கண்ணதாசன் பாடல்கள்

கவியரசு கண்ணதாசனின் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு”, பாடல் மெட்டில் படிக்கவும் அல்லது கதவை மூடிக்கொண்டு பாடவும். ஹாஹாஹா!

ஃபேஸ் புக்குலே என் குடியிருப்பு
ஃபேக் ஐடி என் துணையிருப்பு
லைக் கமெண்ட்ஸே என் எதிர்பார்ப்பு
நான் பெறுவதெல்லாம் வெறும் பல்பு!
ஃபேஸ் புக்குலே என் குடியிருப்பு

பலரது பதிவை சுட்டுடுவேன்
பார்த்த பெயரெலாம் டேக்செய்வேன்
பலரது பதிவை சுட்டுடுவேன்
பார்த்த பெயரெலாம் டேக்செய்வேன்
மார்னிங்க் சொல்வதில் டாப்புடக்கர் தினம்
படம்மாற்றுவதில் நான் அப்பா டக்கர்!
ஃபேஸ் புக்குலே என் குடியிருப்பு
ஃபேக் ஐடி என் துணையிருப்பு
லைக் கமெண்ட்ஸே என் எதிர்பார்ப்பு
நான் பெறுவதெல்லாம் வெறும் பல்பு!
ஃபேஸ் புக்குலே என் குடியிருப்பு

ஃபேஸ்புக் டுவிட்டரை ஆட்டி வைப்பேன் பெரும் 
காண்டுவந்தால் அவனை ப்ளாக்கி வைப்பேன் - இங்கு
ஃபேஸ்புக் டுவிட்டரை ஆட்டி வைப்பேன் பெரும் 
காண்டுவந்தால் அவனை ப்ளாக்கி வைப்பேன் - இங்கு
நிரந்தரமாகவே இருந்திடுவேன் – நான்
இறந்துவிட்டாலும் தினம் வருவேன்!
ஃபேஸ் புக்குலே என் குடியிருப்பு

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்