மிளகு பிள்ளையார் மேலக் கோட்டை ராமானுஜர் சன்னதி
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகர் பற்றி பார்ப்போம்.
விநாயகர்...மிளகு பிள்ளையார்.
நாம் அனைவரும் அறிந்த விநாயகர் பெயர்கள்.
கணபதி விநாயகர் தொந்தி கணபதி விக்னேஸ்வர் சக்தி விநாயகர் சிவசக்தி விநாயகர் ஹேரம்ப கணபதி ஈச்சனாரி விநாயகர் புலியகுள விநாயகர் மணக்குள விநாயகர் பிள்ளையார் பட்டி விநாயகர் வெள்ளை விநாயகர் முதலியன இன்னும் பல.
ஆனால் யாராவது மிளகு பிள்ளையார் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.
அவரைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.
(கீழே ஃபோட்டோ குடுத்து உள்ளேன் பார்க்கவும்)
மிளகு பிள்ளையார். அமைந்த இடம்.
கர்நாடக மாநிலத்தில் மேலக்கோட்டையில் ராமானுஜர் சன்னதிக்கு அருகில் ஒரு தூண் ஒன்று உள்ளது. அந்த தூணில் தான் இந்த பிள்ளையார் இருக்கிறார்.
சாதாரணமாக நாம் கோயிலுக்கு சென்றால் கோயிலை சுற்றி விட்டு ஸ்வாமியை பார்த்து தீபாராதனை கண்டு மகிழ்வுடன் வருவோம்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை மேற்கூறிய அனைத்தும் முடித்து பின் அந்த கோயில் அமைப்பு அதன் வரலாறு அதன் ஆகம சாஸ்திரம் யாரால் ஏன் எப்பொழுது தோன்றியது போன்ற தல வரலாறு எல்லாம் அறிந்த பின்னர் தான் அந்த கோயிலைப் பற்றி முழுமையாக தெரிந்த பிறகு தான் வெளியே வருவேன்.
இந்த தகவல் திரட்டுவது தொடர்பாக நான் எங்கள் குரூப் உடன் சோம்நாத் கோயில் சென்ற போது தகவலுக்காக பல இடங்களில் பலரையும் சந்தித்து தகவல் சேகரித்துக் கொண்டு இருந்தேன்.என் குரூப்பும் மனைவியும் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்கள். கோவிலில் போன் உபயோகப் படுத்த முடியாது . பின் அவர்களை நான் தேட அவர்கள் என்னைத் தேட (நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன் அது வேறு விஷயம். அதாவது இத்தனை இன்னலுக்கிடையில் தான் ஒரு கோயிலின் மஹாத்மியம் பற்றி அறிந்து வெளியிடுகிறேன்). பிறகு நான்கு மணி நேரம் கழித்து கண்டு பிடித்தோம்.இதை கூறுவதற்கு காரணம் எத்தனை சிரமம் இருந்தாலும் அதனைப் பற்றி அறியாமல் வரக் கூடாது என்ற வைராக்கியம்.
மேலக்கோட்டை. மேலக்கோட்டைக்குச் செல்வோர் ராமானுஜர் ஐத் தரிசித்த பிறகு அனைவரும் வெளியே வந்து விடுவர். நாங்கள் சென்றிருந்த போது சன்னதி அடைக்கப்பட்டிருந்தது. அர்ச்சகருக்கு ஆள் அனுப்பி விட்டு பின் அவர் வரும் வரை கோயிலை சல்லடை போட்டு தேடியதின் விளைவாகத் தான் இந்த பிள்ளையார் கண்ணில் தெரிந்தார்.
மிளகு பிள்ளையார். பெயர்க் காரணம்.
அர்ச்சகர் வந்து தரிசனம் முடிந்தவுடன் அவரிடம் இந்த பிள்ளையார் பற்றி கேட்டவுடன் அவர் கூறியதாவது.
நீங்கள் மிகவும் அதிர்ஷடக்காரர் காரணம் இந்த பிள்ளையார் சாதாரணமாக யார் கண்ணிலும் பட மாட்டார். மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் இந்தப் பிள்ளையார். இந்த பிள்ளையார் க்கு மிளகு பிள்ளையார் என்று பெயர் காரணம் நம் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் மிளகு (குறுமிளகு) அதில் ஒரு மூன்று மிளகைக் கையில் எடுத்து நேராக நிற்க வைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அந்த அளவு உயரம் தான் இந்த பிள்ளையார் இருப்பார்.
அதனால் தான் இந்த பிள்ளையாருக்கு மிளகு பிள்ளையார் என்று பெயர் வந்தது. ஒரு பழமொழி உண்டு மூர்த்தி சிறுசானலும் கீர்த்தி பெரிது என்று சொல்வோமே அது இந்த பிள்ளையாருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். மிகவும் அற்புதமான சக்தி வாய்ந்த பிள்ளையார் என்று கூறினார்.
இதுவே மிளகு பிள்ளையார் கதை. ஆதலால் இனிமேல் மேலக்கோட்டை செல்பவர்கள் தவறாமல் ராமானுஜர் சன்னதி அருகில் உள்ள இந்த மிளகு பிள்ளையாரைத் தவறாமல் தரிசிக்கவும்
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment