கம் எங்கே வந்தது. அட்சைய திருதியை நாளன்று ஏழை எளியோர்க்கு அன்னதாம் வழங்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். நகை கடை காரர்களின் வியாபார யுக்தியும் நமது ஏமாளித்தனத்தையும் பார்தீர்களா மக்களே.......
--------------------------------------------------------------------------------
ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்ருபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் நமது வேதங்களையும் இதிகாசங்களையும் புரிந்து நடக்க வேண்டும் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்