திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவில் மஹாத்மியம் ஸ்ரீ னிவாசன் மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

ஸ்ரீ னிவாச மஹாத்மியம்.

இன்று நாம் காண இருப்பது சீனிவாச மஹாத்மியம்.

கிருஷ்ணனுடைய பட்டாபிஷேகத்தின் போது வளர்ப்புத் தாய் யசோதா ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு இருந்தாள். பெற்ற தாய் தேவகி முன்னிலையில் இருந்தார். அதைப் பார்த்த க்ருஷ்ணன் அருகில் சென்றான். யசோதை பொங்கி வரும் கண்ணீருடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். உடனே க்ருஷ்ணர் தாயே என்று அழைத்தார். அதற்கு யசோதை நான் அல்ல அதோ அங்கே என்று தேவகியை கையைக் காண்பித்தாள். உடனே க்ருஷ்ணர் தாயே நீங்களும் என் அம்மா தான். இந்த பிறவியில் மட்டும் அல்ல அடுத்த பிறவியிலும் நீங்கள் தான் என் வளர்ப்புத் தாய் என்று கூறினார்.

அதைக் கேட்ட யசோதை என்ன? என்று பார்க்க ஆமாம் தாயே அடுத்து பிறவியில் நான் சீனிவாசனாகப் பிறப்பேன் தாங்கள் வகுளாம்பிகையாகப் பிறந்து என்னை வளர்ப்பீர்கள் . நமது பந்தம் விட்டுப் போகாது தாயே என்று கூறினார். அதைக் கேட்டு  யசோதை அகமகிழ்ந்தாள்.
(ஆச்சு அம்மா ஆச்சு பிள்ளை ஆச்சு பெண் வேண்டும் அல்லவா அதைப் பற்றி பார்ப்போமா) அதைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் ராமாயணத்திற்கு செல்வோமா.

வேதவதி மஹாவிஷ்ணு வையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யாகம் ஹோமம் எல்லாம் வளர்த்துக் கொண்டு தீவிர தியானத்தில் இருந்தார். அப்பொழுது ராவணன் அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அவளிடம் தவறாக நடக்க முயற்சித்தான். உடனே அவள் அவனிடம் எவ்வளவோ மன்றாடியும் கேட்காததால் அக்னியில் (நெருப்பில்) குதித்தாள். குதிக்கும் முன்பு ஹே ராவணா நான் தான் உன் அழிவிற்கு காரணமாக இருப்பேன் உன் மரணம் ஒரு பெண் காரணமாகத்தான் நிகழும் என்று கூறினாள்.

மேலும் இனி உன் வாழ்க்கையில் ஒரு பெண்ணுடைய அனுமதி இன்றி அவளைத் தொட முயற்சித்தால் உன் தலை வெடித்து சிதறும் என்று கூறினாள். (இங்கு ஒரு விஷயம். ராவணன் அண்ணன் குபேரன் அவன் மகன் நளகூபரன் அவனுடைய மனைவியிடம் ராவணன் ஒரு முறை தவறாக நடந்தான். அவள் தான் இவ்வாறு சாபம் கொடுத்தாள் என்றும் கூறுவர்). அவ்வாறு கூறிவிட்டு வேதவதி தீயில் விழுந்தாள்.

பஞ்சவடி ராமனும் சீதையும் அளவளாவிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது ராமன் சீதையிடம் நீ நெருப்பில் குதித்து பத்திரமாக இரு மேலும் உனக்குப் பதிலாக வேதவதியை அனுப்பு ராவணன் வரும் நேரமாச்சு என்று கூறினார்.(இது வால்மீகியிலோ கம்ப இராமாயணத்திலோ இல்லை துளசிதாசர் எழுதிய ராமஸரிதா மானஸா வில் உள்ளது) உடனே சீதை அக்னியை மூட்டி விழ‌ உள்ளிருந்து வேதவதி வந்து சீதையாக இருக்கிறாள் . ராவணன் வந்து வேதவதியாகிய சீதையைத் தூக்கிச் சென்றான்.

யுத்தம் முடிந்து சீதையை மீட்டு வரும் போது ராமன் சீதையை தீக்குளிக்க சொல்கிறார். அனைவரும் சீதையின் கற்பை சந்தேகித்து தான் ராமன் அவ்வாறு செய்கிறான் என்று நினைத்தார்கள். ஆனால் உண்மையில் வேதவதியை அக்னியில் குளிக்க வைத்து உண்மையான சீதையை வெளிக் கொணரவே அவ்வாறு செய்தாரே அன்றி சீதையின் கற்பில் சந்தேகப் பட்டு அவ்வாறு செய்ய வில்லை.

சீதை அக்னியில் இருந்து வந்த உடன் ராமனிடம் நாதா எனக்காக வேதவதி எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறாள் நீங்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.அதற்கு ராமன்
""" இந்த இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தனையாலும் தொடேன். ஒரு இல் ஒரு வில் ஒரு சொல் என்று கூறுகிறார். சீதை மேலும் வற்பறுத்தவே ராமன் அவளிடம் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக நான் கலியுகத்தில் சீனிவாசனாகப் பிறப்பேன் வேதவதி பத்மாவதியாகப் பிறப்பாள். அப்பிறவியில் அவளைத் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.

அவர் கூறியபடி கலியுகத்தில் வேதவதி ஆகாசராஜனுக்கு மகளாக பிறந்தாள் . பின் காட்டில் சீனிவாசனைக் கண்டு மையல் கொண்டாள் . பின் என்ன திருமணம் தான்.

ஒகே மாப்பிள்ளை சீனிவாசன் ரெடி மணப் பெண் பத்மாவதி தயார் பெண்ணின் தந்தை தாரை வார்த்து குடுக்க ஆகாசராஜன் ரெடி. வளர்ப்புத் தாயார் வகுளாம்பிகையும் ரெடி. அனைவரின் முன்னிலையில் குபேரன் செல்வத்தைக் கொட்ட திருமணம் இனிதே நடந்தேறியது.

இது தான் சீனிவாச மஹாத்மியம்.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்