கர்ணன் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது குந்தி வரலாறு கர்ணன் வரலாறு கர்ணன் தோன்றிய விதம் முதலியன.
சூரசேனன் என்ற மன்னன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு பிருகை என்ற ஒரு மகள் இருந்தாள். சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அவன் மிகுந்த சூரிய பக்தன்.
ஒரு முறை அவன் சூரியனை வேண்டி மிகப்பெரிய யாகம் ஒன்றை செய்தான்.அதை கவனிப்பதற்காக தனது மாமன் மகளை அனுப்பும்படி கூறினார். அவளும் மகா சூரிய பக்தை . உடனே சூரசேனன் குந்தி போஜனுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தினால் அவர் கேட்டுக் கொண்டபடி பிருகையை அனுப்பினார்.அவள் செய்யும் பணிகளை கண்ட குந்திபோஜன் இவள் பணிகளால் மிகவும் கவரப்பட்டேன். இவளை எனக்கு தத்து கொடுத்து விடு என்று கேட்டான் .சூரசேனனுக்கு மிகவும் வருத்தம் இருந்த போதிலும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் பிருகையை அவனுக்குத் த்த்துகொடுத்தான். குந்திபோஜன் மகள் என்பதால் அன்றிலிருந்து அவள் குந்தி என்று அழைக்கப்பட்டாள்.
ஒருமுறை துர்வாச முனிவர் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்தார். அதற்கு குந்தியை அனுப்பும்படி கோரினார் .குந்தியும் அவர் மனம் நோகாமல் அவருக்கு தேவையான பணிவிடைகள் அனைத்தையும் செய்தாள். அவள் பணிவிடைகளை கண்ட துர்வாசர் ஒருமுறை கூட அவளிடம் கோபிக்கவில்லை .
அதேநேரம் அவள் முகத்தைக் கண்ட துர்வாசர் நடக்கும் நிகழ்ச்சியை ஞானத்தால் உணர்ந்து இவளுடைய கணவனால் இவளுக்கு குழந்தை உண்டாகாது. இவளுடைய கணவனுடைய ஜாதகப்படி அவனுக்கு ஒரு சாபம் உண்டாகும். ஆதலால் நாம் எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்பதை அறிந்து சில மந்திரங்களை போதிக்க எண்ணினார். அவளும் சிறந்த சூரிய பக்தை . மேலும் அந்த மந்திரங்களை அவளுக்கு உச்சரித்து மகளே இந்த மந்திரங்கள் மூலம் நீ எந்த தேவனை அழைத்தாலும் அவன் உன் முன்னால் தோன்றி உனக்கு ஒரு குழந்தையை தருவான் என்று கூறினார்.
குந்தி மிகுந்த சூரிய பக்தை ஆனதால் அவள் அந்த மந்திரத்தை சோதிக்க எண்ணி சூரிய பகவானை மனதால் நினைத்து அந்த மந்திரத்தை உச்சரித்தாள்.உடனே கோடி சூரிய பிரகாசத்துடன் சூரிய பகவான் அவள் முன் தோன்றினார். உடனே பயந்து தான் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் தன்னை மன்னித்து விடும் படி வேண்டினாள். ஆனால் சூரிய பகவான் இந்த மந்திரத்தின் பலனைக் கொடுக்காமல் போகக்கூடாது என்பதால் நான் உனக்கு ஒரு குழந்தையை கொடுப்பேன் .அதே சமயம் குழந்தை பெற்றவுடன் நீ மீண்டும் கன்னியாவாய் என்று கூறி ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு செனறார்.
அவ்வாறு அவள் பெற்ற குழந்தையே கர்ணன் ஆகும். காதில் கவச குண்டலத்துடன் பிறந்ததால் கர்ணன் என்று அழைக்கப்பட்டான். கர்ணம் என்றால் காது.
இதுவே குந்தி/கர்ணனின் வரலாறு ஆகும்.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment