ரமண மஹரிஷி கதை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது ரமணமகரிஷியின் அவதாரம்.வாழ்க்கை வரலாறு.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் திருச்சுழி என்பதாகும் மிகவும் எழில் சூழ்ந்த கிராமம் இது.
இங்கு 1879 டிசம்பர் 30 ல் ரமண மகரிஷி அவர்கள் அவதரித்தார்கள் .அவருடைய தந்தையார் பெயர் சுந்தரம் ஐயர் .தாயார் அழகம்மாள். இவருடைய உண்மையான பெயர் வேங்கடநாதன். இவருக்கு நாகசாமி நாகசுந்தரம் என்ற சகோதரர்களும் அலமேலு என்ற சகோதரியும் உண்டு.
இவருடைய பரம்பரையில் யாராவது ஒருவர் துறவறம் மேற்கொள்வது என்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு நியதியாகும். இவருடைய தந்தையார் இவரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். இவருடைய ஆரம்பக் கல்வி திருச்சுழி அருகில் உள்ள சேதுபதி ஆரம்பப் பள்ளியில் தொடங்கியது.
இவர் சிறு வயதாக இருந்தபோது இவரது தந்தை காலமாகிவிட்டார் .பின் இவருடைய சித்தப்பா சுப்பையர் வீட்டிற்கு மதுரை சொக்கநாதர் கோயில் தெருவில் உள்ள வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினார் .தற்போது அந்த வீடு ரமணாஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது.
ஒருமுறை இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. உடனே ஆசிரியர் அப்பாடத்தை மூன்று முறை எழுதி வரும்படி கூறினர் .அதில் நாட்டமில்லாத வேங்கடநாதன் பள்ளிக் கல்வி கற்பதில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மீக கல்வி பயில ஆர்வம் கொண்டார் .தன் அண்ணன் நாக சாமியிடம் ஸ்பெஷல் கிளாஸ் உள்ளது என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.
அண்ணனும் தம்பி பள்ளிக்குச் செல்கிறான் என்று நினைத்து சித்தியிடமிருந்து அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டு போய் பீஸ் கட்டு என்று கூறினார்.ஆனால் திரு வேங்கடநாதன் திருவண்ணாமலை செல்ல எண்ணி ரூபாய் மூன்று மட்டும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் திண்டிவனத்திற்கு ரயிலில் 2 ரூபாய் 78 காசுக்கு டிக்கெட் எடுத்தார். ரயிலில் ஒரு பெரியவர் திருவண்ணாமலை செல்ல வேண்டுமென்றால் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறியதையடுத்து விழுப்புரத்தில் இறங்கினார்.
கையிலிருந்து சில்லரையை கொண்டு மாம்பழப்பட்டு வரை பயணம் செய்தார். பிறகு திருவண்ணாமலை வரை நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்த சிவன் கோயில் ஒன்றில் தங்கினார். இவரது வாடிய முகத்தை கண்ட ஒரு நாதஸ்வர வித்துவான் இவருக்கு உண்பதற்கு பிரசாதத்தை கொடுத்தார் .இவர் காதில் இருந்த கடுக்கனை அவ்வூரில் அடகு வைத்து ரூபாய் நாலு பெற்றார் .பிறகு திருவண்ணாமலையை வந்தடைந்தார் .உடனே இறைவனை தரிசிப்பதற்கு உடைகள் தேவையில்லை என்று நினைத்து அனைத்து உடைகளையும் களைந்து கோவணத்தைக் கட்டிக் கொண்டார்.
அண்ணாமலையாரை தரிசித்து விட்டு பிரகாரத்தில் இங்குமங்கும் அலைந்து கொண்டு திருவண்ணாமலையிலேயே இருந்தார். கையில் இருந்த மீதி சில்லரையை குளத்தில் எறிந்து விட்டு இனி காசை கையால் தொடுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார்.
சதா சர்வ காலமும் அண்ணாமலையாரை எண்ணி தியானத்தில் ஆழ்ந்திருந்தார் .இவர் கண்விழித்து எழுந்தபோது உடலில் காயங்கள் இருந்தன. அதற்கு காரணம் இவர் கோவணத்துடன் இருந்ததால் இவரை பைத்தியம் என்று நினைத்து சிலர் கல்லால் தாக்கி இருப்பதை உணர்ந்தார்.
அன்றிலிருந்து கோயிலில் உள்ள பாதாள லிங்க அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். அண்ணாமலையாரை இடைவிடாது நினைத்து தியானம் செய்ததால் அவர் முகத்தில் அருள் மழை பொழிந்தது. அருள் மழை பொழியும் அவர் முகத்தைக் கண்ட ஊர் அன்பர்கள் ரமணா என்று ஆசை தீர அன்புடன் அழைத்தனர்.
உடனே அவருக்கு சேவை செய்ய பழனிசாமி எச்சம்மாள் கீரை பாட்டி என்று பலர் வந்தனர். இதற்கிடையில் தன் மகன் திருவண்ணாமலையில் இருப்பதைக் கேள்விப்பட்ட ரமணரின் தாய் அழகம்மா பிள்ளையைக் காணவந்தார். பின் மகனுடனேயே தங்கி அவனுக்கு சேவை செய்து திருவண்ணாமலையிலேயே முக்தியும் பெற்றார். தாயாரை தொடர்ந்து அவரது அண்ணன் நாகசாமியும் திருவண்ணாமலைக்கு வந்து தம்பிக்கு சேவை செய்தார்.
எதிலும் பற்றில்லாமல் துறவறத்தை மேற்கொண்டு அண்ணாமலையாரை இடைவிடாது நினைத்து ஞானியாக வாழ்ந்து திரு ரமண மகரிஷி அவர்கள் 1950 வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இறைவனுடன் கலந்தார்
இன்றும் திருவண்ணாமலையிலுள்ள ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம் காலணி கைத்தடி ஆகியவை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்றும் ரமணர் வாழ்ந்த புண்ணிய பூமியில் அவருடைய ஆன்மா (ஆவி) சுழன்று மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறது என்று நிறைய பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை ஒரு போதும் வீண் ஆவதில்லை. ரமணர் அவர்களுக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.
இதுவே ரமணரின் வரலாறு
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment