துவாரகா மஹாத்மியம் ருக்மணி தேவி ஆலயம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
துவாரஹா மஹாத்மியம்:)
ருக்மணி தேவி ஆலயம். ). உருவான வரலாறு.
துவாரஹா க்ருஷ்ணன் ஆலயம். இது குஜராத்தில் அகமதாபாத்திற்கு அருகில் உள்ளது.இது தோன்றிய விதம் இதன் வரலாறு குறித்து காண்போம்.
ஜராசந்தன் 17 முறை படையெடுத்து க்ருஷ்ணனை அழிக்க முயற்சித்து ஒவ்வொரு முறையும் அவனிடம் இருந்து தப்பி ஓடி ஒளிந்து அதனால் அவர் படை வீரர்கள் பெருமளவு குறைந்து விட்டார்கள். இதை முடிவிற்கு கொண்டு வர ஒரு முடிவு செய்தார். புதிதாக ஒரு அரண்மனையை உண்டாக்க முடிவு செய்தார்.
இரவோடு இரவாக யாதவர்கள் அனைவரும் உறங்கும் போது விஸ்வகர்மா வை அழைத்து கடலுக்கு நடுவில் ஒரு பிரம்மாண்டமான மாளிகை கோபுரம் குடியிருப்புகள் என அனைத்து வசதிகளும் கொண்டதை உடனடியாக நிர்மானிக்கச் சொன்னார்.
விஸ்வகர்மாவும் க்ருஷ்ணன் கூறிய படியே சுத்த தங்கத்தினால் துவாரகை நகரை உண்டாக்கினார். இரவோடு இரவாக தூங்கும் அனைத்து யாதவர்களையும் தூக்கம் கலையாமல் புது மாளிகைக்கு மாற்றினார்.
பொழுது விடிந்தது. யாதவர்கள் தூங்கி எழுந்து தங்க மாளிகையை பார்த்து ஒருவர் மற்றொருவிடம் த்வார் கஹா த்வார் கஹா என்று கூறினார் கள். (த்வார் என்றால் தங்கம் கஹா என்றால் எங்கே) தங்கம் எங்கே தங்கம் எங்கே என்று கேட்டதால் அந்நகருக்கு த்வாரஹா என்று பெயர் வந்தது. இது தான் த்வாரஹா என்று பெயர் வரக் காரணம்.
துவாரகையில் க்ருஷ்ணன் ஆட்சி அமைத்தவுடன் ருக்மி உடன் கடும் யுத்தம் புரிந்து அவனை தோக்கடித்து ருக்மணி உடன் துவாரகை வந்து திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தார்.
புதிதாகத் திருமணம் ஆனதால் குரு ஆச்சாரியார் துர்வாசர் ஐ அழைத்து போஜனம் செய்வித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று நினைத்து இருவரும் அவர் குடிலுக்கு சென்று முறைப்படி அவருக்கு பாதபூஜை செய்து விருந்துக்கு அழைத்தனர்.
துர்வாசர் நான் வரத் தயார் ஆனால் ஒரு நிபந்தனை நாளை மதியம் போஜன வேளையில் நீங்கள் இருவரும் எனது குடிலிலிருந்து என்னைத் தேரில் ஏற்றி வைத்து அத்தேரை உங்கள் மாளிகை வரை இருவரும் இழுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டனர்.
மறுநாள் மதியம் போஜன வேளை. அவர்கள் இருவரும் கூறியபடி வந்து அவரை தேரில் ஏற்றி வைத்து அத்தேரை இழுத்துச் சென்றனர். மதிய நேரம் உச்சி வெயில் தேரை இழுத்துச் சென்றதால் ருக்மணி க்கு தாகம் எடுத்தது. உடனே க்ருஷ்ணனிடம் தனக்கு மிகவும் தாகம் எடுப்பதாக கூறினார்.
க்ருஷ்ணரும் உடனே பீஷ்மருக்கு அர்ஜீனன் செய்தது போல் அம்பைக் கொண்டு பூமியில் இருந்து நீர் வரவழைத்து ருக்மணியின் தாகம் தீர்த்தார்.(பிடித்தது சனி).
பின் அவர்கள் தேரை இழுக்க முற்பட்ட போது துர்வாசர் (ம் என்றாலே அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். மேலும் மற்ற முனிவர்களுக்கு சாபம் கொடுத்தால் தவ வலிமை குறையும் ஆனால் இவருக்கோ சாபம் குடுக்க குடுக்க தவலலிமை அதிகரிக்கும்). க்ருஷ்ணா குரு நான் உடன் இருக்கிறேன். என்னைக் கவனியாமல் உன் பத்தினிக்கு மட்டும் நீரைக் குடுத்தாய் இது பெரிய தவறு. இதன் காரணமாக இன்று முதல் துவாரகையில் நீயும் ருக்மணியும் சேர்ந்து இருக்க முடியாது என்று சாபமிடுகின்றேன் என்று கூறினார்.(சாபம் நம்பர் 1) அதன்படி அன்றிலிருந்து இன்றுவரை துவாரகையில் க்ருஷ்ணனும் ஒரு 6 அல்லது 7 கி.மி. தள்ளி ருக்மிணி தேவி ஆலயமும் உள்ளது (ரெண்டு போட்டோவையும் இணைத்துள்ளேன் ஒன்று துவாரகை மற்றது ருக்மணி தேவி ஆலயம்)
சாபம் நம்பர் 2.
ஏ தண்ணீரே குரு இருக்க என்னை மதியாமல் க்ருஷ்ணன் செய்த காரியத்திற்கு நீயும் உடந்தையாக இருந்ததால் உனது இனிப்புத் தன்மை மாறட்டும் என்று கூறினார். அன்று முதல் இன்று வரை துவாரகையில் எங்கும் ஆறு/குளம்/குட்டை/கிணறு முதலிய அனைத்தும் உப்பாகவே இருக்கும். நல்ல தண்ணீர் என்பது துவாரகையில் கிடையாது.
சாபம் நம்பர் 3.
அடுத்து பூமியைப் பார்த்து ஏ பூமாதேவி மே என்னை மதிக்காமல் க்ருஷ்ணன் செய்த காரியத்திற்கு நீயும் உடந்தையாக இருந்ததால் உன் மீது புல்/பூண்டு/காய்/கனி/பூ முதலிய எதுவும் தோன்றாது என்று கூறினார். அன்றிலிருந்து இன்றுவரை துவாரகையில் காய் கனி பூ முதலிய எதுவும் பூமியில் விளைவது இல்லை. சுருங்கச் சொன்னால் துவாரகையில் விவசாயம் என்பதே கிடையாது. அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்து தான் அனைத்தும் துவாரகைக்கு வருகிறது.
க்ருஷ்ணன் துவாரகையில் ருக்மணியைத தான் பிரிந்து இருந்தானே தவிர மற்றபடி சத்யபாமா ஜாம்பவதி முதலியவருடன் இருந்தான்.
ஆச்சு பாரதயுத்தம் முடிந்து காந்தாரியின் சாபப்படி யாதவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ள க்ருஷ்ணன் அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்து அர்ஜுனா துவாரகை யைக் காப்பாற்று என்று கூற அவனாலும் முடியாமல் போக துவாரகை கடலில் மூழ்கியது.
அர்ஜுனன் பேரன்பரீட்ஷீத் முனிவரின் சாபத்திற்கு ஆளாகி தஷ்கன் என்ற பாம்பினால் கடி பட்டு இறக்க அவன் மகன் ஜனமேஜயன் ஆட்சி புரிந்தான். அது போல க்ருஷ்ணனின் மகன் அனிருத்திற்குப் பிறகு ப்ரத்யம்னன் ஆட்சி செய்து வந்தான்.
ஒரு நாள் ப்ரத்யம்னனுக்கு கனவு ஒன்று தோன்றியது. அதைச் செயலாக்க முனைந்தான் அதன் படி மறுநாள் காலை விஸ்வகர்மா வை அழைத்து தனது தாத்தா உருவாக்கியது போல் துவாரகை யை மீண்டும் உருவாக்கு மாறு கூறினான். ஆனால் விஸ்வகர்மா தாத்தா உருவாக்கியது போல் தங்கத்தினால் தற்காலத்தில் நிர்மாணிக்க முடியாது. காரணம் வரும் கலியுகத்தில் தங்கத்தினால் நிர்மானித்தால் மக்கள் அடித்துக் கொள்வார்கள் கோவிலை யாரும் வழி பட மாட்டார்கள் தங்கத்தை சுரண்டுவதிலேயே கவனம் செலுத்துவார்கள் ஆதலால் என்னால் தங்கத்தினால் உருவாக்க முடியாது. வேண்டும் என்றால் கற்களால் உருவாக்குகிறேன் என்று கூறி ஒரே நாளில் தற்போது உள்ள துவாரகை யை நிர்மானித்தார் ப்ரத்யம்னனும் மகிழ்ந்தான்.
இதுவே தற்போது உள்ள துவாரகை உருவான வரலாறு.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
. .
Comments
Post a Comment