நாயின் பெருமை
பெரிய செல்வந்தர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண் நாய்க்குட்டியை இறக்குமதி செய்து வளர்த்து வந்தார். அந்த நாய் பெரிதாக வளர்ந்ததும் அது குட்டி போடவில்லையே என்ற கவலை வந்துவிட்டது அவருக்கு. அந்த நாயை ஒரு துறவியிடம் அழைத்துச் சென்றார்.
துறவி, தனக்குத் தெரிந்த மந்திரங்களையெல்லாம் முணுமுணுத்துவிட்டு, ஒரு பெரிய அண்டாவில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி, மறுமுனையை அந்த நாயின் கழுத்தில் கட்டிவிட்டு அண்டாவை ஒரு மூடி போட்டு மூடிவிட்டார். பிறகு அவரிடம், நாளை காலை இதே நேரத்துக்கு வாருங்கள், உங்கள் கவலை தீர்ந்துவிடும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மறுநாள் காலை அச்செல்வந்தர் துறவியைக் காணச் சென்றார். துறவி அவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்து நெற்றியில் பூசச்சொன்னார். பிறகு அந்த நாய் அண்டாவின் மேல் மந்திரங்கள் சொல்லி விபூதியைத் தெளித்தார். பிறகு அண்டாவைத் திறந்து பார்க்கச் சொன்னார். ஆஹா! என்ன ஆச்சரியம்!
அண்டாவிற்குள் நிறைய நாய்க்குட்டிகள் இருப்பதைக் கண்டு செல்வந்தர் மகிழ்ச்சியுடன் துறவியிடம் கேட்டார் எப்படி இது சாத்தியம் என்று.
உடனே சிரித்துக்கொண்டே துறவி சொன்னார் . . .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Do you know? The 'Empty Vessel Make More நாய்ஸ்”.
Comments
Post a Comment