கற்றது கை மண் அளவு கல்லாதது மலையளவு
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.
இது என்ன பழமொழி எவ்வாறு வந்தது சற்று விரிவாக பார்ப்போமா.
ஒருமுறை ரிஷி பரத்வாஜர் அவர்கள் மேரு மலையின் அடியில் அமர்ந்து வேதங்கள் அனைத்தையும் கற்றுக் கொள்ள நினைத்து அனைத்து வேதங்களையும் கற்க ஆரம்பித்தார். அவ்வாறு வேதங்கள் அனைத்தையும் கற்று கற்று கற்று வருடங்கள் பல ஓடிவிட்டன. நூறு வருடங்களை நெருங்கிவிட்டது.
உடனே அவர் ஆஹா நூறு வருடங்கள் ஆகிவிட்டது. ஒருவேளை நமது ஆயுளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதோ என்னவோ?? எதற்கும் நாம் இந்திரனை நோக்கி பிரார்த்தனை செய்து சற்று ஆயுளை கூட்டி கேட்போம் என்று நினைத்து இந்திரனை நோக்கி தவம் செய்தார் .உடனே இந்திரன் அவர் முன் காட்சி தந்து என்ன வேண்டும் என்று கேட்டார். நான் வேதங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னும் நூறாண்டு காலம் ஆயுள் வேண்டும் என்று கூறினார் .ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)என்று கூறி இந்திரன் அங்கிருந்து சென்றான்.
மீண்டும் வேதங்களை கற்க ஆரம்பித்தார். வருடங்கள் பல ஓடிவிட்டன. 100 வருடத்தின் இறுதியை எட்டினார். மீண்டும் இந்திரனை குறித்து தியானம் செய்தார் .இந்திரன் உடனே தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க மேலும் ஒரு நூறு வருடம் ஆயுள் வேண்டும் நான் வேதங்களை கற்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் இந்திரன் ததாஸ்து என்று கூறி அங்கிருந்து சென்றான்.
மீண்டும் பரத்வாஜர் வேதங்களை கற்க ஆரம்பித்தார். வருடங்கள் ஓடின .100 வருடம் முடிவு பெறுவதற்கு முன்பே இந்திரன் அவருக்கு காட்சி தந்து என்ன என்று வினவினார் .நான் வேதங்களை இன்னும் முழுமையாக கற்கவில்லை என்று கூற தாங்கள் இதுவரை 300 வருட காலம் ஆயிற்று எவ்வளவு வேதம் கற்றிருக்கிறீர்கள் என்று தங்களுக்குத் தெரியுமா என்று இந்திரன் வினவினான் .தெரியவில்லை என்று பரத்வாஜர் கூற கேட்டவுடன் கீழே குனிந்து ஒரு கை பிடி மண் எடுத்து அவரிடம் கொடுத்தான். சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று மேருமலையை காட்டினார். அவரும் மலையை திரும்பிப் பார்த்தார்.
உடனே இந்திரன் நீங்கள் இதுவரை கற்ற வேதத்தின் அளவு ஒரு கைப்பிடி தான். இன்னும் கற்க வேண்டியது மலையளவு .ஆதலால் தாங்கள் கற்றது கையளவு கல்லாதது மலையளவு என்று கூறி வேதத்தை யாராலும் முழுமையாக கற்க முடியாது .தேவை இல்லாமல் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தாங்கள் கற்றாலும் வேதத்தை முழுமையாக கற்க முடியாது என்று கூற தன் தவறை உணர்ந்து புரிந்து கொண்டேன். நான் கற்றது கைமண் அளவுதான் கல்லாதது மலையளவு என்று கூறி விடைபெற்றார்.
அன்றிலிருந்து தான் இந்த பழமொழி தோன்றியது கற்றது கையளவு கல்லாதது மலையளவு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment