என் வாழ்க்கையில் நான் சந்தித்த சவால்கள்

#என்_வாழ்க்கையில்_நான்_சந்தித்த_சவால்

1987 ஆம் வருடம் ஏர்போர்ட்ஸ் விட்டு வெளியில் வந்தவுடன் வேலை தேடி அலைந்தேன். என்னுடைய குவாலிபிகேஷன்  M.com B.G.L. PGDPM  இத்தனை பட்டமும் நான் விமானப் படையில் பணி செய்து கொண்டே படித்து வாங்கியது.இது நான் சந்தித்த முதல் சவால் அமோக வெற்றி. நான் கோவையில் கிட்டத்தட்ட ஒரு முப்பது கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டு இருந்தேன் .கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால்; கணபதியில் உள்ள டெக்ஸ்டூல்; ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட்; எல்என்டி ; சக்தி சுகர்ஸ் ; முதற்கொண்டு போட்டிருந்தேன். அதில் ஒரு 25 கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

என்ன போஸ்ட் என்ன வேலை  என்று கேட்கிறீர்களா. நான்  அனுப்பிய பயோடேட்டாவில் என்னுடைய குவாலிபிகேஷன் M.com B.G.L  PGDPM என்று கிளியராக கூறியிருக்கிறேன் .ஆனால் யாரும் அதைப் படிக்கவில்லை .ex.service man செக்யூரிட்டி கார்டு போஸ்டுக்கு வா என்று தான் அனைத்து  கம்பெனியிலும் இருந்து வந்து இருந்தது. யாரை நொந்து கொள்ள .இதைத்தவிர மனிதர்கள்  இன்னும் ex.service man  என்றால் செக்யூரிட்டிக்கு தான் லாயக்கு என்று ஒரு நினைப்பிலேயே இருக்கிறார்கள் என்று மனது மிகவும் வருந்தியது சங்கடப்பட்டது .

இதை ஒரு சவாலாக நான் எடுத்துக்கொண்டேன் . விமானப் படையில் சந்தித்த இன்னல்களை எல்லாம் பார்க்கும் போது வெளியில் சவால் என்பது நமக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல ஆகிவிட்டது.காரணம் அது மலை இது மடு.

இந்த சமூகத்தில் நமது படிப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல உத்யோகம் அமைவதற்கு நான் பாடுபடுவேன் என்று அன்று எனது மனைவியிடம் நான் உத்தரவாதம் கொடுத்தேன் .

அன்றிலிருந்துநான் competition exam அனைத்தும் எழுத ஆரம்பித்தேன் . T T E post பார் ரயில்வேஸ்; bank exam; insurance exam ;avadi  heavy vehicle factory அனைத்து exams களையும் எழுதினேன். அனைத்திலும் நான் செலக்ட் ஆகி விட்டேன்.அந்தக் காலத்தில் during 1986_87 காலங்களில் பரீட்சை எழுதினால் பேங்க்/ரயில்வே/இன்சூரன்ஸ் எல்லாவற்றிலும் ஒன்றரை வருட காலம் காத்திருக்க வேண்டும்

.88 டிசம்பரில் எனக்கு முதன் முதலாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது .அதில் நான் சேர்ந்துவிட்டேன். உடனடியாக பொள்ளாச்சியில் .

அதில் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் பெங்களூர் ரயில்வே TTE திருவண்ணாமலையில் ரயில்வேயில் TTE சேலம் கோட்டத்தில் TTE  appointment order வந்தது .மேலும் indian bank  heavy vehicles factory ஆவடி  முதலிய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது .அதை எனக்கு அருகில் உள்ள நண்பரிடம் காண்பிக்கவும் அவர் இன்ஷூரன்ஸ் சிறந்த வேலை நீங்கள் மாற வேண்டாம் இங்கேயே இருங்கள் என்று கூறியதால் அன்று முதல் அதிலேயே இருந்தேன்.

. இங்கு மனவருத்தத்தோடு நான் ஒரு சிறிய விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் 1986 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எம்ஜிஆர் அரசாட்சியில் வேலைக்கான interview வந்தது. என்ன போஸ்ட் என்றால் straight assistant director of income tax ;DSP  ; Straight asst. Forest officer; அதுபோன்ற Post. அதற்கு  தேர்வுஎழுதுவதற்கு  exam Hall ல் நுழைந்தபோது நுழையும் முன் வாசலில் சொல்லவே வெட்கக்கேடாக இருக்கிறது ஒரு ஏஜெண்ட் என்னை  காண்டாக்ட் செய்கிறார் ஒரு மந்திரியின் பெயரை குறிப்பிட்டு அவர் பெயரை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .அவர் எம்ஜிஆர் மந்திரி சபையில் இருந்து பிறகு ஜெயலலிதாமந்திரி சபைக்கு மாறி பிறகு விஜயகாந்த் கட்சியில் இரண்டாவது நபராகி பிறகு இப்பொழுது விஜய் கட்சியிலும் இல்லாமல் அதிமுக  விலோ எங்கிருக்கிறார் என்று தெரியாது. காலையில் நாம் டிபனுக்கு சாப்பிடுவோமே அந்த ஊரின் பெயரைக் கொண்டவர் .அவர் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வீட்டிற்கு வரும் என்று அந்த ஏஜென்ட் சொன்னார். நான் சர்வீசில் இருந்து வரப் போகிற நேரம் இரண்டு லட்சம் என்பது 86 87ல் பெரிய தொகை என்னிடம் அவ்வளவு இல்லை. ஆதலால் நான் அந்த போஸ்டுக்கு போகவில்லை. செலக்ட்டாகவில்லை தேர்வாகவில்லை .

இது மனதில் மிகவும் வலியை உண்டாக்கிய ஒரு விஷயம். இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் நான் இந்த competition exam ல் போட்டியிட்டு தேர்வாகி நல்ல ஒரு உத்தியோகத்தில் செலக்ட் ஆகி இன்சூரன்ஸில் சேர்ந்து என் சவாலை நல்ல முறையில் வெற்றி கொண்டேன் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்